வயலை
சங்க காலத்தில் வயலைக்கொடி வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்பட்டது. அதன் கொடி சிவப்பாக இருக்கும். அக்கால மகளிர் தனக்குத் தழையாடை செய்துகொள்ள இதனைப் பயன்படுத்தினர். (இக்காலத்தில் இதனைப் பசலைக்கொடி என்னும் பெயரால் வழங்கிவருகின்றனர். அத்துடன் சமைத்துண்ணும் கீரையாகப் பயன்படுத்துகின்றனர்.) வயலைக்கொடி பற்றிச் சங்க இலக்கியம் தரும் செய்திகள்சங்க காலத்தில் வயலைக்கொடி வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்பட்டது. அதன் கொடி சிவப்பாக இருக்கும். அக்கால மகளிர் தனக்குத் தழையாடை செய்துகொள்ள இதனைப் பயன்படுத்தினர். வீட்டு-மரத்தில் படர்ந்திருந்த வயலையையும், ஆம்பல் பூவையும் சேர்த்துத் தொடுத்து அவள் தனக்குத் தழையாடை தைத்துக்கொண்டாள்.[1] வயலைச் செங்கொடிப் பிணையல் தைத்துச் சங்க கால மகளிர் உடுத்தித் தம்மை அழகுபடுத்திக்கொண்டனர்.[2] வீட்டில் வளர்ந்திருந்த வயலைக் கொடியைக் கன்று போட்டிருந்த பசு தின்றது என்று அதனை ஓட்ட மனமில்லாமல், விளையாடிக்கொண்டிருந்த பந்தை நிலத்திலே எறிந்துவிட்டு, தனக்குத் தாய்மார் கொடுத்த பாலையும் வாங்கி உண்ணாமல் ஒரு பெண் தன் வயிற்றில் அடித்துக்கொண்டாள் [3] வயலைக்குப் பந்தல் போட்டிருந்தனர் [4] வயலைக்கொடி வேலியிலும் படர்ந்திருக்கும்.[5] வீட்டுத் தோட்டத்தில் நட்டு வளர்த்த வயலைக்கொடி அங்கு வளர்ந்திருந்த பேக்கரும்பைச் சுற்றிக்கொண்டு படர்ந்ததாம்.[6] வயலைச் செங்கொடியை நண்டு அறுக்கும் [7] வயலை வளர்த்த அவள் தன் காதலனுடன் ஓடிப்போய்விட்டதால் வயலை வாடிவிட்டது.[8] வளர்த்த வயலைக்கொடி வாடினும் பரவாயில்லை. அவள் தன் காதலனுடன் மகிழ்ந்து வாழட்டும் என்கிறாள் அவளது தோழி [9] வயலையானது தன்னைத் தழையாடைக்குப் பறிக்கவில்லையே என வாடிக் கிடந்ததாம் [10] வாடிய வயலைக்கொடி போல் பார்ப்பான் ஒருவனின் மருங்குல் (அடிவயிறு) இருந்ததாம் [11] உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia