வள விபரிப்புச் சட்டக கருத்தேற்ற முறைமைவள விபரிப்புச் சட்டக கருத்தேற்ற முறைமை (RDF Schema - RDFS - ஆர்.டி.எப்.எசு) என்பது ஆர்.டி.எப் வளங்களை ஒழுங்கமைக்கப் பயன்படும் ஒரு கருத்தேற்ற முறைமை (schema) ஆகும். இது குறிப்பான ஆர்.டி.எப் வகுப்புக்களையும் பண்புகளையும் விபரிக்கின்றது.[1] இவற்றைப் பயன்படுத்தி இதர மெய்ப்பொருள் மூலங்களை (Ontologies) விபரிக்கமுடியும். முதன்மை ஆர்.டி.எப்.எசு கட்டுகள்ஆர்.டி.எப்.எசு கட்டுக்கள் என்பன அடிப்படை ஆர்.டி.எப் சொற்கோவையின் மீது உருவாக்கப்பட்ட வகுப்புகள், தொடர்புடைய பண்புகள் மற்றும் பயன்கூறு பண்புகள் ஆகியவற்றைக் குறிக்கின்றன. வகுப்புகள் (Classes)
ஆர்.டி.எப் வகுப்பு பின்வருமாறு வரையறை செய்யப்படுகிறது: C rdf:type rdfs:Class. இதிலே rdf:type rdf பெயர்வெளியில் முன்வரையறு செய்யப்பட்ட பண்பு. rdfs:Class rdfs பெயர்வெளியில் முன்வரையறை செய்யப்பட்ட வகுப்பு. எ.கா ஆள் rdf:type rdfs:Class. இந்த வகுப்பின் ஒரு எடுத்துக்காட்டுப் instance கரிகாலன் rdf:type ஆள். ஆர்.டி.எப்.எசு விபரிக்கும் பிற வகுப்புகள்:
பகுப்புகள் (Properties)பயன்கூறு பண்புகள் (Utility properties)மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia