வாட்மீட்டர்![]() பயன்படுத்தப்படும் மின்திறனை அளவிடப் பயன்படும் கருவி வாட்மீட்டர் அல்லது வாட்மானி (wattmeter) ஆகும். அதாவது, மின்சுற்று ஒன்றில் ஓரலகு காலத்தில் பயன்படுத்தப்படும் மின் திறன் அல்லது மின்னிலையாற்றலின் சராசரி பாய்வு வீதத்தை வாட் அலகுகளில் அளவிடக் கூடிய கருவியாகும். இக்கருவியில், நிலையாகப் பொருத்தப்பட்ட, வரிச் சுருள் போன்ற ஒரு சோடி கம்பிச் சுருள்களுக்கிடையில் அமைக்கப்பட்ட இயங்கு சுருள் உள்ளது. இயங்கு சுருளுடன் குறிமுள் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். குறிமுள்ளின் முனையானது வட்ட அளவுகோலிற்கு முன்பாக இயங்கக் கூடியதாக இருக்கும். கம்பிச் சுருள்களில் மின்னோட்டம் பாயும்போது, குறிமுள்ளின் விலக்கமானது மின் திறனுக்கு நோ்த்தகவில் இருக்கும். மின்காந்த வாட்மானிகள், பயன்பாட்டு அதிர்வெண்ணையும் ஒலி அதிவெண் ஆற்றலையும் அளக்க உதவுகிறது. வானொலி அதிர்வெண்களை வேறுவகையான மானிகள் அளக்கத் தேவைப்படுகின்றன. உசாத்துணை
மேலதிக வாசிப்புக்கு
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia