வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில்

‌ வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில்
‌ வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில் is located in தமிழ்நாடு
‌ வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில்
‌ வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில்
ஆள்கூறுகள்:12°40′50″N 78°35′48″E / 12.680561°N 78.596755°E / 12.680561; 78.596755
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பத்தூர்
அமைவிடம்:வாணியம்பாடி
சட்டமன்றத் தொகுதி:வாணியம்பாடி
மக்களவைத் தொகுதி:வேலூர்
ஏற்றம்:375.31 m (1,231 அடி)
கோயில் தகவல்
மூலவர்:அதிதீசுவரர
தாயார்:பிருஹன்நாயகி என்கிற பெரியநாயகி
குளம்:சிவதீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி, பிரம்மோற்சவம், சரசுவதி பூசை
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று
வரலாறு
அமைத்தவர்:பல்லவ மன்னர்கள்

அதிதீசுவரர் கோயில் (Athitheeswarar Temple) என்பது தமிழ்நாடின், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] இக்கோயிலின் மூலவர் அதிதீசுவரர் மற்றும் தாயார் பெரியநாயகி ஆவர். தலவிருட்சம் அகண்ட வில்வமரம் ஆகும். தீர்த்தம் சிவ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 375.31 மீட்டர்கள் (1,231.3 அடி) உயரத்தில், (12°40′50″N 78°35′48″E / 12.680561°N 78.596755°E / 12.680561; 78.596755) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி பகுதியில் அதிதீசுவரர் கோயில் அமையப் பெற்றுள்ளது.[2][3]

வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில் is located in தமிழ்நாடு
வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில்
வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில்
வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில் (தமிழ்நாடு)

தொன்மக் கதை

பிரம்மாவுக்கும் அவர் மனைவி சரசுவதிக்கும் ஒரு சமயம் பேச்சில் விபரீதம் ஏற்பட்டு, சரசுவதி தன்னை ஏளனம் செய்ததாகத் தவறாகக் கருதிய பிரம்மா அவளைச் சபித்தார். அதனால் தன் நாக்கு வன்மையையும் பேச்சு வலிமையையும் இழந்து ஊமையான சரசுவதி, பூலோகத்தில் திருமறைக்காடு (தற்போதைய வேதாரண்யம்) பகுதிக்கு வந்து, தன் ஊமை நிலை மாறிட, அங்குள்ள கோயிலில் வீற்றிருந்த அம்பாளிடம் வீணை வாசித்துக் காட்ட, அந்த அம்பாளின் இனிமையான குரல் தன் வீணை நாதத்தை விட அற்புதமாக இருந்ததால் வாணி வீணை மீட்டுவதை நிறுத்தி அவ்விடத்தை விட்டு அகன்று, சிருங்கேரி சென்று விட்டாள்.

தன் சாபத்தால் சரசுவதி ஊமை நிலை அடைந்ததை எண்ணி வருந்திய பிரம்மா, பூலோகத்தில் அவள் இருக்குமிடத்தை அறிந்து, சிருங்கேரி வந்து அவளிடம் மனம் வருந்தினார். பின்னர் இருவரும் தற்போதைய வாணியம்பாடி பகுதிக்கு வந்து, அங்குள்ள சிவ தீர்த்தத்தில் நீராடி, இத்தலத்தில் வீற்றிருக்கும் அதிதீசுவரரையும் பிருஹன்நாயகி தாயாரையும் வணங்கி, பூசைகள் செய்து, தங்கள் குறைகள் போக்கிட வேண்டினர்.

அவற்றால் அகமகிழ்ந்த சிவன் அவர்கள் முன் தோன்றி, அவர்கள் குறைகளைக் களைந்து, சரசுவதியான வாணியிடம் பாடல் ஒன்று இசைக்கச் சொல்ல, வாணியும் பாட இறைவன் அருள்புரிந்தார். ஆகவே, இவ்விடம் 'வாணிப்பாடி' என்று அழைக்கப்பட்டு, பின்னர் 'வாணியம்மைபாடி' என்றாகி, அதன் பிறகு பெயர் மருவி, 'வாணியம்பாடி' என்றாயிற்று.[4]

கோயில் அமைப்பு

இத்தலத்தில் ஈசன் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி உள்ளார். பெரியநாகி அம்மன் தெற்கு நோக்கி உள்ளார். இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி, மான், மழு ஏந்தி யோக பட்டையுடன் சின்முத்திரை கொண்டு வீற்றிருப்பது சிறப்பாகும்.

இக்கோயிலில், ஐந்து நிலைகள் கொண்ட இராஜ கோபுரம் கிழக்குத் திசையிலும், மூன்று நிலைகள் கொண்ட கோபுரம் மேற்குத் திசையிலும் கட்டப்பட்டுள்ளன.[5]

இதர தெய்வங்கள்

சங்கரநாராயணர், தட்சிணாமூர்த்தி, சரசுவதி, சப்தரிஷி மாதாக்கள் (பிராமி, மகேசுவரி, கௌமாரி, சாமுண்டி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி), துவார கணபதி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஐயப்பன் மற்றும் காலபைரவர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.

மேற்கோள்கள்

  1. Tamil Nadu (India) Legislature Legislative Assembly (1980). Madras Legislative Assembly debates; official report. Legislative Assembly.
  2. தினத்தந்தி (2022-09-27). "கல்விக்கு அதிபதியான கலைமகள் வழிபாடு (4-10-2022 சரஸ்வதி பூஜை)". www.dailythanthi.com. Retrieved 2024-10-02.
  3. R.V.Pathy (2021-06-08). Sirappana Vazhuvu Tharum Siva Thalangal. Pustaka Digital Media.
  4. மாலை மலர் (2016-10-11). "புனர்பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய வாணியம்பாடி கோவில்". www.maalaimalar.com. Retrieved 2024-10-02.
  5. "Athitheeswarar Temple : Athitheeswarar Athitheeswarar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2024-10-02.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya