வானூர்திகளின் முதலாவது வான்வழிப் பயண நடுவிட மோதல்
ஏப்ரல் 7, 1922 பார்மேன் எப்.60 - டி ஆவிலாண்ட் டிஎச்.18ஏ வானூர்தி விபத்து (1922 Picardie mid-air collision)[1] இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக (கடுமையான பனிமூட்டம் 1,பலத்த காற்று 2,) (மூலங்கள் வேறுபடுகிறது) நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் வானூர்தியின் ஊழியர்களோடு 7 பேர்கள் அதாவது அனைவருமே பலியானார்கள். இந்த விபத்து பிரான்சிலிருந்து வடக்கில் 70[2] மைல்கள் தொலைவில், பிக்கார்டி புனித அந்தோணி சாலை அருகில் நடந்ததாக அறியபடுகிறது.[3] குறுந்தகவல்இந்த பயணத்தின்போது, அமெரிக்கவை சேர்ந்த புதுமணத் தம்பதிகளும்,பிரான்சு தேசிய ஒரு குடிமகனும் பயணித்துள்ளனர் துர்ப்பாக்கியவசமாக மூவரும் பலியானதோடு, 2 வானூர்தி உழியர்களும் இறந்து போயினர். விபத்தின்போது ஒரு இளம் விமானி, உயிரோடு காணப்பட்டு பிறகு இறந்ததாக அறியப்படுகிறது.[4] பின்னணிஆரம்பத்தில் படைத்துறை தேவைக்காக வானூர்திகளும், விமானிகளும் உருவாக்கப்பட்டது. உலக யுத்தத்தை தொடர்ந்து, மற்ற நாடுகளைப் போலவே பிரான்சும், மற்றும் பிரிட்டனும் உள்நாட்டு நோக்கங்களுக்காக, படைத்துறை வானூர்திகளை வணிக வானூர்திகளாக வடிவமைத்து பல்நோக்கு தேவைக்காக வானூர்தி தொழில் நிறுவுவதில் கவனம் செலுத்தியதாக தெரிகிறது, பிரான்சு நிறுவனம் ஒரு அதிவிரைவு வான்வழி வானூர்தியை (ஃபார்மன் கோலியாத் பதிவு, F-GEAD) லெ பௌர்கெட்லிருந்து கிரொய்டன் வரை (Le Bourget to Croydon), தினசரி சேவையாக இயக்கியதாக அறியப்படுகிறது.[5] மேலும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia