வார்டு கன்னிங்காம்
விக்கித்திட்டங்கள் செயல்படத் தேவையான மென்மத்தை முதலில் உருவாக்கியவர், வார்டு கன்னிங்காம் (பிறப்பு - மே, 26, 1949) (ஆங்கிலம்:Howard G. "Ward" Cunningham) என்ற அமெரிக்க கணினிநிரலர் ஆவார். மேலும் இவர், கணினியியலின் முக்கியப்பகுதியான வடிவமைப்புப் பாங்கு, அதி நிரலாக்கம் (Extreme programming) என்பவைகளின் முன்னோடியும் ஆவார். இவர் முதன்முதலில், 1994 ஆம் ஆண்டு விக்கிவிக்கிவெப் (WikiWikiWeb) என்ற கணினிநிரலைத் தொடங்கி, தனது நிறுவன இணையத்தளத்திலே, மார்ச்சு, 25 ந்தேதியன்று, 1995 ஆண்டில் நிறுவினார்.[2] 'மிகச்சிறிதான ஒன்றிய விக்கியை'(Smallest Federated Wiki[3]) உருவாக்குவதே, இவரது தற்போதைய திட்டம் ஆகும். இதன் மூலம் ஒரு பயனர் மேலும் எளிதாக விக்கித்திட்டப்பக்கங்களை பயன்படுத்த முடியும். இணையத்திலே பொருத்தமான பதிலை பெறுவதற்கான சிறந்த வழி, கேள்வி கேட்பது அல்ல. தவறான பதிலை இணையத்தில் பதிவதே ஆகும். [4] ஊடகங்கள்
அடிக்குறிப்புகள்
புற இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: en:Ward Cunningham
|
Portal di Ensiklopedia Dunia