வார்ப்புரு பேச்சு:Nowikidatalink

ஒரு கட்டுரைக்குத் தேவையான விக்கித்தரவு உருப்படியை, தானியங்கி உருவாக்கி விடும் என்பதும் யாவரும் அறிந்ததே. தானியங்கியும் மானுட மேலாண்மை கொண்டது என்பதால், சில நேரங்களில் விடுபட வாய்ப்பு உண்டு. ஒரு கட்டுரை உருவாக்கப்பட்டு எவ்வளவு நாட்கள் தானியங்கி செயற்பாட்டுக் காத்திருக்கலாம்? பிறகு இந்த வார்ப்புருவை இடலாம்? கால எல்லை ஒரு மாதம் என வைத்துக் கொள்ளலாம் என எண்ணுகிறேன். பிறரின் எண்ணமறிய விரும்புகிறேன்.--உழவன் (உரை) 02:30, 12 மார்ச் 2017 (UTC)Reply

இந்த வார்ப்புரு இடுவது பின்னர் நீக்குவது இரட்டிப்பு வேலை. வார்ப்புரு இடுவது தேவையற்றது என நான் நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 02:52, 12 மார்ச் 2017 (UTC)Reply
ஆனால், பல கட்டுரைகளில் 5,6 மாதங்கள் ஆகியும் கூட , விக்கித்தரவு உருப்படி இல்லை. விக்கித்தரவு தான் விக்கிப்பீடியாவின் எதிர்காலம். எனவே, இவ்வார்ப்புருவின் நோக்கம் உயரியது என்பதால் இந்த வினா--உழவன் (உரை) 02:56, 12 மார்ச் 2017 (UTC)Reply
Kanags குறிப்பிடுவதையே யானும் ஆதரிக்கின்றேன். மேலும் விக்கித்தரவில் இணைக்கப்படாத கட்டுரைகளுக்கான சிறப்புப்பக்கத்தில் சென்று அனைத்டையும் அங்கு இணைக்கும் ஓர் திட்டம் ஒன்றினை ஆரம்பிக்கலாம். இது ஒரு வார காலப்பகுதியில் அமைய விருப்பம். தொடர்பங்கலிப்பாளர் போட்டியின் முன் அல்லது பின்னர் அதனை நடாத்தலாம். குறித்த ஒரிரு பயனர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டாலே போதும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:18, 12 மார்ச் 2017 (UTC)Reply
த-உழவன், இது குறித்து மிகவும் விரிவாக உங்களுடன் ஏற்கனவே உரையாடியுள்ளேன். சிறப்புப்பக்கங்களில் இதற்கான பட்டியல் உள்ளது. உடனுக்குடனேயே இது இற்றைப்படுத்தப்படுகிறது. பராமரிப்பு செய்பவர்கள் இங்கு சென்று இணைப்புகளை ஏற்படுத்தலாம். விரும்பினால் வார்ப்புரு இடுவதில் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் தேவையற்றது எனக் கருதுகிறேன்.--Kanags \உரையாடுக 03:25, 12 மார்ச் 2017 (UTC)Reply

இந்த வார்ப்புருவின் நோக்கம் விளங்கவில்லை போல் உள்ளது. தயவுசெய்து புரிதல் கொண்டு உரையாடுங்கள். திருப்பத்திருப்ப சொல்லிக் கொண்டிருக்க முடியாது. --AntanO 03:23, 12 மார்ச் 2017 (UTC)Reply

அன்ரன், நீங்கள் சொல்வது விளங்குகிறது. பிழையான விக்கித்தரவில் இணைக்கப்பட்டிருந்தால், சரியான விக்கித்தரவில் இணைப்பதற்கு இவ்வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். அத்துடன், தானியங்கி ஒன்று தவறாக புதிய உருப்படி ஒன்றை ஏற்படுத்தியிருந்தாலும், சரியான விக்கித்தரவில் இணைப்பதற்கும் இவ்வார்ப்புருவைப் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 03:30, 12 மார்ச் 2017 (UTC)Reply
ஆம், விக்கித்தரவில் Q81602, Q12984001 ஆகியன இணைக்கப்படும்வரை வெவ்வேறாக இருந்தன. தமிழில் அது "திரினிப்பழம்" எனவும் பிறவற்றில் "Cucumis melo" என்பதில் இருந்தன. அவற்றை இணைக்க த.வி என்ன வழி முறையைக் கொண்டுள்ளது? காட்டு திராட்சை கட்டுரைக்கு விக்கித்தரவுஉருப்படி உள்ளது. ஆனால் "Ampelocissus latifolia" என்ற சரியான விக்கித்தரவுஉருப்படியில் அது இணைக்கப்படவில்லை. இந்த வார்ப்புரு விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை அல்லது "சரியான விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை" என்ற வார்ப்புருவின் காரணத்திற்கு ஏற்ப செயற்படல் ஏற்றது. ஆனால், எல்லா கட்டுரைகளுக்கும் ஏற்புடையதல்ல. --AntanO 03:38, 12 மார்ச் 2017 (UTC)Reply

இதனை பெயர் மாற்றலாமா? நீக்கி விடலாமா?

திரும்ப திரும்ப இதனை பற்றி உரையாடுதல் ஒரு தெளிவுக்காகவே என்ற நோக்கில், இக்கேள்வியை எழுப்புகிறேன். திரினிப்பழம் என்ற கட்டுரையில் தவறான விக்கித்தரவை ஆன்டன் எனது வேண்டுகோளுக்கு ஏற்ப, சீர்படுத்தி நீக்கியுள்ளார்.. அதுபோலவே, கனகும் பல விக்கித்தரவு கட்டுரைகளை, விக்கித்தரவில் மேம்படுத்தியுள்ளார். அவர்களோடு ஒப்பிடும் போது, இது குறித்த அனுபவம் மிகமிகக் குறைவு என்பதால் பின் வருவனவற்றை, அவர்கள் பார்வைக்கு முன்மொழிகிறேன்.

  1. இந்த வார்ப்புரு ஏன் விக்கித்தரவுடன் இணைக்கப்படவில்லை?
  2. இந்த வார்ப்புரு தேவையா? ஆம் எனில் இது பிழையான விக்கித்தரவுள்ளவைஎன மாற்றப்பட வேண்டும். அப்படிதானே? ஏனெனில், பல தமிழ் கட்டுரைகளுக்கு விக்கித்தரவு தானியங்கிகள், விக்கித்தரவு உருப்படியை உருவாக்கி விடுகின்றன என்பதை கனகின் உரையாடலில் இருந்து அறிந்து கொண்டேன். சரிதானே?
  3. இந்த வார்ப்புருவே தேவையில்லை எனில் இதனை நீக்க வேண்டுகிறேன்.
  4. இந்த வார்ப்புரு இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒவ்வொரு விக்கித்தரவு உருப்படியை சரிபார்க்க வேண்டும்.
  5. விக்கித்தரவு உருப்படி சரிபார்த்தவை என்ற மறைமுக பகுப்பு இருப்பது அவசியம். அதேபோல விக்கித்தரவு இல்லாதவை என்ற மறைமுக பகுப்பும் நமது விக்கிப்பீடியா மேலாண்மைக்கு அவசியம் என நான் கருதுகிறேன். வார்ப்புரு இடலில் எனக்கு ஆர்வம் இல்லை. அதற்கு பதிலாக, பகுப்புகள் இருப்பின் நன்றாக இருக்கும் என்றே எண்ணிகிறேன். --உழவன் (உரை) 09:07, 12 மார்ச் 2017 (UTC)Reply
இந்த வார்ப்புரு ஒரு சில கட்டுரைகளுக்கு மட்டுமே இணைக்கப்படும். வேண்டுமானால் வார்ப்புருவின் பெயரை தகுந்த ஒரு பெயருக்கு மாற்றலாம். மேலும், சிறப்பு:UnconnectedPages என்ற பக்கத்தில் ஏராளமான "இணைக்கப்படாமல் உள்ள கட்டுரைகள்" பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் தெரிந்தெடுத்து விக்கித்தரவில் இணைக்கலாம். இதன் மூலம் விக்கித்தரவில் பராமரிப்புப் பணியில் ஈடுபடலாம். கட்டாயம் வார்ப்புரு இணைத்துத் தான் இணைக்க வேண்டுமா?--Kanags \உரையாடுக 09:43, 12 மார்ச் 2017 (UTC)Reply
//கட்டாயம் வார்ப்புரு இணைத்துத் தான் இணைக்க வேண்டுமா?// இதுபற்றிய நீண்ட புரிதலை நீங்கள் எனக்குள் உருவாக்கியுள்ளீர்கள். எனவே, வார்ப்புருவே வேண்டாம் என்று எண்ணிகிறேன். தொடுப்பிணைப்பியில் இருப்பதால் பல இணைக்க வாய்ப்புண்டு. ஆனால், தவறான விக்கித்தரவு உருப்படி உள்ளனவை என்ற பகுப்பு இருக்க வேண்டும். அல்லது வார்ப்புருவே தவறான விக்கித்தரவு உருப்படி உள்ள கட்டுரைகள் என்பதை சுட்ட வேண்டும். இதன் தோற்றம் நீங்கள் என்பதால் உங்களின் எந்த முடிவும் எனக்கும், பலருக்கும் துணையே ஆகும்.--உழவன் (உரை) 10:23, 13 மார்ச் 2017 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya