வாழக்குளம் அன்னாசிகேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் மூவாற்றுப்புழை அருகில் உள்ள வாழக்குளம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் அன்னாசி வாழக்குளம் அன்னாசி (Vazhakulam Pineapple) என சிறப்பாக அழைக்கப்படுகிறது. இந்த அன்னாசிக்கு வாழக்குளம் அன்னாசி எனும் பெயரானது கேரள வேளாண்-தோட்டக்கலைத் துறை செப்டம்பர் 4, 2009 அன்று சென்னையில் செயல்படும் புவியியல் சார்ந்த குறியீடு அமைப்பில் பதிவு செய்து முறையான புவிசார் குறியீடு பெற்றுள்ளது. கேரள வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அன்னாசிப்பழ உழவர் சங்கம், வாழக்குளம், நாடுக்கார வேளாண் பதப்படுத்துதல் நிறுவனம் லிமிடெட் தாக்கல் செய்த விண்ணப்பத்தின் அடிப்படையில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. உள்ளூர் மக்களால் கன்னராசக்கா என்று அழைக்கப்படும் இந்த அன்னாசி, புவிசார் குறியீடு பெற்றதன் மூலம் இதனுடைய பெருமை உலகறிந்தது. இந்த அன்னாசியின தாவரவியல் பெயரானது அன்னாசு கோமோசசு (Ananas comosus). இந்த அன்னாசி பழத்தின் எடை 1300 முதல் 1600 கிராம் ஆகும். இப்பழம் இனிமையான நறுமணத்தைக் கொண்டுள்ளது. கூம்பு வடிவில் அமைந்த இப் பழத்தின் 'கண்கள்' ஆழமாக வைக்கப்பட்டுள்ளன. பழச் சதை மிருதுவாகவும், தங்க மஞ்சள் நிறமாகவும் இருக்கும், சாறு 14-16o பிரிக்சுடன் இனிமையாகவும், அமிலத்தன்மை 0.50 - 0.70% ஆகவும் இருக்கும். இதில் கரோட்டின், உயிர்ச்சத்து, கனிமம் மற்றும் ஆற்றல் நிறைந்து காணப்படும்.[1] இந்த அன்னாசி வாழக்குளம் பகுதியில் பயிரிடப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia