விக்கிப்பீடியா:Image license migrationஉரிம இற்றை வாக்கெடுப்பு முடிவுகளின்படியும் பின்னர் நிறைவேற்றப்பட்ட (மே 2009) விக்கிமீடியா நிறுவன வாரியத் தீர்மானப்படியும், விக்கிமீடியா நிறுவனத் திட்டங்களில் தற்போது குனூ தளையறு ஆவண உரிமம் 1.2 கீழ் உள்ள உள்ளடக்கங்கள் கூடுதலாக படைப்பாக்கப் பொதுமங்கள் உரிமங்களின் (CC-BY-SA) கீழும் கிடைக்குமாறு செய்யப்பட்டும். இதன்படி விக்கிப்பீடியாவில் குனூ தளையறு ஆவண உரிம ஆக்கங்கள் இரு உரிமப் படைப்பாக்கங்களாக இனி குனூ தளையறு ஆவண உரிமத்தை மட்டுமல்லாது படைப்பாக்கப் பொதுமங்கள் CC-BY-SA 3.0 கீழும் வழங்கப்படும். இந்த மாற்றத்தின் அங்கமாக குனூ தளையறு ஆவண உரிமத்தின் கீழான படிமங்களுக்கு, கீழ்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டால், இரு உரிமங்கள் வழங்கப்படும். இது பல அலைகளாக நிறைவேற்றப்படும். துவக்கத்தில், ஒவ்வொரு குனூ தளையறு ஆவண உரிம படிமத்திலும் இந்த மாற்றத்தைக் குறித்த அறிவிக்கை வார்ப்புரு இடப்படும்; நிபந்தனைகளை விளக்குவதற்காக இந்த பக்கத்திற்கும் இணைப்புத் தரப்படும். இதைத் தொடர்ந்து தற்போதுள்ள அனைத்து குனூ தளையறு ஆவண உரிமப் படிமங்களும் தானியங்கிகளாலும் (பாட்) மனிதர்களாலும் தரம் பிரிக்கப்படும். விக்கிப்பீடியாவிலுள்ள குனூ தளையறு ஆவண உரிம படிமங்களில் ஏறத்தாழ 90-95% தானியக்கமாக செய்யவியலும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மீதமானவற்றை பிரிக்க உங்கள் உதவியை நாடுகின்றோம். |
Portal di Ensiklopedia Dunia