விக்கிப்பீடியா:அச்சு இதழ்களில் விக்கிப்பீடியா கட்டுரைகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் பல துறை சார் கட்டுரைகள் உள்ளன. இவற்றை இணையத்தில் இல்லா வாசகர்களும் படித்துப் பயன் பெற அவை அச்சு இதழ்களில் வெளியாவது உதவும். இதன் மூலம் பல புதிய வாசகர்களையும் பங்களிப்பாளர்களையும் விக்கிப்பீடியா பெறலாம். இந்த அடிப்படையில் துறை சார் இதழ்களைத் தொடர்பு கொண்டு அதன் விளைவுகளை இங்கு ஆவணப்படுத்தலாம்.

இதழ்களிடம் வேண்டுவதற்கான மாதிரிக் கடிதம்

(சூழல் சார் இதழுக்கு எழுதிய கடிதம். தொடர்பு கொள்ளும் இதழின் துறையைப் பொருத்து எடுத்துக்காட்டுகளை மாற்ற வேண்டும்)

மதிப்புக்குரிய ஆசிரியருக்கு,

வணக்கம். தங்கள் இதழ் கண்டோம். அதில் பறவைகள் பற்றிய கட்டுரைகள் கண்டேன். தகவல் செறிவுடன் இருந்தது.

இது போன்று தமிழ் விக்கிப்பீடியாவில் விலங்குகள், பறவைகள், சூழல் சார் கட்டுரைகள் நிறைய உள்ளன. எடுத்துக்காட்டுக்கு,

http://ta.wikipedia.org/wiki/செந்நாய்

http://ta.wikipedia.org/wiki/பட்டாம்பூச்சி

கட்டுரைகளைக் காணலாம்.

இவற்றை அனுப்பி வைத்தால் உங்களால் வெளியிட இயலுமா?

சூழல் சார் தலைப்பிலான புதிய, விரிவான, தற்காலத் தகவல் இணையத்தில் இல்லா மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

கட்டுரையுடன் விக்கிப்பீடியாவின் பெயரையும் இணைய முகவரியையும் மட்டும் வெளியிட்டால் போதுமானது. படங்கள், ஆக்கம் அனைத்தும் காப்புரிமை விலக்கு பெற்று இலவசமாகவே கிடைக்கின்றன.

இது குறித்து உங்கள் மேலான பதிலை எதிர்நோக்குகிறோம்.

நன்றி.

அன்புடன்

தொடர்பு கொள்பவர் பெயர்,

(தமிழ் விக்கிப்பீடியர் சார்பாக)

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya