விக்கிப்பீடியா:அறிவியல் உள்ளடக்க மேம்பாட்டுத் திட்டம்

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2026 ஜனவரியில் மாபெரும் அறிவியல் திருவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.[1] மாநாட்டிற்கு முன்நிகழ்வாக ஆகஸ்ட் முதல் பல்வேறு பரப்புரைகளும் அறிவியல் பயிலரங்குகளும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அறிவியல் தொடர்பான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தவுள்ள நிலையில் விக்கித்திட்டங்களில் அறிவியல் தொடர்பான உள்ளடக்க மேம்பாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கின்றனர். அதன் பொருட்டு ஐந்து நேரடிப் பயிலரங்கள், பல இணையவழிப் பயிலரங்குகள், பல தொடர்தொகுப்புகள், ஒரு மாநாட்டு அரங்கம், இரண்டு அறிவியல் ஒளிப்பட நடை மற்றும் சில திட்டங்களுடன் திண்டுக்கல் மாவட்டப் பயனர்களை அதிகரிக்கவும், திண்டுக்கல் மாவட்ட அறிவியல் தொடர்பான தகவல்களை அதிகரிக்கவும் விரைவு நிதிநல்கையில் விண்ணப்பித்துள்ளோம். காலம் குறைவாக இருந்ததால் தோராயமான திட்டத்துடன் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இங்கே உரையாடி விரிவான திட்டத்தைச் செயல்படுத்துவோம்.

  1. "திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான 'அறிவியல் திருவிழா'". திண்டுக்கல் மாவாட்டம். Retrieved 8 July 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya