விக்கிப்பீடியா இயங்குகின்ற அடிப்படைக் கொள்கைகளைத் தொகுப்பாளர்கள் ஐந்து தூண்கள் என்று சுருக்கியுள்ளார்கள்:
தமிழ் விக்கிப்பீடியா என்னும் கலைக்களஞ்சியம்கலைக்களஞ்சியங்கள், ஆண்டு அறிக்கைகள், மற்றும் புவியியல் வழிகாட்டிகள் இவற்றின் பொது மற்றும் சிறப்புத் தரவுகளை உள்ளடக்கியது. உள்ளடக்கம் நம்பகமான மூலங்களைமேற்கோள்களிட்டுசரிபார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். தொகுப்பாளர்களின் ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் புரிதல்கள் இடம்பெறக் கூடாது. இது விவாதமேடையோ, விளம்பரத் தளமோ, சுய/தன் பாராட்டு அரங்கமோ அன்று. இது கட்டுப்பாடற்ற முறையில் தரவுகளைக் கோக்கும் தளம் அன்று; இது இணையத்தளங்களின் பெயர்ப்பட்டியல் அன்று. மேலும், இது ஓர் அகரமுதலியோ, செய்தித்தாளோ (அல்லது) மூல ஆவணங்களின் தொகுப்போ அன்று: அத்தகைய தரவுகளை விக்கிமீடியாவின் உடனிணைந்த திட்டங்களுக்குக் கொடுப்பதன் மூலம் பங்களிக்கலாம்.
விக்கிப்பீடியா நடுநிலை நோக்குக் கொள்கையைக் கடைப்பிடிப்பதனால் எந்தவொரு கட்டுரையிலும் ஒரு சார்புள்ள கருத்துநிலையைத் தவிர்க்கிறோம். சிலநேரங்களில் பல்வகைப் பார்வைகளை, ஒவ்வொன்றையும் துல்லியமாக, அவற்றின் பின்னணியோடு கொடுக்கவேண்டியிருக்கும்; எந்தவொரு கருத்தினையும் உண்மை என்பதாகவோ சிறந்த கருத்தாகவோ சித்திரிக்காமல், இது கொடுக்கும். சரிபார்க்கக்கூடிய, ஆதாரபூர்வ மூலங்களைச் சுட்டுவது, முக்கியமாகச் சர்ச்சைகள் நிறைந்த கட்டுரைகளுக்குத் தேவையாகிறது. கட்டுரையின் நடுநிலை நோக்கினைக் குறித்த விவாதங்கள் எழும்போது, அவற்றை பேச்சுப் பக்கத்தில் விவரமாக விவாதிக்க வேண்டும்.
விக்கிப்பீடியாவில் இறுக்கமான விதிமுறைகள் இல்லை: மேற்கண்ட நான்கு பொது கொள்கைகளைத் தவிர, வேறு கட்டுப்பாடுகள் இங்கு இல்லை. துணிவுடன் கட்டுரைகளை இற்றைப்படுத்தவும்; தவறுகள்/பிழைகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்; ஏனெனில் முந்தைய பதிப்புகள் இயல்பாகச் சேமிக்கப்படுவதால் மீட்கமுடியாத பாதிப்பு ஒன்றும் நிகழ வாய்ப்பில்லை.