விக்கிப்பீடியா:சனவரி 15, 2011 விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டுவிழா சென்னை![]() சென்னையில் நடைபெற்ற விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டு விழா நிகழ்வு குறித்த அனைத்துத் தகவல்களும் இங்கு தரப்பட்டுள்ளன. சந்திப்பு பற்றிய விபரங்கள்
நிகழ்ச்சி நிரல்
நூல் வெளியீடுதேனி.எம்.சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியீட்டு நிகழ்வு
விக்கிப்பீடியா பத்தாவது பிறந்தநாள் கொண்டாட்டம் நிகழ்வுசென்னை விக்கியர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பத்தாவது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக் கொண்டாடினர். அது குறித்த செய்திகள்: மாஹிரின் அறிக்கைசென்னை விக்கியர்கள் சார்பில் விக்கி பத்தாம் ஆண்டு விழா நல்லமுறையில் நடந்தேறியது. சென்னைத் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆங்கிலவிக்கிப்பீடியா சார்பில் பேசிய ரவிசந்தர் அங்கு கட்டுரைகளைத் தரப்படுத்தும் முறைமையை விளக்கினார். . மலையாள விக்கிப்பீடியர்களும் கலந்துகொண்டனர். தமிழ் விக்கி, செய்தி, விக்சனரி பற்றி நான் அறிமுகம் கொடுத்தேன். ![]() தமிழ் விக்கியர் தேனி சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா என்கிற புத்தகம் வெளியீடு செய்யப்பட்டது. அவ்விழாவில் கிழக்குப் பதிப்பக உரிமையாளர் திரு. பத்ரி சேசாத்திரி நூலை வெளியிட்டு சிறப்பித்தார். விக்கிப்பீடியாவின் பயன்கள் குறித்து நல்ல பல கருத்துக்களை எடுத்துச் சொன்னார். முதல் பிரதியை இதழியலாளர் சுகதேவ் பெற்றுக் கொண்டார்.இரண்டாம் பிரதியை டாக்டர்.கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இவ்விழாவின் முத்தாய்ப்பாய் சிம்மிவேல்சு தொலைபேசி வாயிலாக எங்களைத் தொடர்புகொண்டு பின்னர் ஸ்கைப்பின் வீடியோ அரட்டை மூலம் வாழ்த்து தெரிவித்தார். இது விழாவில் கலந்து கொண்டவர்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. புத்தகவெளியீடு மற்றும் சிம்மி வேல்சு உரை - வீடியோ இந்நிகழ்வின் ஏற்பாட்டை மணியன் செய்திருந்தார்கள். வந்திருந்த அனைவருக்கும் விக்கி டி-சட்டை வழங்கப்பட்டது பரிதிமதி நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்கள். அண்ணா பல்கலை மாணவர் சூர்ய பிரகாசு மிகவும் ஆர்வமாய் கலந்து கொண்டார். செங்கைப்பொதுவன் அய்யா அவர்கள் விக்கி நிருவாகிகளின் சேவையை குறிப்பாக சிறிதரனைப் வெகுவாகப் பாராட்டிப் பேசினார். கலந்துகொண்டவர்களுக்கும் கல்லூரி நிறுவனத்திற்கும் நன்றி கூறி விழா இனிதே நிறைவடைந்தது. இவ்விழாவிற்கு இடவசதியும், சிம்மி வேல்சுடன் ஸ்கைப் வழி உரையாடலுக்கும் ஏற்பாடு செய்த சிறிகாந்திற்கு(லாஜிக்விக்கி) மனமார்ந்த நன்றி. -- மாஹிர் 16:51, 15 சனவரி 2011 (UTC)
விழா நிகழ்விகளையும், படங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். விழா சிறப்பாக நடக்க தமது பங்களிப்பை வழங்கிய அனிவருக்கும் வாழ்த்துக்கள்.--கலை 12:16, 16 சனவரி 2011 (UTC) விக்கிசெய்திகளில்விக்கிப்பொதுவில்
பிற ஊடகங்களில்கலந்து கொண்டோர்
ஊடகங்களில் வெளியான செய்திகள் |
Portal di Ensiklopedia Dunia