விக்கிப்பீடியா:சர்ச்சைக்குரிய தலைப்புகள்சில கட்டுரைத் தலைப்புகளுக்கென்று சிறப்பு விதிகள் பொருந்தும், அவை சர்ச்சைக்குரிய தலைப்புகள் (contentious topics) என குறிப்பிடப்படுகின்றன. சிறப்பு வரையறைகளைக் கொண்ட கட்டுரைத் தலைப்புகளான இவை, மற்ற கட்டுரைத் தலைப்புகளை விட தொடர்ந்து இடையூறு விளைவிக்கும் தொகுப்புகளை உள்ளடக்கிய கட்டுரைகளாக தீர்ப்பாயக் குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. [a] விவாதத்திற்குள்ளான அனைத்துத் தலைப்புகளும் சர்ச்சையான தலைப்புகள் இல்லை, தீர்ப்பாயக் குழுவால் அறிவிக்கப்படும் கட்டுரைகளுக்கு மட்டுமே இந்த சிறப்பு விதி பொருந்தும். சர்ச்சைக்குரிய தலைப்பைத் திருத்தும்போது, விக்கிப்பீடியாவின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகள் மிகவும் கடுமையாகச் செயல்படுத்தப்படுகின்றன, மேலும் விக்கிப்பீடியா நிர்வாகிகளுக்கு இந்தத் திட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதைக் குறைக்க கூடுதல் அதிகாரம் உள்ளது. சர்ச்சைக்குரிய தலைப்புகளைத் தொகுக்கும் போது சர்ச்சைக்குரிய தலைப்புகளை, நீங்கள் கவனமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் திருத்த வேண்டும், கலைக்களஞ்சியத்தை சீர்குலைப்பதைத் தவிர்க்க வேண்டும், மேலும்:
ஒரு குறிப்பிட்ட திருத்தம் இந்த எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகிறதா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சர்ச்சைக்குரிய தலைப்புகளின் கீழ் இருக்கும் கட்டுரைகள், பயனர் கட்டுப்பாடுகள் (சிலர் மட்டும் அந்தப் பக்கங்களைத் தொகுக்க இயலும்), பக்கக் கட்டுப்பாடுகள் (குறிப்பிட்ட பக்கங்களை எவ்வாறு திருத்தலாம் என்பதற்கான சிறப்பு விதிகள்) ஆகியவற்றின் அடிப்படையில் நிர்வாகிகளால் அந்தப் பக்கங்கள் காக்கப்படும். இது தொடர்பாக அனைத்துப் பயனர்களும் மேல்முறையீடு செய்யலாம். இந்த சர்ச்சைக்குரிய தலைப்புகளில் மேற்கொள்ளப்படும் செயல்முறைகள் ஒரு தலைப்புடன் தொடர்புடைய அனைத்து பக்கங்களுக்கும், அதே போல் தலைப்புடன் தொடர்புடைய பிற பக்கங்களின் பகுதிகளுக்கும் பொருந்தும் [b] வகையில் பரவலாக பொருள்கொள்ளப்படுகிறது. கட்டுப்பாடுகள்பயனர் கட்டுப்பாடுகள்பயனர் கட்டுப்பாடுகள் என்பது சர்ச்சைக்குரிய தலைப்புகளில் பின்பற்ற வேண்டிய தொகுப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத பயனர்கள் அந்த தலைப்புகளைத் தொகுப்பதைத் தடை செய்வதைக் குறிக்கிறது.
பக்கக் கட்டுப்பாடுகள்பக்கக் கட்டுப்பாடுகள் என்பது சர்ச்சைக்குரிய தலைப்புகளில் உள்ள கட்டுரைகளில் நாசவேலைகளைத் தடுக்கும் பொருட்டு அனைத்துப் பயனர்களையும் தொகுப்பதற்குத் தடை செய்வதனைக் குறிக்கும். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia