விக்கிப்பீடியா:துப்புரவுப் பணிக்கான தொகுப்புகள்

கட்டுரைகளில் செய்யப்படவேண்டிய துப்புரவுப் பணிகள், எடுத்துக்காட்டுகளுடன் பட்டியலிடப்படுகின்றன:

  • மேற்கோள்கள்
  1. மேற்கோள்கள் என ஒரே சீராக எழுத வேண்டும்.
  2. மேற்கோள்கள் எனும் துணைத் தலைப்பு இரண்டாவது முறையாக வந்திருந்தால், அதனை நீக்க வேண்டும். எடுத்துக்காட்டு: பத்மாவதி

மேம்பட்ட மொழியாளுகைக்கான பரிந்துரைகள்

  1. வருடங்கள் என்பதனை ஆண்டுகள் என எழுதுதல்.
  2. சந்தோசம் என்பதனை மகிழ்ச்சி என எழுதுதல்.

வானூர்தி தொடர்பான கட்டுரைகள்

  1. சர்வதேச விமான நிலையம் என்பதனை பன்னாட்டு வானூர்தி நிலையம் என எழுதுதல்.

தொடருந்து தொடர்பான கட்டுரைகள்

  1. இரயில் நிலையம், இரயில், இரயில் போக்குவரத்து என்பனவற்றை தொடருந்து நிலையம், தொடருந்து, தொடருந்துப் போக்குவரத்து என்பனவாக எழுதுதல்.

கோயில்கள் குறித்த கட்டுரைகள்

  1. கோயில் பற்றிய கட்டுரைகளில் dedicated எனும் ஆங்கில மொழிநடையானது 'சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது' என தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது. 'இக்கோயில் சிவன் கோயிலாகும்' என்றோ 'இக்கோயிலின் மூலவர் சிவன்' என்றோ எழுதவேண்டும். தேவையெனில், சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ள கோயில் என எழுதலாம்.

திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள்

  1. கதாப்பாத்திரங்கள் என்பதனை கதைப்பாத்திரங்கள் என எழுதுதல்.
  2. இத்திரைப்படம் என்றோ இந்தத் திரைப்படம் என்றோ எழுதுவது சரியானது. இத் திரைப்படம் என எழுதுவது தவறு.

மக்கள் குறித்த கட்டுரைகள்

  1. 12 மார்ச்சு 2006இல் காலமானார் என எழுதாது 12 மார்ச்சு 2006 அன்று காலமானார் என எழுத வேண்டும்.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya