விக்கிப்பீடியா:பயனருக்கு மின்னஞ்சல் செய்ய
![]() இந்தப்பக்கம் பயனர்மின்னஞ்சல் கூறு குறித்த தகவல்களை அளிக்கிறது. இந்த வசதி மூலம் பதிந்துள்ள பயனர்கள் விருப்பப்பட்டால்,தங்களுக்குள் மின்னஞ்சல் பரிமாறிக்கொள்ள வகை செய்கிறது. இது முற்றிலும் தனிப்பட்டது. பேச்சுப் பக்கங்களைப் போலன்றி மின்னஞ்சல்களில் பரிமாறிக்கொள்ளும் உள்ளடக்கங்களை பிறர் காண இயலாது. ஆகவே இந்த வசதி மூலம் யாரேனும் இழிவு செய்தால், மின்னஞ்சல் வசதியை செயலிக்கச் செய்வதல்லாமல் வேறு தீர்வு எதுவும் கொடுக்க வியலாது. எந்தப் பயனருக்கும் இந்த வசதியை ஓர் நிர்வாகியால் தடை செய்ய முடியும். இருப்பினும் மிக மோசமாக இதனை பயன்படுத்தினாலன்றி இவ்வாறு செய்வதில்லை. பொதுஉங்கள் பயனர் விருப்பத்தேர்வுகளில் உங்கள் மின்னஞ்சலைக் கொடுத்திருந்தீர்கள் என்றால் விக்கிப்பீடியாவின் பயனர் இடைமுகம் வழியே பிற பயனர்களுடன் மின்னஞ்சல் தொடர்பு கொள்ளலாம். ஒரு பயனருக்கு மின்னஞ்சல் அனுப்ப விரும்பினால் அந்தப் பயனரின் பயனர் பக்கம் சென்று அங்கு இடதுபுறம் காணும் வழிநடத்துப் பட்டியலில் "கருவிப்பெட்டி"யில் உள்ள "இந்தப் பயனருக்கு மின்னஞ்சல் செய்" தொடுப்பின் வழியே அனுப்பலாம். பெறுநர் பதிலளிக்க ஏதுவாக உங்கள் விருப்பத்தேர்வுகளில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி தானாகவே "அனுப்புனர்" தரவுப்புலத்தில் நிரப்பப்பட்டுள்ளதைக் காணலாம். தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளோருக்கு நேரடியாகவே அனுப்பலாம். இருப்பினும் விக்கிப்பீடியா அத்தகைய வெளிப்படையான தெரிவிப்புகளை ஊக்குவிப்பதில்லை. விக்கிப்பீடியா இடைமுகம் வழியே தொடர்பு கொள்வது உங்கள் மின்னஞ்சல் அடையாளத்தை பிறரின் பார்வையிலிருந்து காப்பாற்றி எரித மின்னஞ்சல்களைத் தவிர்ப்பதே இதன் தனிப்பட்ட சிறப்பியல்பாக உள்ளது. நீங்கள் "அனுப்பு" தத்தலை அமுக்கிய உடனேயே விக்கிப்பீடியா மின்னஞ்சல்கள் அனுப்பப்பப்ட்டு விடுகின்றன. உங்க் விருப்பத் தேர்வுகளில் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சலும் உங்கள் அஞ்சல்பெட்டியிலும் பெறவேண்டும் என்று கொடுத்திருந்தால் அவ்வாறே பெறலாம். இல்லையென்றாலும் தனித்தனி மின்னஞ்சல்களுக்கும் இவ்வாறு தேர்ந்தெடுக்கலாம். சிலநேரங்களில் அஞ்சல்பெட்டியை அடிக்கடி பார்க்காத பயனர்களுக்காக, மரியாதை நிமித்தம் பெறநரின் பேச்சுப் பக்கத்தில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக ஓர் குறிப்பை இடலாம். ஓர் உரையிலோ கையெழுத்திலோ மின்னஞ்சல் தொடர்பிற்கான தொகுப்பினைக் கொடுக்க [[Special:EmailUser/பயனர்பெயர்]] எனக் கொடுக்கலாம். பயனர் மின்னஞ்சலை செயற்படுத்தவும் செயலிழக்கவும் செய்யநீங்கள் சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை கொடுத்தாலன்றி மின்னஞ்சல் சேவை செயலிழக்கப் பட்டுள்ளது. நீங்கள் உங்கள் பதிகை கணக்கைத் துவங்கும்போதோ அல்லது எந்நேரத்திலும் "விருப்பத்தேர்வுகளில்" தேர்ந்தெடுக்கும்போதோ செயலாக்கத்திற்கு கொண்டுவரப் படுகிறது. நீங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருந்தால், "என் விருப்பத்தேர்வுகள்" சென்று "பிற பயனர்களிடமிருந்து மின்னஞ்சலை செயலாக்கு" கட்டத்தில் குறியிடாமலோ குறியிட்டோ நீங்களே வேண்டும்போது செயலிழக்கச் செய்யவோ செயலாக்கவோ முடியும். நீங்கள் புகுபதிகை செய்தபின் என் விருப்பத்தேர்வுகளை ஒவ்வொரு பக்கத்தின் மேலும் வலது புறத்தில் காணலாம். நீங்கள் ஓர் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் அது உங்களுடையதுதானா என அதனை மீடியாவிக்கி சரிபார்க்க வேண்டும். எனவே மீடியாவிக்கி உங்களுக்கு உறுதிசெய்யும் மின்னஞ்சலை அனுப்பும்; அதில் கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பின் வழியே நீங்கள் உங்கள் மின்னஞ்சலை உறுதி செய்ய வேண்டும். இதனை ஒருவார காலத்திற்குள் செய்ய வேண்டும்; இல்லையேல் இந்தத் தொடுப்பு காலாவதியாகி விடும். தகவல் பாதுகாப்புSending an e-mail via the இப் பயனருக்கு மின்னஞ்சல் செய் முறைமை மூலம் மின்னஞ்சல் அனுப்பப்படும்போது உங்கள் மின்னஞ்சலை மட்டும் பதில் அனுப்பத் தோதாக வெளிப்படுத்தும்; பிற எந்த இணைய தகவல்களையும் பெறுநருக்குக் கொடுக்காது. (இந்த வழியாக அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் தனிநபர்களுக்கிடையே யானது என்பதை கவனிக்க; மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் ஒப்புக்கொண்ட இரு நபர்களிடையே எழுத்து வடிவ தனித்த மடலாக அனுப்பப்படுகிறது.) இந்த சிறப்பியல்பின் மூலமாக உங்களுக்கு மின்னஞ்சல் வந்தால், நீங்கள் பதிலளிக்கத் தேவையில்லை, அல்லது அனுப்பும் பயனரின் பேச்சுப் பக்கத்தில் பதிலளிக்கலாம். பதிலளிக்க விரும்பினால் மூன்று விதங்களில் செய்யலாம்:
இழித்தலைக் கையாளுதல்இந்த முறைமை மூலம் உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபணைக்குரிய மின்னஞ்சல் வந்தால், நிர்வாகிகளை அணுகி, மின்னஞ்சல் மூலமாக, அறிவுரை பெறலாம். மிகக் கடுமையான நிகழ்வுகளில், தொடர்ந்து தொல்லைகள் நேர்ந்தால், இதை மேலே எடுத்துச்செல்லவும் கூடும். மின்வருவனவற்றைக் கருத்தில் கொள்க:
இவற்றையும் காண்க
|
Portal di Ensiklopedia Dunia