விக்கிப்பீடியா:விக்கி உளைச்சல்விக்கிப்பீடியாவில் பங்களிப்பது தொடர்பான மன உளைச்சல் விக்கி உளைச்சல் எனப்படும். விக்கிப்பணிச்சுமை மிகுதியாகும்போது அதனால் பல விளைவுகள் உண்டாகலாம். அன்றாட வாழ்வில் தக்கவாறு நேரம் செலவழிக்கவியலாமல் அதனால் சிக்கல்கள் நேரலாம். அதனால் பொதுவாக அழுத்தமும் எரிச்சலும் கூட ஏற்படக்கூடும். மிகுதியான பணிகளை தாமாக முன்வந்து செய்பவர்களுக்கு ஒரு அதிகப்படியான பிடிப்பு, பற்று, சொந்தம் கொண்டாடல் உணர்வு ஏற்படுவது இயல்பு. அது விக்கிபோன்ற கூட்டாக்கத்திட்டங்களில் பல நேரங்களில் முரணாகவும் அமைந்துவிடலாம். அதேபோல விக்கியிலும் அன்றாட வாழ்விலும் தாமாக முன்வந்து பணியாற்றுவோருக்கு உள்ளத்தில் தம்மையறியாததோர் கூடுதல் எதிர்பார்ப்பும், நிறைவடையாதவோர் உரிமைகொண்டாடலும் ஏற்படக்கூடும். இவ்வாறான சூழலில் பங்களிப்பாளர்களிடையே ஏற்படக்கூடிய வழமையான கருத்து வேறுபாடுகள், நன்னயக்குறைபாடுகள், பிணக்குகள் போன்றவை ஒருவரை மிகுதியான உளைச்சலுக்குண்டாக்கலாம். அதைப் பின்வரும் வழிகளில் எதிர்கொள்ளலாம்.
உளைச்சலைப்பொருத்தவரை வருமுன் காப்பது சாலச்சிறந்தது. தக்க நேரத்தில் நாம் எடுக்கும் விடுப்பு உளைச்சல் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கக்கூடும். அதேபோல சில கடுமையான பணிகளை ஏற்றுக்கொள்ளுமுன் உளைச்சலுக்கான வாய்ப்பையும் எண்ணிப்பார்த்துக்கொள்வது நல்லது. ஒரு சமூகமாக விக்கியர்கள் மேற்கொள்ளும் திட்டங்களிலும் இதைக்கருத்தில் கொள்ளவேண்டும். நல்ல வளர்ச்சி வாய்ப்பாக இருந்தாலும் பங்களிப்பாளர்களை மிகவும் அழுத்தக்கூடிய பணிகளைத் தவிர்க்கலாம். |
Portal di Ensiklopedia Dunia