விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள்விக்கித் திட்டம் இந்திய துணைக்கண்ட பாலூட்டிகள் உங்களை வரவேற்கிறது நோக்கம்இத்திட்டம் இந்திய துணைக்கண்ட பாலூட்டிகள் தொடர்புள்ள கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம். வேண்டிய தகவல்களை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்தும் இந்திய வனத்துறை வலைத்தளம் போன்ற தளங்களில் இருந்தும் பெறலாம். இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்வதற்கு, கீழ்க்காணும் 'உறுப்பினர்' பகுதியில் உங்கள் பெயரை இணைக்கவும். முதல் கட்டமாக ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள இந்திய மற்றும் இலங்கை பகுதியில் வாழும் அனைத்து பாலூட்டிகளையும், அவற்றுடன் தொடர்புடைய கட்டுரைகளையும் இங்கு இணைக்கலாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் குறுங்கட்டுரைகளாக உள்ள நிலையில், தங்களால் இயன்ற அளவுக்கு, தகுந்த ஆதாரங்களுடன் தமிழில் நெடுங்கட்டுரைகளாக இயற்றவும். தரம் பிரித்தல் பத்தியில் தரப்பட்டுள்ள நல்ல கட்டுரைகளை மாதிரிகளாகக் கொள்ளவும். உறுப்பினர்
பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இட வேண்டல்விக்கித் திட்டம் உயிரியல் தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், உறுப்பினர் வார்ப்புருஇத்திட்டத்தில் உள்ள பயனர்கள் தங்களின் பக்கத்தில் கீழ்காணும் வார்ப்புருவை இட்டுக்கொள்ளலாம். இதன் மூலம் அவரது பக்கத்தை பார்வையிடும் பயனர்கள் இத்திட்டத்தை பற்றி அறிந்துகொள்ளக்கூடும்
மொழிபெயர்ப்பு உதவிஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து மொழி பெயர்க்கையில், கீழே தரம் பிரித்தல் பகுதியில் தரப்பட்டுள்ள கட்டுரைகளை மாதிரியாக பயன்படுத்துதல் சிறப்பாகும். கட்டுரைகள் இயற்றுதலுக்கான வழிமுறைகள்கட்டுரைகள் இயற்றுவதற்கு ஆங்கில விக்கி கட்டுரைகளையோ, பிற மொழி விக்கிக்கட்டுரைகளையோ மூலமாக கொள்ளும் நிலையில், அருள்கூர்ந்து கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கையாளவும் 1)ஆங்கில விக்கி அல்லது பிற மொழிக் கட்டுரைகளை அப்படியே மொழிப்பெயர்ப்பதை முடிந்த அளவு தவிர்க்கவும். தகவல்களை உள்வாங்கிக்கொண்டு, கருத்தைத் தமிழில் தக்க மாற்றங்களுடன் எழுதவும். எடுத்துக்காட்டாக கட்டுரையில் பயன்படுத்தப்படும், மாதிரிகளை இந்தியத் துணைக்கண்ட சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதலாம். 2)ஆ.வி அல்லது பிறமொழிக் கட்டுரையை மொழிப்பெயர்க்கும் முன்னர், அக்கட்டுரையின் உரையாடல் பக்கத்திலிருக்கும், உரையாடலகளைப் பார்க்கவும். 3)ஆ.வி அல்லது பிறமொழிக் கட்டுரை தரத்தில் இல்லாத நிலையில், கட்டுரையின் உள்ளடக்கத்தை ஒரு முறை சரிபார்க்கவும். இதற்கு அடிப்படை உயிரியல் புத்தகங்களையோ அல்லது தரமான பதிப்பகங்களின் ஆய்வு கட்டுரைகளையோ அல்லது நம்பக்கூடிய இணையத் தளங்களை (நல்ல பல்கலைக்கழக பேராசிரியர்களின் பக்கங்களில் உள்ளதைப்) பயன்படுத்தலாம். தங்கள் ஐயங்களையும் இங்கு கேட்டுத் தெளிவு செய்து கொள்ளவும்
உடன் செய்ய வேண்டியவைவார்ப்புரு:இந்திய_பாலூட்டிகள் இந்த வார்ப்புருவை தமிழாக்கம் செய்தல். இதன் பேச்சு பக்கத்தை தயவுசெய்து பார்க்கவும் உசாத்துணைகள்ஆங்கிலத்தில்
தமிழ்
தரம் பிரித்தல்கட்டுரைகளை குறுங்கட்டுரைகள், தொடக்கநிலைக் கட்டுரைகள், ஓரளவு வளர்ந்த கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள் என்பதுபோல, தரம் பிரிக்க வேண்டும். சிறப்பு கட்டுரைஇத்திட்டத்தின் கீழ் வரும் கட்டுரைகளில், கீழ்காணும் கட்டுரைகள் சிறப்பு கட்டுரைகள் ஆகும். * தற்போதைக்கு ஒன்றுமில்லை :( சிறப்பு கட்டுரைக்கு நியமிக்கப்பட்டுள்ள கட்டுரைகள்மிக நல்ல கட்டுரைகள்
துவக்கநிலையில் உள்ள கட்டுரைகள்எழுத வேண்டியவைகள்
குறிக்கோள்இன்னும் ஓராண்டிற்குள் (ஆகத்து மாதம் 2010) இந்தியா, இலங்கை பகுதியில் வாழும் பாலூட்டிகளைப் பற்றிய நூல் அல்லது குறுவட்டு வெளியிடுதல் |
Portal di Ensiklopedia Dunia