அனைவருக்கும் வணக்கம், இந்தப் பக்கம் தமிழ் விக்கிபீடியாவில் புதிய கட்டுரையினை உருவாக்கும் பொழுது குறைந்தபட்சம் எத்தனை வாக்கியங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுப்பதற்காக உருவாக்கப்பட்டது.
குறிப்பு: ஏற்கனவே இருக்கும் பழைய கட்டுரைகள் இதற்கு விதிவிலக்கானவை.
- குறைந்தது நான்கு வாக்கியங்களைக் கொண்டிருக்க வேண்டும். (அனைத்துத் துறைகளுக்கும்) அதற்குக் குறைவான வாக்கியங்களைக் கொண்ட புதிய கட்டுரைகளை விரைவு நீக்கல் கொள்கையில் நீக்க அனுமதிக்க வேண்டும்.
- மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளை உருவாக்கக் கூடாது. (தற்போதைய இணையதள அனுகல் வசதிகளின் மூலம் எளிமையாக புதிய கட்டுரைகளுக்கு மேற்கோள்களைப் பய்னபடுத்தும் வசதியுள்ளதை நினைவில்கொள்ள வேண்டும்).
பயனர்கள் அனைவரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தால் கொள்கை முடிவு எடுக்க உதவியாக இருக்கும். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:00, 26 பெப்பிரவரி 2025 (UTC)
ஆதரவு --சத்திரத்தான் (பேச்சு) 15:09, 26 பெப்பிரவரி 2025 (UTC)
- இப்போது இப்படி ஒரு உரையாடலைத் துவக்குவதற்கான சூழல், பின்னணி ஏதாவது இருக்கிறதா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். புதிய பயனர்கள் சற்று காலம் எடுத்துக் கொண்டு தான் விக்கிப்பீடியா நடைமுறைகளைப் புரிந்து கொள்வர். கலைக்களஞ்சியத்தன்மை இல்லாத தலைப்பு என்பது தவிர்த்த மற்ற காரணங்களுக்காக கட்டுரைகளை விரைவு நீக்கல் செய்தால் அவர்கள் பங்களிப்பு ஆர்வம் குறையலாம். - இரவி (பேச்சு) 07:51, 27 பெப்பிரவரி 2025 (UTC)
விருப்பம் - ஏற்கனவே புதிய கட்டுரைகள் குறைந்தபட்சம் மூன்று வாக்கியங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் ஒரு மேற்கோளாவது இருக்க வேண்டும் என்றும் தமிழ் விக்கிப்பீடியாவில் கொள்கை எட்டப்பட்டிருப்பதாக அன்டனும் செல்வசிவகுருநாதனும் தெரிவித்திருந்தனர். அது எங்குள்ளது என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. குறைந்தபட்சம் மூன்று வரிகளாவது இருக்கவேண்டுமென்று தான் அந்த உரையாடலில் உள்ளது. ஆனால் வரி என்பது கருவியின் அளவிற்கேற்ப மாறுபடும் என்பதால் மூன்று வாக்கியங்கள் என்றே பொருள் கொள்ளவேண்டுமென்று செல்வசிவகுருநாதன் தெரிவித்திருந்தார். குறிப்பிடத்தக்கமை உள்ள பல கட்டுரைகள் மூன்று வாக்கியங்களுடன் அமைக்கப்படக்கூடியனவாக உள்ளன. சில சந்தர்ப்பங்களில் தகவல்பெட்டியில் உள்ளவற்றை மீண்டும் கட்டுரையில் சேர்ப்பதன் மூலம் வாக்கியங்களை அதிகரிக்கலாம். ஆனால் அது பொருத்தமான தீர்வு அல்ல. வேண்டுமானால் நான்கு வாக்கியங்களுக்குக் குறைவாக உருவாக்கப்படும் கட்டுரைகளை ஏனைய பயனர்கள் மேம்படுத்த முயலலாம்; குறுங்கட்டுரை என்ற வார்ப்புருவை இடலாம். விரைந்து நீக்குவதை எதிர்க்கிறேன். --சிவகோசரன் (பேச்சு) 14:26, 27 பெப்பிரவரி 2025 (UTC)
- ஏற்கனவே இப்படியான கட்டுரைகளை குறுங்கட்டுரை என வகைப்படுத்தி வருகிறோம். எனவே தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என விரும்புகிறேன். இக்கட்டுரைகள் என்றாவது ஒருநாள் விரிவாக்கம் செய்யப்படலாம். விரைந்து நீக்குவதை எதிர்க்கிறேன்.- நாஞ்சில் பாலா உரையாட 15:54, 1 மார்ச்சு 2025 (UTC)
- தங்களது கருத்திற்கு நன்றி. தற்போதுவரையில் 4882 கட்டுரைகள் குறுங்கட்டுரைகளாகவே உள்ளன. இவற்றில் பல மேற்கோள்கள் இல்லாமல் உள்ளன. புதியதாக உருவாக்கும் கட்டுரைகளையாவது நான்கு வரிகளுக்கு மேலாவது உருவாக்கலாம் என்பது என் கருத்து.நன்றி ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:56, 2 மார்ச்சு 2025 (UTC)
- @Ravidreams://இப்போது இப்படி ஒரு உரையாடலைத் துவக்குவதற்கான சூழல், பின்னணி ஏதாவது இருக்கிறதா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்// அண்மையில் இரு வரி மூன்று வரிக் கட்டுரைகளைப் புதிய பயனர்கள் இருவர் உருவாக்கியிருந்தனர். அவர்களது பக்கத்தில் குறிப்பிடும் போது கொள்கை முடிவு எடுக்கப்பட்ட பக்கத்தினை இணைப்பாகத் தரலாம் என பார்த்தபோது அவ்வகையான பக்கம் இல்லை. பலரது உரையாடல் பக்கங்களில் அறிவிப்பாக மட்டுமே இருந்தது. இங்கும் கேட்டுப் பார்த்தேன். பின்னர், கொள்கை ஒன்றை உருவாக்க இந்தப் பக்கம் துவங்கப்பட்டுள்ளது. ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:42, 2 மார்ச்சு 2025 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரை குறைந்தபட்சம் எத்தனை வாக்கியங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுப்பது அவசியம். அதற்கேற்ப வழிகாட்டல் பக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும். புதிய பயனர்களுக்கு கற்றுத் தரும்போதும், ஏற்கனவே பங்களித்து வருவோர்க்கு வழிகாட்டும்போதும், 3 வரிகளுக்குக் குறையாமல் எழுதவேண்டும் என்று சொல்கிறோம். ஆனால், இதற்கான கொள்கைப் பக்கம் இல்லை. இதன் காரணமாக குழப்பங்களும், இக்கட்டான நேரங்களும் பலமுறை ஏற்பட்டுள்ளன. அத்தோடு, வரிகள் எனும் சொல்லாடலும் சரிதானா எனும் கேள்வி என்னிடம் உள்ளது. நுட்பமாகச் சொல்வதென்றால், வாக்கியங்கள் (sentences) எனும் சொல்லே பொருத்தமானது. @Sridhar G: வாக்கியங்கள் என நீங்கள் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி! ஒருவர் அல்லது ஒரு விசயம் குறித்து 5 வாக்கியங்களிலாவது சொல்ல வேண்டும் என ஒரு வாசகனாக நான் கருதுகிறேன். இந்த எண்ணம் மனிதருக்கு மனிதர் வேறுபடலாம். எனவே பெரும்பாலானோர் ஏற்கும்வகையில், கொள்கைப் பக்கம் ஒன்றினை அவசியம் உருவாக்க வேண்டும். ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள Wikipedia:One sentence does not an article make என்பது போன்ற 'கருத்துக் கோர்வை' பக்கத்தை உருவாக்குதல் நன்மையளிக்கும் என நம்புகிறேன். இந்தப் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: If an editor cannot find enough information on a subject to be able to write at least four non-repetitive sentences about the subject, then the article should not be started until there is sufficient information to "do it justice." ஒரு பொருளைப் பற்றி 4 வாக்கியங்கள் எழுதுவதற்கான தகவல்கள் இல்லையெனில் அந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கக் கூடாது என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. 'ஒரு கட்டுரை குறைந்தபட்சம் நான்கு வாக்கியங்களைக் கொண்டிருக்க வேண்டும்' எனும் முடிவிற்கு எனது ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:46, 3 மார்ச்சு 2025 (UTC)
பரிந்துரை - நீச்சல்காரன்
- நான்கு வாக்கியங்களாவது இருக்க வேண்டும்.
- இரண்டு உள்ளிணைப்புகளாவது இருக்க வேண்டும்.
- ஒரு மேற்கோளாவது இருக்க வேண்டும்.
- ஒரு பகுப்பாவது இணைத்திருக்க வேண்டும்.
- இணையான ஆங்கிலக் கட்டுரை இருந்தால் அதனுடன் இணைத்திருக்க வேண்டும்.
இது அடிப்படைப்பான கட்டுரை அமைப்பாகப் பரிந்துரைக்கிறேன். இதில் தவறும் பட்சத்தில் கட்டுரை நீக்கப்பட வேண்டியதில்லை, இதை நோக்கி மேம்படுத்தலாம். தொகுத்தல் வார்ப்புரு இல்லாவிட்டாலோ வரைவுவெளிக்கு மாற்றாலாம். - நீச்சல்காரன் (பேச்சு) 02:25, 27 பெப்பிரவரி 2025 (UTC)
விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 02:38, 27 பெப்பிரவரி 2025 (UTC)
விருப்பம்--பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 08:03, 27 பெப்பிரவரி 2025 (UTC)
விருப்பம்--S.BATHRUNISA
@Neechalkaran: உங்களது கருத்தில் உள்ளிணைப்புகள் தவிர்த்து மற்றவற்றில் எனக்கு முழு உடன்பாடு. மொழிபெயர்ப்புக் கருவி பயன்படுத்தும் போது உள்ளிணைப்புகள் குறித்து கவலையே இல்லை. ஆனால், நேரடியாக விக்கியில் கட்டுரையினை உருவாக்கும் போது உள்ளிணைப்புகள் கொடுக்கும் போது ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளின் தலைப்பிடல் குறித்து அறிந்திருக்க வேண்டியது கட்டாயம். உதாரணமாக அமரன் எனும் திரைப்படத்தினை உள்ளிணைப்பாக நான் கொடுக்க நினைத்தால் அதன் வருடத்தினை மட்டும் கொடுக்காது அதனை அடைப்புக் குறிக்குள் கொடுக்க வேண்டும், இடைவெளி கூடாது ஆகிய case sensitives சிக்கல் எழும்.ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:47, 6 மார்ச்சு 2025 (UTC)
சந்தேகம்
மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் கட்டுரைகள் பதிவிட விரும்புகிறேன். ஏற்கனவே இருக்கும் ஊராட்சிகள் கட்டுரைகளில், ஊராட்சிகளுக்குள் அடங்கும் சிற்றூர்கள் பற்றிய கட்டுரைகளை பதிவேற்றம் செய்ய அனுமதிப்பீர்களா? அவற்றின் குறிப்பிடத்தக்கமை குறித்து கேள்வி எழுப்புவீர்களா?
-- பொதுஉதவி (பேச்சு) 10:32, 27 பெப்பிரவரி 2025 (UTC)
- உதாரணமாக, வெள்ளரிபட்டி ஊராட்சிக்குள் அடங்கும் வெள்ளரிபட்டி சிற்றூர் பற்றிய கட்டுரை எழுதலாமா?
-- பொதுஉதவி (பேச்சு) 10:42, 27 பெப்பிரவரி 2025 (UTC)
- @பொதுஉதவி இது குறித்து நாம் வேறொரு இடத்தில் உரையாடலாம் எனக் கருதுகிறேன். குறிப்பிடத்தக்கமை என்பதனையும், ஒரு கட்டுரையில் குறைந்தபட்சமாக எத்தனை வாக்கியங்கள் இருக்கவேண்டும் என்பதனையும் வெவ்வேறாக கருத வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு சட்டமன்ற உறுப்பினர் குறித்த கட்டுரைக்கு குறிப்பிடத்தக்கமை உள்ளது. ஆனால் அக்கட்டுரையில் அவர் குறித்தான தகவல்கள் இரண்டு வாக்கியங்களில் உள்ளன. இது போதுமா அல்லது இன்னும் எத்தனை வாக்கியங்களைச் சேர்த்தால், அதனை ஒரு விக்கிப்பீடியா கட்டுரையாகக் கருதலாம் என்பது இங்கு உரையாடப்பட வேண்டியது என்பதாக நான் நினைக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:26, 27 பெப்பிரவரி 2025 (UTC)
- நன்றி!
- -- பொதுஉதவி (பேச்சு) 11:47, 27 பெப்பிரவரி 2025 (UTC)
இறுதி அடிப்படை அமைப்பு - வாக்கெடுப்பு
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. பயனர்களின் கருத்துகள், பரிந்துரையின்படி கீழ்க்காணும் வாக்கெடுப்பினைக் கோருகிறேன். இரு வார காலத்திற்குப் பின் வாக்கெடுப்பின்படி கொள்கைப் பக்கத்தில் இற்றை செய்யப்படும். நன்றி ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:02, 6 மார்ச்சு 2025 (UTC)
- கொள்கை எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பது குழப்பமாக உள்ளது. புதிய பயனர்களுக்குப் பகுப்பு, விக்கித்தரவு இணைப்பு, மேற்கோள் சேர்த்தல் தெரிந்திருக்க அவசியமில்லை. இவை இல்லாத கட்டுரைகளை மேம்படுத்தும் பொறுப்புகளைப் பிற அனுபவம் வாய்ந்த பயனர்களே பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு புதிய பயனர் தொடர்ந்து குறுங்கட்டுரைகளை உருவாக்கிக் கொண்டிருந்தால் அவருக்குத் தக்க வழிகாட்டல் வழங்கப்பட வேண்டும். கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்க தலைப்புகளை விரைவாக நீக்குவது புதிய பயனர்களை ஊக்கம் குன்றச் செய்யும். - இரவி (பேச்சு) 10:25, 12 மார்ச்சு 2025 (UTC)
- // தெரிந்திருக்க அவசியமில்லை// விக்கிப்பீடியாவில் புதியதாக கட்டுரை உருவாக்குபவருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவில் இவ்வாறு ஒரு கொள்கை உள்ளது. எனவே, நீங்கள் சேருங்கள் என்று வலியுறுத்துவதற்காகவே இந்த வாக்கெடுப்பு.
- //விரைவாக நீக்குவது புதிய பயனர்களை ஊக்கம் குன்றச் செய்யும்// மேற்கானும் பயனர்களின் கருத்துப்படி நீக்குவது இல்லை என்பதாலேயே வாக்கெடுப்பில் நீக்கம் குறித்து குறிப்பிடவில்லை. விரைவு நீக்கல் தகுதியின் கீழ் வராத புதிய நபர்கள் உருவாக்கும் கட்டுரைகளை நீக்காமல் வரைவுக் கட்டுரைகள் பக்கத்திற்கு நகர்த்தப்பட்டு வருவதைக் காணலாம். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:32, 16 மார்ச்சு 2025 (UTC)
- சரி. புதுப்பயனர்கள் கட்டுரைகளை மேம்படுத்த உரிய காலம் அளிப்பது நல்லது. உடனே கட்டுரைகளை வரைவுப் பக்கத்திற்கு நகர்த்துவது அவர்களை ஊக்கம் குன்றச் செய்யும். விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உடனுக்குடன் வெளியாவதைக் காண்பதே புதுப்பயனர்களை விக்கிப்பீடியா நோக்கி ஈர்க்கும். தேவையற்ற நடைமுறைகளைக் கொண்டு வருவது அந்த அனுபவத்தைக் குலைக்கும். ஒரு மாத காலம் அவகாசம் அளித்த பிறகு வேண்டுமானால் வரைவுப் பக்கத்திற்கு நகர்த்தலாம். நன்றி. - இரவி (பேச்சு) 06:53, 16 மார்ச்சு 2025 (UTC)
குறைந்தது நான்கு வாக்கியங்கள்
ஆதரவு
ஆதரவு - ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:02, 6 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு ---சத்திரத்தான் (பேச்சு) 15:08, 6 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 17:59, 6 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:34, 6 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு--சா. அருணாசலம் (உரையாடல்) 03:15, 7 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 10:48, 17 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு --தாமோதரன் (பேச்சு) 11:04, 17 மார்ச்சு 2025 (UTC)
எதிர்ப்பு
நடுநிலை
நடுநிலை - தகவல்பெட்டி இருந்தால் மூன்று வாக்கியங்களுடனும் பயனுள்ள ஒரு கட்டுரை அமையலாம். தகவல் பெட்டி இல்லாதவிடத்து நான்கு வாக்கியங்களை ஆதரிக்கிறேன். --சிவகோசரன் (பேச்சு) 14:28, 8 மார்ச்சு 2025 (UTC)
நடுநிலை - சில துறைசார் கட்டுரைகளில் குறைந்தது இரண்டு வரிகள் மட்டுமே கூட எழுத முடிவதாக இருக்கும். எடுத்துக்காட்டுக்கு, விண்மீன்கள், உயிரியச் சிற்றினங்கள். எனவே, பொதுவாக ஏற்கனவே உள்ள மூன்று சொற்றொடர்கள் அளவு என்பதே போதுமானது. தேவைப்படும் இடங்களில் தலைப்பின் முக்கியத்துவம் பொருத்து நெகிழ்வுத் தன்மையும் இருக்க வேண்டும். நான்கு சொற்றொடர்களுக்கு மேல் எழுதக்கூடிய கட்டுரைகளில் குறைந்தது நான்கு சொற்றொடர்களாவது இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது ஏற்புடையது. கட்டுரை எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவோ பிற காரணங்களுக்காகவோ யாரும் தேவையற்ற குறுங்கட்டுரைகளைத் தவிர்ப்பது நல்லதே! --இரவி (பேச்சு) 07:05, 16 மார்ச்சு 2025 (UTC)
நடுநிலை -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:45, 16 மார்ச்சு 2025 (UTC)
முடிவு
7 பேர் ஆதரவு 0 எதிர்ப்பு 3 நடுநிலை எனும் முடிவில் 21-03-2025 நாளது தேதியில் இருந்து உருவாக்கப்படும் புதிய கட்டுரைகளுக்கு குறைந்தபட்சமாக நான்கு வாக்கியங்கள் இருக்க வேண்டும் எனும் கொள்கை அறிவிக்கப்படுகிறது.
ஒரு மேற்கோளாவது கட்டாயம்
ஆதரவு
ஆதரவு - ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:02, 6 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு ---சத்திரத்தான் (பேச்சு) 15:09, 6 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 18:00, 6 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:34, 6 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு--சா. அருணாசலம் (உரையாடல்) 03:15, 7 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு - பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 03:38, 7 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு --சிவகோசரன் (பேச்சு) 14:28, 8 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு --கி.மூர்த்தி (பேச்சு) 10:49, 17 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு --தாமோதரன் (பேச்சு) 11:04, 17 மார்ச்சு 2025 (UTC)
எதிர்ப்பு
நடுநிலை
நடுநிலை கீழை நாடுகள் தொடர்பான பல தலைப்புகளில் போதிய சான்றுகள் கிடைப்பதில்லை என்பது உலகளவிலேயே ஒரு பிரச்சினையாகப் பேசப்பட்டு வருகிறது. சில துறைகளில் ஒன்றின் இருப்பே கலைக்களஞ்சியக் குறிப்பிடத்தக்கமை நல்கும். ஆனால், அதற்குச் சான்று இல்லாமலும் இருக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, ஒரு கல்லூரி என ஒன்று இருந்தாலே அதற்கு ஒரு குறிப்பிடத்தக்கமை இருக்கிறது எனக் கருதலாம். ஆனால், அதற்குத் தக்க சான்று இல்லை என்ற காரணத்திற்காக, அதற்குக் கட்டுரை எழுதக் கூடாது என்று சொல்ல முடியாது. பல ஆயிரக்கணக்கான விக்கிப்பீடியா கட்டுரைகளை நாம் ஒரே ஒரு மூல ஆதாரத்தின் அடிப்படையில் எழுதியிருப்பதையும் ஒப்புநோக்கலாம். எனவே, மேற்கோள் இருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் அது இல்லை என்ற காரணத்திற்காக நீக்கும்போது கட்டுரையின் தன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும். --இரவி (பேச்சு) 06:58, 16 மார்ச்சு 2025 (UTC)
நடுநிலை-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:47, 16 மார்ச்சு 2025 (UTC)
முடிவு
9 பேர் ஆதரவு 0 எதிர்ப்பு 2 நடுநிலை எனும் முடிவில் 21-03-2025 நாளது தேதியில் இருந்து உருவாக்கப்படும் புதிய கட்டுரைகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு மேற்காளாவது சேர்க்கப்பட வேண்டும் எனும் கொள்கை அறிவிக்கப்படுகிறது.
பகுப்பு கட்டாயம்
ஆதரவு
ஆதரவு - ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:02, 6 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:34, 6 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு --சா. அருணாசலம் (உரையாடல்) 03:15, 7 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 10:50, 17 மார்ச்சு 2025 (UTC)
எதிர்ப்பு
நடுநிலை
நடுநிலை ---சத்திரத்தான் (பேச்சு) 15:09, 6 மார்ச்சு 2025 (UTC)
நடுநிலை--நந்தகுமார் (பேச்சு) 18:00, 6 மார்ச்சு 2025 (UTC) (எப்படி இணைப்பது என்று தெரியாதவர்களுக்கு மிகுந்த சிரமத்தினைக் கொடுக்கலாம்.)
நடுநிலை - பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 03:38, 7 மார்ச்சு 2025 (UTC)
நடுநிலை - பகுப்பில்லாத கட்டுரைகளுக்குப் பகுப்புச் சேர்த்தல் இலகுவான ஒன்று. கட்டுரைகளைக் கவனிக்கும் ஏனைய பயனர்கள் இதைச் செய்ய முடியும்.--சிவகோசரன் (பேச்சு) 14:28, 8 மார்ச்சு 2025 (UTC)
நடுநிலை - துப்புரவுப் பணியில் ஈடுபடும் பயனர்கள் உரிய பகுப்பில் சேர்க்கலாம். --இரவி (பேச்சு) 07:00, 16 மார்ச்சு 2025 (UTC)
நடுநிலை-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:48, 16 மார்ச்சு 2025 (UTC)
நடுநிலை --தாமோதரன் (பேச்சு) 11:04, 17 மார்ச்சு 2025 (UTC)
முடிவு
4 பேர் ஆதரவு 0 எதிர்ப்பு 7 நடுநிலை எனும் முடிவில் புதிய பயனர்கள் புதியதாக உருவாக்கும் கட்டுரையில் பகுப்பு சேர்ப்பது என்பது கட்டாயமில்லை
எனும் கொள்கை அறிவிக்கப்படுகிறது.
விக்கித்தரவில் இணைத்தல் கட்டாயம்
ஆதரவு
ஆதரவு - ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:02, 6 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:34, 6 மார்ச்சு 2025 (UTC)
ஆதரவு--சா. அருணாசலம் (உரையாடல்) 03:15, 7 மார்ச்சு 2025 (UTC)
எதிர்ப்பு
எதிர்ப்பு - புதிய பயனர்களுக்கும் எப்படி இணைப்பது என்று தெரியாதவர்களுக்கும் மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும். --சிவகோசரன் (பேச்சு) 14:28, 8 மார்ச்சு 2025 (UTC)
எதிர்ப்பு விக்கித்தரவு சேர்க்கும் பணியைப் பிற அனுபவம் வாய்ந்த பயனர்கள் பொறுப்பெடுத்துக் கொள்வது நல்லது. புதிதாக வருபவர்களுக்கு விக்கித்தரவு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் சொல்லப்போனால், நெடுநாட்களாகப் பங்களிக்கும் பலருக்குமே கூட விக்கித்தரவு புரிபடாமல் இருக்கலாம். --இரவி (பேச்சு) 06:59, 16 மார்ச்சு 2025 (UTC)
- அனுபவம் வாய்ந்த பயனர்கள் இணைக்கலாம். ஆங்கிலத்தில் இல்லாத கட்டுரைகள் எழுதப்பட்டால் எவ்வாறு இணைக்கமுடியும்.?
நடுநிலை
நடுநிலை
நடுநிலை--நந்தகுமார் (பேச்சு) 18:01, 6 மார்ச்சு 2025 (UTC) (எப்படி இணைப்பது என்று தெரியாதவர்களுக்கு மிகுந்த சிரமத்தினைக் கொடுக்கலாம்.)
நடுநிலை - பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 03:38, 7 மார்ச்சு 2025 (UTC)
நடுநிலை --தாமோதரன் (பேச்சு) 11:04, 17 மார்ச்சு 2025 (UTC)
முடிவு
3 பேர் ஆதரவு 3 எதிர்ப்பு 4 நடுநிலை எனும் முடிவில் புதிய பயனர்கள் உருவாக்கும் புதிய கட்டுரைகள் விக்கித்தரவில் இணைப்பது கட்டாயமில்லை எனும் கொள்கை அறிவிக்கப்படுகிறது.
வரைவுக்கு நகர்த்துதல் பற்றி கொள்கை உரையாடல் தேவை
ஒரு கட்டுரையை எந்தச் சூழலில் வரைவுக்கு நகர்த்த வேண்டும் என்று இதற்கு முன்பு உரையாடப்பட்டிருக்கிறதா? ஒரு புதிய கட்டுரையில் அடிப்படையாக என்ன இருக்க வேண்டும் என்கிற வரையில் கொள்கை உரையாடியது சரி. ஆனால், அவ்வாறு இல்லாதபட்சத்தில் வரைவுக்கு நகர்த்துவது பற்றி நாம் உரையாடவில்லை. ஒரு புதிய பயனர் உடனுக்குடன் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் வெளியாவதைத் தான் தனக்கான உந்துதலாகக் கருதிப் பங்களிப்பார். அவர் விக்கி நடைமுறைகளைக் கற்றுக் கொண்டு தன்னுடைய பங்களிப்பை மேம்படுத்திக் கொள்ள போதிய காலம் தராமல் வரைவுக்கு நகர்த்தும் போது அந்த ஊக்கம் குன்றலாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் இவ்வாறு வரைவுக்கு நகர்த்தும்போது அனுபவம் வாய்ந்த பயனர்களே கூட வெறுத்துப் போய் கட்டுரையை அப்படியே விட்டுவிடுவது உண்டு. ஒரு புதிய கட்டுரையை மட்டுமல்ல எந்த ஒரு கட்டுரையையும் மேம்படுத்துவது அனைவரின் கூட்டுப் பொறுப்பே. ஒரு பயனர், நாம் சுட்டிக் காட்டும் தர அளவீடுகளைக் கண்டுகொள்ளாமல் மளமளவென ஏராளமான குறுங்கட்டுரைகளை உருவாக்கிக் கொண்டு செல்லும் போது மட்டும் வரைவுக்கு நகர்த்துவதை ஒரு வழியாகப் பின்பற்றலாம். மற்றபடி, கட்டுரையை மேம்படுத்துவதற்கான அறிவிப்பைச் சேர்த்து ஓரிரு வார காலமாவது தர வேண்டும். இரவி (பேச்சு) 09:35, 21 மார்ச்சு 2025 (UTC)
- //ஆனால், அவ்வாறு இல்லாதபட்சத்தில் வரைவுக்கு நகர்த்துவது பற்றி நாம் உரையாடவில்லை.// ஆம் , இது குறித்தும் உரையாடியிருக்க வேண்டும். நீக்க வேண்டாம் என்று பலரும் கருத்திட்டதால் வரைவுக்காகவாவது நகர்த்தலாம் என்று கருதினேன். அதிகபட்சமாக இரு வார காலம் தரலாம் என்பது என் விருப்பம். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:50, 21 மார்ச்சு 2025 (UTC)