விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமாWikipedia:தகவல் காத்திருப்பு வரிசை பக்கத்தில் பயனர் கருத்துக்கள், பரிந்துரை கையெழுத்துக்கள் ஆகியவை உள்ளன. இவை புதுப்பயனர்கள் அறிய வேண்டியதில்லை. அவர்கள் வாசிப்பு அனுபவத்துக்கும் ஊறாக இருக்கும். எனவே முதற்பக்கத்தில் இருந்து இணைப்பு கொடுக்க இந்தப் பக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரைக்கும் இன்னும் சில வரிகளும் படிமமும் சேர்க்கலாம். பக்கம் நீளும்போது தொகுத்தும் வைக்கலாம்--ரவி 16:00, 12 அக்டோபர் 2006 (UTC) பிப்பிரவரிபிப்பிரவரி மாதத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 29 நாட்கள் வரும், மற்ற ஆண்டுகளில் எல்லாம் 28 நாட்கள் தானே? அப்படியெனில் எல்லாக் கிழமைகளும் 4 முறைதானே வரும்? இது பதினோரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வது எனக் கூறியுள்ளது விளங்கவில்லையே? நான் ஏதும் தவறாகக் கணக்கிட்டுள்ளேனா? -- சுந்தர் \பேச்சு 05:02, 19 பெப்ரவரி 2010 (UTC) ஆம் சுந்தர், பெப்ரவரி 14 க்கான உரையாடல் பக்கத்தில் http://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பீடியா_பேச்சு:உங்களுக்குத்_தெரியுமா/பெப்ரவரி_14,_2010&oldid=486632 நானும் சுட்டிக்காட்டியிருந்தேன் (தாங்கள் இங்கு பதித்ததைப் பார்த்திருக்கவில்லை) . Kanags அத் தகவலை நீக்கி உள்ளதாக குறிப்பிடும் மறுமொழியையும் அங்கு காணலாம். User:கா. சேது 25 பெப்ரவரி 2010 கோரிக்கைஉங்களுக்குத் தெரியுமாவுக்கு திட்டப்பக்கத்தில் விடப்படும் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு முதற்பக்கத்தில் வெளியிடப்பட்டவுடன் தயவுசெய்து அப்பரிந்துரைகளை நீக்கி விடவும். இதனை உங்களுக்குத் தெரியுமாவைத் தற்போது வெளியிட்டு வரும் பயனர்கள் கவனத்தில் கொள்ளுமாறு பணிக்கிறேன். இற்றைப்படுத்தல்தமிழ் விக்கிப்பீடியாவில் சில இடங்களில் இன்றைப்படுத்தல் என்று குறிப்பிட்டிருப்பதைக் காண்கிறேன். எனினும் பொது வழக்கில் இற்றைப்படுத்தல் என்றே பயன்படுத்தப்படுகிறது.--பாஹிம் 06:44, 17 ஏப்ரல் 2011 (UTC) gifபொதுவாக முதற்பக்க உங்களுக்குத் தெரியுமா பகுதியில் gif படங்கள் இடம் பெருவதுண்டா..?--தென்காசி சுப்பிரமணியன் 12:31, 28 ஆகத்து 2011 (UTC)
பரிந்துரை- வெளி இணையதள இணைப்புவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா பரிந்துரைகளில் “நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டம் குந்தன்குளம்...” எனும் பரிந்துரையில் குந்தன்குளம் என்பதைச் சொடுக்கினால் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணையப் பக்கத்துக்குச் செல்கிறதே...? விக்கிப்பீடியா கட்டுரைக்குள் செல்லும்படி இணைக்க வேண்டும். மேலும் இது குந்தன்குளம் என்று அழைக்கப்படுவதில்லை. திருநெல்வேலி மாவட்ட மக்கள் இதைக் “கூந்தன்குளம்” என்றுதான் அழைக்கிறார்கள் என நினைக்கிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:15, 3 செப்டெம்பர் 2011 (UTC)
விதிகள் பற்றிய உரையாடல்
//தகவலுழவன்: அங்கிருக்கும் ஓரிரு வரிகளைப் படித்து பின்பு, அக்கட்டுரையை மேலும் படிக்கத் தூண்டுமாறு, அவ்வரிகள் இருத்தல் வேண்டும் என்ற விதி, //
//பொதுவாக அனைத்துக்கும்இருந்தால், நல்ல பலனைத்தரும்.
பொதுவாக உ.தெ. பகுதியில் ஒரே கட்டுரையிலிருந்து 2 செய்திகள் எடுக்கப்படுவதில்லை. வெவ்வேறு நட்களுக்கும் வருவதில்லை. அதன் காரணம் அனைத்து பயனர்கள் (முக்கியமாக புதுப் பயனர்கள்) எழுதியவையை காட்சிப்படுத்த வேண்டும் என்பதே. பக்கத்தைப் பார்ப்பவர்களை விட தற்போது புதுப்பயனர்களை தக்க வைக்க வேண்டும். நான் முடிந்தளவு ஒரு புதுப்பயனரின் 5க்கும் மேற்பட்ட தகவல்களை அடுத்தடுத்த வாரங்களில் கொடுத்து அவருக்கு பதக்கம் கொடுப்பது வழக்கம்.>5 ஆக இருக்கும் பொது. இன்னொன்று சில கட்டுரைகளில் 100க்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமாக் தகவல்களை எடுக்க முடியும் என்றாலும் அனைவர் எழுதிய கட்டுரையும் வரவேண்டும் என்பதே உ.தெ. நோக்கம். //ஒரு கட்டுரையின் வரிகள், எந்த அடிப்படையில், உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் புலப்படுத்தப்படுகிறது என்பதனை நான் அறியேன். அங்கிருக்கும் ஓரிரு வரிகளைப் படித்து பின்பு, அக்கட்டுரையை மேலும் படிக்கத் தூண்டுமாறு, அவ்வரிகள் இருத்தல் வேண்டும் என்ற விதி, பொதுவாக அனைத்துக்கும்இருந்தால், நல்ல பலனைத்தரும். ஒரு கட்டுரையினை அதிகம் எழுதியவருக்கே, அதன் முக்கியத்துவம் தெரியும்.// நீங்கல் கூறுவது சரியே. ஆனால் அப்பயனர் அதற்கான தகவலைப் பரிந்துரைத்தால் தானே அதைச் செய்ய இயலும். இரவி இடையில் நிறைய பயனர்களின் பேச்சுப்பக்கத்தில் இதைப்போன்ற பரிந்துரைகளை வினவியும் பெரிய பலனில்லை. //அணுக்கர்(sysop) ஒருவர் (நிருவாகி என்ற சொல் தமிழல்லவே.) அதனைப் படித்து அவ்வரிகளை எடுப்பது என்பது அவரது பணிச்சுமையையே அதிகரிக்கும்.// ஆனாலும் நமக்கிருக்கும் தற்போதைய புதுப்பயனர் தக்கவைப்பு வழி பணிச்சுமையையே அதிகரித்தாலும் செய்து தான் ஆக வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:10, 26 சூலை 2012 (UTC) //அங்கிருக்கும் ஓரிரு வரிகளைப் படித்து பின்பு, அக்கட்டுரையை மேலும் படிக்கத் தூண்டுமாறு, அவ்வரிகள் இருத்தல் வேண்டும் என்ற விதி, பொதுவாக அனைத்துக்கும்இருந்தால், நல்ல பலனைத்தரும்.// இதுவும் ஒரு விதத்தில் அணுக்கரின் பணிச்சுமையை அதிகரிக்கவே செய்யும். அந்த தகவலை தேடுவதற்கே நேரம் சரியாக இருக்குமே. ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இதில் அதிகாரம் எடுத்தால் நீங்கள் கூறியது சாத்தியமே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:17, 26 சூலை 2012 (UTC)
இத்திட்டப்பக்கத்தினை பொருத்தவரை, அதிக ஈடுபாடு கொண்டவர் என்ற முறையில், உங்கள் அனவரது செயலும் சிறப்பாகத்தான் இருக்கும் என்றெண்ணி, இத்துடன் இவ்வுரையாடலை முடிக்கிறேன். மீண்டும் பிரிதொரு உரையாடலில் சந்திப்போம்.வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 16:36, 26 சூலை 2012 (UTC) ஒரு யோசனை?தமிழகத்தின் மாநில மலர் செங்காந்தள் என்று கொடுப்பதற்கு தமிழகத்தின் மாநில மலரை அறிய இங்கு சொடுக்குங்கள் என்று கொடுத்தால் என்ன? அப்படி எனில் நம் வழிக்கு அவர்கள் வந்துதான் ஆக வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:44, 26 சூலை 2012 (UTC)
எனக்கும் தேனியார் கூறியதில் உடன்பாடே. நான் தற்போது உங்களுக்குத்தெரியுமா தகவல் சேர்த்தல், வார்ப்புரு இடுதல், முதற்பக்க கட்டுரை வார்ப்புரு இடுதல் வருகின்ற முதல் தேதியிலிருந்து கூட்டு முயற்சிக்கட்டுரை பொருப்பு போன்றவற்றையும் செய்கிறேன். இப்போது இது தொடங்கப்பட்டால் மேலும் பளுஅதிகரிக்கவே செய்யும். 2013ல் வேறு எவருக்காவது உ.தெ. பொறுப்பைக் கொடுத்துவிட்டு இந்த வினாவிடை பொறுப்பை எடுத்துக்கொள்வதாக என் எண்ணம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:35, 30 சூலை 2012 (UTC) பயனர்களை உ.தெ கட்டுரைகளை உருவாக்க தூண்டல்பயனர்களை உ.தெ கட்டுரைகளை உருவாக்க தூண்டல் வழிகாட்டுதல்களை ஏற்படுத்திக் கொடுத்து அதன் மூலம் புதுக்கட்டுரைகளும் உ.தெ இற்றைப்படுத்தலுக்கு தகவல்களையும் திரட்ட முடியுமா? வெறுமனே சில நாடுகளின் சுதந்திர தினம், தேசிய தினம், விடுதலை தினம் போன்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது என்பது பெரிய முக்கியத்துவம் பெறாது ஒற்றைக் கருத்துள்ள சொற்களையே தெரிவிக்கின்றது. பல துறைகளில் தகவல்கள் கிடைப்பதை ஊக்குவிக்க வேண்டும். தேவையென்றால் ஓர் திட்டமாகவும் முன்னெடுக்கலாம். எ.கா: Construction records - இங்கு புதுக்கட்டுரைகளுக்கும் உ.தெ இற்றைப்படுத்தலுக்கு தேவையான பல தகவல்களைப் பெறலாம். அவ்வாறே பல துறைகள் பற்றிய புதுப்புது செய்திகள் குவிந்து கிடக்கின்றன. சுவாரசியமான துணுக்குகள் வெளியேயும் உள்ளன. உறுதியானால் புதுக்கட்டுரைகளாக்கி விடலாம் அல்லது ஏற்கெனவே உள்ளவற்றை உ.தெ.க்கு பரிந்துரைக்கலாம். இப்புதிய துணுக்குத் தேடுதலே என்னை ஆர்வமான துறைகளில் புதுக்கட்டுரைகள் எழுதவும், பரிந்துரைக்கவும் தூண்டுகின்றன. --Anton·٠•●♥Talk♥●•٠· 15:17, 25 அக்டோபர் 2013 (UTC) +1 எனக்கு இதில் விருப்பம் தான். நான் வரலாற்று ஆய்வுப்பக்கம் திரும்பியதால் என்னால் இவற்றில் கவனம் செலுத்த முடியவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:58, 25 அக்டோபர் 2013 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia