விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரைப் போட்டி முன்தேர்வுகட்டுரைப் போட்டிக்கான பதிவுகள் வரத் தொடங்கியுள்ளன. இவற்றை முன் தேர்வுக்கென நம் குழுவுக்கு மின்மடல் வழியாக அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். அத்தோடு முன் தேர்வுக்கான முறையையும் நாம் இறுதி செய்ய வேண்டும். என் கருத்து கீழே. -- சுந்தர் \பேச்சு 16:33, 5 ஏப்ரல் 2010 (UTC) தகுதிகள்முதற்கண் அடிப்படை ஏற்புத் தகுதிகளை உறுதி செய்ய வேண்டும். அவை நம் விதிமுறைகளில் இருந்த வரும். காட்டாக, மிகச் சிறிய கட்டுரை, கலைக்களஞ்சியத் தலைப்பு அல்லாமல் வலைப்பதிவு போன்ற அமைப்பு, தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் உரை, அளவுக்கதிகமான எழுத்து மற்றும் இலக்கணப்பிழைகள் போன்றவற்றைப் பரணேற்றிவிட்டுப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். முறை
மேற்கூறிய முறையைச் செப்பம் செய்து ஒத்த தகவல் பக்கத்தில் இடலாம். செல்வா போன்று ஆசிரியப் பணியில் இருப்பவர்கள் தாம் பின்பற்றும் மதிப்பிடுதல் முறையைப் பரிந்துரைத்தால் நன்று. -- சுந்தர் \பேச்சு 16:33, 5 ஏப்ரல் 2010 (UTC) கட்டுரைகளை வடிகட்டும் குழுசுந்தர் மேலே குறிபிட்ட படி, வரும் கட்டுரைகளில் பொருந்தாதவற்றை வடிகட்டி அடுத்த நிலை மதிப்பீட்டுக்கு அளிக்க வேண்டும். இதில் உதவ ஆர்வம் / நேரம் உள்ளோர் தயவு செய்து உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவிக்கவும். நன்றி--ரவி 07:10, 7 ஏப்ரல் 2010 (UTC)
நன்றி கலை. முதல் தொகுதி கட்டுரைகள் கிடைத்து, குழுவையும் உருவாக்கிவிட்டால் நாமே கூடி உரையாடி தேவையான வழிமுறைகளை வகுத்துக் கொள்ளலாம்--ரவி 09:55, 7 ஏப்ரல் 2010 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia