விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2025

முதற்கட்ட உரையாடல்

01-டிசம்பர்-2024 அன்று நடந்த மாதாந்திரக் கூட்டத்தில், புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்களுக்கு உள்ளகப்பயிற்சி வழங்குவது குறித்து பயனர்:சத்திரத்தான் உரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து விரிவான முறையில் கலந்துரையாடல் நடைபெற்றது. உள்ளகப்பயிற்சியை வழங்குவதற்கான கொள்கைகள், வழிமுறைகள், வழிகாட்டல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய செயல் திட்டப் பக்கத்தை உருவாக்கிட அப்போது பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி எனும் பக்கம் உருவாக்கப்பட்டு, இறுதிவடிவம் தருவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு உள்ளகப்பயிற்சி வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், இதனை நமது பரப்புரை நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கருதி இந்தத் திட்டப் பக்கத்தை ஆரம்பித்துள்ளேன். @சத்திரத்தான் புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்களுக்கு உள்ளகப்பயிற்சி வழங்குவது குறித்து ஒரு விளக்கவுரையை இங்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதனடிப்படையில் இந்தத் திட்டப் பக்கத்தை விரிவாக்கம் செய்ய உதவிகரமாக இருக்கும். முன்மொழிவின் வரைவை முடித்ததும் ஆலமரத்தடியில் அறிவித்து, மற்ற பயனர்களின் கருத்துகளையும் பெறுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:41, 10 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]

புதுக்கோட்டை கல்லூரியின் விருப்பம்

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை 2023-24 கல்வியாண்டு முதல் மாற்றியமைத்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் பெரும்பான்மையான கல்லூரிகளில் உள்ளகப் பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இளநிலை முதுநிலை மாணவர்கள் முதலாமாண்டு முடிவில் 20/30 மணி நேரப் பயிற்சியினை தொழிலகம்/நிறுவனம்/ஊடகம் உள்ளிட்ட பிற அமைப்பில் பெற்று அதற்கான அறிக்கையினை சான்றிதழுடன் கல்லூரிக்கு சமர்ப்பிக்கவேண்டும். இச்சான்று அடிப்படையில் 2 தரப்புள்ளிகள் வழங்கப்படும். இது அவர்களுடைய பாடத்திட்டத்துடன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தஞ்சாவூர் 20ஆம் ஆண்டு பயனர் கூடத்தில் கருத்து தெரிவித்ததன் அடிப்படையில், 2024 சூன் மாதம் புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றியதன் அடிப்படையில் விக்கியில் உள்ளக பயிற்சி வாய்ப்புக் குறித்தும் கருத்து தெரிவித்தேன். இதன் அடிப்படையில் இக்கல்லூரி விருப்பம் தெரிவித்து தொடர்பு கொண்டனர். முதல் கட்டமாக 50 பேருக்குத் தமிழ்த் துறையின் சார்பில் விருப்பம் தெரிவித்துள்ளனர். முன்னர் நடைபெற்ற உள்ளகப் பயிற்சியின் அடிப்படையில் இப்பயிற்சியினை அமைக்கலாம் என்பது எனது கருத்து. சத்திரத்தான் (பேச்சு) 04:20, 15 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]

@சத்திரத்தான் விரிவாக விளக்கியமைக்கு நன்றி! கல்லூரி தொடர்பான விவரங்களை திட்டப் பக்கத்தில் இட்டுள்ளேன். இந்தத் திட்டத்தை எத்தனை நாட்களுக்கு நடத்தவேண்டும், எப்போது ஆரம்பித்து எப்போது முடிக்கவேண்டும் ஆகியனவற்றை தொடர்ந்து உரையாடி முடிவு செய்வோம். எவ்வாறு நடத்தவேண்டும் என்பது குறித்தும் ஒருமித்த கருத்தை எட்டுவோம். இந்தத் திட்டத்திற்கான முறைப்படியான அறிவிப்பை ஆலமரத்தடியில் இடுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:57, 16 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
எத்துறை மாணவர்கள் என்று கேட்க வந்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள். தமிழ்த் துறை மாணவர்கள் என்பதும் நமக்கு நல்லது தான். இளநிலை எத்தனை மாணவர்கள், முதுநிலை எத்தனை மாணவர்கள்? முதலாமாண்டு முடிவில் அவர்கள் அறிக்கை தர வேண்டும் என்றால், அவர்களின் முதலாமாண்டு எப்போது முடியப் போகிறது? இரண்டாம் semester முடிந்து வரும் விடுமுறைக் காலத்தில் இந்தப் பயிற்சி நடைபெற வேண்டுமா? இல்லை, இப்போதிருந்தே இணைய வழி தொடங்கி நடத்தலாமா? பிற துறைகளில் internship என்பது தேர்வுகள் முடிந்த விடுமுறைக் காலத்தில் பிற நிறுவனங்களில் பங்கு கொள்வதாக இருக்கும். இல்லையெனில், இறுதி semester முழுக்கவே இதற்கு ஒதுக்குவார்கள். இளநிலை, முதுநிலை மாணவர்கள் இந்த internship மூலம் பெற்றுக் கொள்ள வேண்டிய learning outcomes என்று கல்லூரி/பல்கலை ஏதாவது நிர்ணயித்துள்ளதா? இந்த விவரங்கள் கிடைத்தால் மேற்கொண்டு பயிற்சித் திட்டத்தை வடிவமைக்க உதவிகரமாக இருக்கும்? - இரவி (பேச்சு) 13:52, 16 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
திரு இரவி அவர்களுக்கு, வணக்கம். உள்ளகப் பயிற்சி என்பது கலை அறிவியல் கல்லூரிகளில் தற்பொழுதுதான் அறிமுகம் ஆகின்றது. இளநிலை மாணவர்களைப் பொறுத்தவரையில் நான்காம் பருவத்தின் முடிவில் நடைபெறும். முதுநிலை மாணவர்கள் என்றால் இரண்டாம் பருவ முடிவில் நடைபெறும். இக்கல்லூரிதான் முதலில் நம்மிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். முதன் முதலாக அறிமுகம் ஆவதால் 2023ஆம் கல்வி ஆண்டில் முடித்தவர்கள் கல்வியினை முடிப்பதற்குள் முடிக்கவேண்டும். பயிற்சியின் நிறைவாக சான்றிதழுடன் பயிற்சி அறிக்கை சமர்பிக்கவேண்டும். பயிற்சி நேரடி பயிற்சியாக அமைந்தால் நல்லது. நேரடியாக கலந்துகொள்ள இயலா விருப்பம் உள்ள வெளிநாட்டு விக்கிப்பீடியர்களை இணையவழியில் பங்கேற்க செய்யலாம். அதிக பட்சம் 30 மணி நேரம் என்பதால் பயிற்சி பெறுபவர்கள் கட்டுரைகளை இணையத்தில் உருவாக்கச் செலவிடும் நேரத்தினையும் கணக்கிட்டு பயிற்சியினை அமைத்துக்கொள்ளலாம். இருநாட்கள் நேரடி பயிற்சி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. பெரும்பாண்மையான மாணவர்கள் தமிழ்/ஆங்கிலத் துறையினைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அனைவரும் இளநிலை மாணவர்களே! --சத்திரத்தான் (பேச்சு) 14:39, 16 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
சரி, இளநிலை தமிழ்/ஆங்கிலத் துறை மாணவர்கள் 50 பேர் முதற்கட்டமாகப் பயிற்சிக்கு இணைவர், அவர்களுக்குச் சனவரி 2025 தொடங்கி ஏப்ரல் 2025க்குள் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதாகப் புரிந்து கொள்கிறேன். கண்டிப்பாக அவர்கள் கட்டுரைகள் இயற்றுவது உள்ளிட்ட பிற பணிகளில் ஈடுபடுவதையும் சேர்த்துத் தான் பயிற்சிக் காலம் கணக்கிடப்பட வேண்டும். இவர்கள் இப்பயிற்சியின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டிய learning outcomes என்ன என்பதைக் கல்லூரி/பல்கலை அறியத் தந்தால் உதவும். அப்படி எதுவும் அவர்கள் தரப்பில் இல்லையென்றால், அதையும் நாம் வரையறுக்க வேண்டியிருக்கும். @TNSE Mahalingam VNR போன்ற ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிப் பேராசிரியர்கள் இதற்கு உதவ முடியும் என்று கருதுகிறேன். அந்த learning outcomesஐ வரையறை செய்து விட்டுப் பிறகு அதன் அடிப்படையில் விக்கிப்பீடியா சார்பாக எத்தனை மணிநேரங்கள்/நாட்கள் பயிற்சி வழங்குவது, அதை இணையம் வழி வழங்குவதா நேரடியாக வழங்குவதா என்பதைப் பிறகு திட்டத்தின் தேவைக்கு ஏற்ப முடிவு செய்வோம். இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு, இந்த ஒரு கல்லூரிக்கு மட்டும் என்று எண்ணாமல், இது போல் இனி ஆர்வம் காட்டக்கூடிய அனைத்துக் கல்லூரிகளுக்கும் பொருந்தும் வகையில் திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இப்பயிற்சிக்கான பயிற்சி வளாகம்/அரங்கம் உள்ளிட்ட ஆதரவு, பிற தேவைப்படும் நிதி உதவிகளைக் கல்லூரி வழங்குமா? இல்லை, விக்கிப்பீடியா சார்பாக இதற்கு நிதி செலவிடும் தேவை ஏதும் எழுமா? நம் தரப்பில் நிதி செலவு செய்ய வேண்டிய தேவை இருந்தால், அது எவ்வளவாக இருக்கும், அதனை எங்கிருந்து எப்படிப் பெறுவது என்பதையும் உரையாட வேண்டும். -இரவி (பேச்சு) 15:00, 16 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
விரிவான திட்டமிடலுடன் உள்ளகப் பயிற்சி தொடர்பான முன்னெடுப்பை துவங்கியுள்ள @சத்திரத்தான் அவர்களுக்கு வாழ்த்துகள். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற வகையிலும், ஜெ. ஜெ. கல்லூரியில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி அளித்த வகையிலும், இப்பயிற்சிக்கான உதவிகள் ஏதேனும் தேவைப்படின் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.நன்றி--தியாகு கணேஷ் (பேச்சு) 15:18, 16 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி தியாகு கணேஷ் அவர்களே. பயிற்சி வழங்குவது மட்டும்தான் நமது பணி மற்ற ஏற்பாடுகளை அவர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்பதால், பயிற்சியின் போது அவசியம் கலந்துகொள்ளவும். --சத்திரத்தான் (பேச்சு) 15:38, 16 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
@Ravidreams: விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி எனும் பக்கத்தை ஆரம்பித்து ஒரு வடிவம் தர முயற்சித்துள்ளேன். 2020, 2021 ஆண்டுகளில் நடத்தப்பட்ட பயிற்சிகளின் அடிப்படையில் வரைவை எழுதியுள்ளேன். இதனை தாய்த் திட்டப் பக்கம் (program page) எனக் கருதலாம். கொள்கை, நெறிமுறை, வழிமுறைகள் இவற்றை உள்ளடக்கிய ஒரு பக்கமாக உருவாக்கிவிட்டால், இனிவரும் காலங்களில் guidelines ஆவணமாகக் கருதலாம். இதனை வளர்த்தெடுத்து, இறுதி வடிவம் தர உங்களின் உதவியை வேண்டுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:13, 16 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
முந்தைய உள்ளகப் பயிற்சித் திட்டங்கள் கோவிட்-19 காலத்தில் நடந்தவை என்பதால், இணையம் வழியாக முழுப் பயிற்சியும் தரப்பட்டுள்ளன. இப்போது திட்டமிடப்படும் பயிற்சியை முதலில் நேரடியாக தந்துவிட்டு பின்னர் இணையத்தில் தொடரலாம் எனப் பரிந்துரைக்கிறேன். மாணவர்களுடனான தொடர்பு இங்கு சிறப்பானதாக அமையும். கல்லூரி அழைத்திருக்கும் நிலையில், இணைவாக்க முறையில் செயல்படுத்துவதை பரிந்துரைக்கிறேன். தமிழ் விக்கிமீடியா சமூகமானது கல்லூரியின் மாணவர்களுக்கு உதவும் வகையில் செயல்படும்போது, கல்லூரி நிர்வாகம் இதனை ஏற்பார்கள் என்று கருதுகிறேன். பயனர்:சத்திரத்தான் இந்த முன்னெடுப்பு குறித்து பேச ஆரம்பித்தபோதே இணைவாக்க முறையில் நடத்த இயலும் எனக் கூறியிருந்தார். நேரடியாக நடைபெறும் பயிற்சிப் பட்டறைக்கான கூட்ட அரங்கம், கணினி ஆய்வகம் ஆகியவை இயல்பாகவே கல்லூரியின் வளங்கள் தான். மற்ற தேவைகளான - பயிற்சியாளர்களின் பயணம், தங்கும் அறை, உணவு, உள்ளூர்ப் போக்குவரத்து, பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ஆகியவற்றில் எவற்றை கல்லூரி நிர்வாகம் கவனித்துக்கொள்ளும் என்பது குறித்து அவர்களிடம் பேசலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:30, 17 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]

நிகழ்விற்கான ஏற்பாடுகள்

பயிற்சியை சனவரி மாதத்தின் கடைசி வாரம் (அல்லது) பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்பதால், ஏற்பாடுகளை செய்யத் தொடங்க வேண்டும். @சத்திரத்தான்: வணக்கம். கல்லூரியின் அழைப்பின்பேரில் அவர்களின் மாணவர்களுக்கு உதவும் வகையில் இப்பயிற்சியை நாம் தர இருக்கிறோம். இணைவாக்கத்தில் நடைபெறும் பயிற்சிக்கான ஏற்பாடுகளில், எவற்றை கல்லூரி நிர்வாகம் கவனித்துக்கொள்ளும் எனும் தகவல்களை இங்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதனடிப்படையில் மேற்கொண்டு திட்டமிட உதவியாக இருக்கும்; நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:23, 24 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]

இந்த உள்ளகப் பயிற்சி நமது பரப்புரையின் அடிப்படையில் கல்லூரி மாணவர்களுக்கான தேவையின் அடிப்படையில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. நாம் மாணவர்களுக்கு குறைந்த பட்சம் 30 மணி நேரம் பயிற்சி தரவேண்டும். நேரடி பயிற்சி, இணையத்தில் தொகுப்புகளை தொகுக்க மாணவர்கள் செலவிடும் நேரம், தொகுப்பு அடிப்படையில் அவர்களின் குறைந்த பட்ட தேவையினை நாம் பூர்த்தி செய்வது எளிது. இந்த இலக்கினை எட்டவும், முறையான பயிற்சியினை வழங்கவும், இரண்டு அல்லது 3 நாட்கள் நேரிடை பயிற்சி வழங்கலாம் என்பது எனது பரிந்துரை. இதற்காக விக்கிப்பீடியா சார்பில் பயிற்சியளிக்க உள்ளவர்களுடன் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.
  • பயிற்சியின் துவக்க விழா, நிறைவு விழா ஏற்பாடுகளை கல்லூரி மேற்கொள்ளும்
  • பயிற்சிக்காக வெளி ஊர்களிலிருந்து வரும் நமது விக்கிப்பீடியர்களுக்குத் தேவையான உள்ளூர் போக்குவரத்து, உணவு, தங்கும் வசதிகளை கல்லூரி நிர்வாகம் செய்து தரும்.
  • பயிற்சிக்கான இடம், இணைய வசதி, ஆய்வக வசதி உள்ளிட்ட பிற ஏற்பாடுகளையும் மாணவர்களை ஒருங்கிணைத்து செயல்படுவதையும் கல்லூரி நிர்வாகம் கவனித்துக்கொள்ளும்.
  • இணையவழி பயிற்சியினை தொடரும் போது, அதனை கல்லூரி ஒருங்கிணைக்கும்

நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 05:19, 25 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]

30 மணி நேரப் பயிற்சிக்கு 2 credits என்று சொல்லியிருந்தீர்கள். இந்த 30 மணி நேரம் என்பது மாணவர்கள் சனவரி முதல் ஏப்ரல் வரை விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்கும் காலத்தையும் சேர்த்தது என்றால், நாம் நேரடியாகப் பயிற்ச அளிக்கும் கணிசமான அளவில் குறைவாக இருக்க வேண்டும் அல்லவா? பொதுவாக, internship என்பது மாணவர்கள் வெளி நிறுவனங்களில் ஒன்று அல்லது இரண்டு மாதக் காலங்கள் பணியாற்றுவர். அப்போது நிறுவனங்கள் அவர்களுக்கு அளிக்கக்கூடிய பயிற்சி, ஒதுக்கக்கூடிய resource என்பது minimalஆகவே இருக்கும். நிறுவனத்தின் வழக்கமான பணிகளுக்கு இடையே மாணவர்கள் ஒன்றிணைந்து பணிச்சூழலுக்கு ஒரு அறிமுகத்தைப் பெற்றுக் கொள்வதாகவே internship அமையும். நாம் இந்த நிகழ்வுக்காகச் செலவழிக்கும் நேரம் என்பது அடுத்த 4 மாதங்களில் 50 மாணவர்கள் விக்கிக்குப் பங்களிக்கக்கூடிய scopeக்கு உட்பட்டு, அதற்கு proportionalஆக அமைவது நல்லது. ஏனெனில், இதே போன்று பல கல்லூரிகளும் நம்மை அணுகினால் அத்தனைக் கல்லூரிகளுக்கும் 5, 6 பேர் கிளம்பிப் போய் மூன்று நாள் நிகழ்ச்சி நடத்தும் அளவுக்கு நம்மிடையே பங்களிப்பாளர் எண்ணிக்கை இல்லை. அத்தகைய அணுகுமுறை பயன்மிக்கதாகவும் இருக்காது. எனவே, நேரடிப் பயிற்சியைச் சுருக்கமாக அமைத்துக் கொண்டு மாணவர்கள் விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்கும்போது இணையவழி mentoring தேவையான அளவு தருவதே நல்ல அணுகுமுறையாக இருக்கலாம். விக்கிமீடியா திட்டங்களைச்செய்வதற்கு என்று தனியே தொழிற்சாலை, நிறுவனக் கட்டடம் ஏதும் இல்லை என்பதால், உண்மையில் அவர்கள் இணையத்தில் திட்டங்களுக்குப் பங்களிக்கும் காலத்தையே internshipஆக கருத முடியும். நாம் நேரடியாகக் கிளம்பிச் சென்று பயிற்சி அளிப்பது அவர்களுக்கு மற்றுமொரு வகுப்பறைப் பயிற்சி போன்றே அமையும். இந்த உள்ளகப் பயிற்சி குறித்த மற்ற எண்ணங்களை முதன்மைத் திட்டப் பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி. -இரவி (பேச்சு) 15:16, 25 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
உள்ளகப் பயிற்சி குறித்த தங்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். தொழில்நுட்பம் சார்ந்த (professional degree) மாணவர்களின் உள்ளகப் பயிற்சிக்கும், கலை அறிவியல் மாணவர்களுக்கான உள்ளக பயிற்சிக்கும் உள்ள வேறுபாடுகள் தாங்கள் அறிந்ததே. இத்திட்டம் கலை அறிவியல் கல்லூரிகளில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பல கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் இதனை இன்னும் செயல்படுத்தாத சூழலில் தன்னாட்சிக் கல்லூரிகளில் செயல்படுத்த துவங்கியுள்ளனர். பெரும்பாலும் மாணவர்கள் மருந்தகம், மருத்துவமனை, தொழிற்சாலைகளில் இப்பயிற்சியினை மேற்கொள்கின்றனர். இதனுடைய நடைமுறை, பயிற்சியின் தரம், பயிற்சி கட்டணம் குறித்து பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. நாம் இது குறித்து விவாதிக்கத் தேவையில்லை. ஆனால் நம்மை அணுகும் அத்தனை கல்லூரிகளுக்கும் நம்மால் பயிற்சி வழங்க இயலாது என்பதும் உண்மையே. இருப்பினும் நம்மிடம் உள்ள மனித வளத்தினைப் பயன்படுத்தி எதிர்கால பங்களிப்பினையும் கருத்தில்கொண்டே இப்பயிற்சியினை அமைக்கின்றோம். நேரடி பயிற்சி/அறிமுகம் இல்லாத பயன் தராது என்பதால் நேரடி பயிற்சியில் தொடங்கி இணையவழி தொடரவும், கண்காணிப்பதாகவுமே நாம் திட்டமிடுகிறோம். நம்மிடம் கணினி ஆய்வகம் இல்லாததாலும், கல்லூரியின் பங்களிப்பும் தேவை என்பதாலும் நேரடிப் பயிற்சியினை அறிமுக பயிற்சியாகத் திட்டமிட்டுள்ளோம். --சத்திரத்தான் (பேச்சு) 15:42, 25 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
நேரடிப் பயிற்சி பிரச்சினையில்லை. அதை இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என்று நீடிக்காமல் ஒரு நாள் அல்லது முடிந்தால் அரை நாள் என்று சுருக்கப் பார்க்கலாம். விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்சனரி, விக்கித்தரவு என்று அனைத்துத் திட்டங்களுக்கும் அறிமுகத்தோடு இணைந்த பயிற்சி தர இந்தக் காலம் போதாது தான். ஆனால், விக்கிப்பீடியா என்கிற ஒரு திட்டத்திற்கு மட்டும் முறையான அறிமுகமும் பயிற்சியும் தர ஒரு நாள் காலம் போதும் என்று நினைக்கிறேன். நம்மை அழைக்கும் எல்லா கல்லூரிகளுக்கும் மூன்று நாட்கள் போக முடியாது என்று சொல்வதை விட, நம்மை அழைக்கும் அத்தனைக் கல்லூரிகளுக்கும் ஈடுகொடுத்து நாம் உள்வாங்க வேண்டுமென்றால், அதற்கு ஏற்ப இத்திட்டத்தை எப்படி வடிவமைப்பது என்றும் நாம் சிந்திக்கலாம். புதுக்கோட்டை கல்லூரியில் நமது செயற்பாட்டைப் பொருத்து, மற்ற கல்லூரிகளும் நம்முடன் இணைந்து பங்காற்ற ஆர்வம் காட்டும் என்றே எதிர்பார்க்கிறேன். இந்தப் புதுக்கோட்டை கல்லூரி பயிற்சி ஒரு மாதத்திற்குள் தொடங்க இருப்பதால் நாம் பெரிய அளவில் திட்டமிடலோ முன்னேற்பாடுகளோ செய்ய முடியாது. ஆனால், இந்தக் கல்லூரியின் அனுபவத்தைக் கொண்டு அடுத்தடுத்த கல்லூரிகளுக்குச் செல்லும் முன் திட்டமிடலை வலுவாக்கலாம். குறிப்பாக, பயிற்சி அளிப்பதற்கான வளங்களை Video வடிவில் நாம் முன்கூட்டியே தயாரித்து வைத்துக் கொள்வது கணிசனமான மாணவர்களுக்குக் குறுகிய நேரத்திலும் இணைய வழியிலும் பயிற்சியளிக்க உதும். மாணவர்களின் கல்விப் பின்புலத்துக்கு ஏற்ப விக்கிப்பீடியா அல்லது அதற்குக் கூடுதலாக ஒரு திட்டத்தை மட்டும் அறிமுகப்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, கணினித்துறை அல்லது கணினியறிமுகம் உள்ள மாணவர்கள் என்றால் விக்கித்தரவைப் பற்றி எடுத்துரைப்பது பொருத்தமாக இருக்கும். தமிழ், ஆங்கிலம் போல் மொழியை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்பவர்களுக்கு விக்கிப்பீடியா அறிமுகம் மட்டும் போதும். விக்கிமூலம், விக்சனரி போன்ற திட்டங்கள் நமக்குத் தேவையானவை தாம் என்றாலும், மாணவர்களை அதில் பாடத்திட்ட அளவில் ஈடுபடுத்தும் அளவுக்கு அவற்றில் பெற்றுக் கொள்ளக்கூடிய திறன்கள் இல்லை என்று தோன்றுகிறது. குறிப்பாக, விக்கிமூலம் என்பது date entry போலவே பார்க்கப்படக்கூடிய ஒரு mechanical பணி தான். விக்கிப்பீடியாவை நாம் அறிமுகப்படுத்தும்போது, நம்முடைய நோக்கிலிருந்து அறிமுகப்படுத்தாமல், மாணவர்கள் இந்தப் பயிற்சி மூலம் பெறுக் கொள்ளக்கூடிய திறன்கள் யாவை என்கிற அடிப்படையில் அமைதல் நன்று. எடுத்துக்காட்டுக்கு, 1. கட்டுரையாக்கத் திறன் 2. கட்டுரைகளுக்கு ஏற்ற உசாத்துணைகளைத் தேடி அறியும் திறன் 3. மொழிபெயர்ப்புத் திறன் 4. அவர்கள் பாடம் சார் உள்ளடக்க இடைவெளிகளைக் கண்டறிதல் போன்ற திறன்களை முன்வைக்கலாம். அவர்கள் இப்பயிற்சி மூலம் பெற்றுக் கொள்ளும் திறன்கள் அவர்கள் நாளை ஒரு எழுத்தூடகத்தில் வேலைக்குச் சேர்ந்தாலோ ஆய்வுக்கல்வி போன்ற உயர்படிப்புகளுக்குச் செல்லும் போதோ பயன்படக்கூடிய திறன்களாக அமைதல் நன்று. நன்றி. - இரவி (பேச்சு) 16:17, 25 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
கடந்த 2 ஆண்டுகளாக பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டதன் அடிப்படையில் கருத்துகளை தெரிவிக்கிறேன்:
  • விக்கிப்பீடியா, விக்கிமீடியா இயக்கம், இந்த இயக்கத்தின் மற்ற திட்டங்கள் குறித்த அறிமுகத்தை மட்டும் தருவதாக இருந்தால் அரை நாள் போதுமானது. கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் கணித்தமிழ்ப் பேரவை தொடக்க விழா ஒன்றில் இவ்வாறான அறிமுகத்தைத் தந்தேன். இந்த அறிமுகத்துடன், விக்கிப்பீடியா தளத்தில் உள்ள கூறுகள், தொகுத்தல் குறித்தான அடிப்படை விளக்கங்கள் இவற்றையும் வழங்கவேண்டுமெனில் ஒரு நாள் தேவை. சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் நடந்த அறிமுகப் பட்டறை இவ்வாறாக நடந்தது (இரண்டு அரை நாட்கள்). கலந்துகொள்பவர்களை பங்களிப்பாளர்களாக மாற்ற வேண்டுமெனில் இரண்டாவது நாளும் தேவை. பங்களிப்பாளர்கள் ஒவ்வொருவரையும் ஒரு புதிய கட்டுரையை எழுதவைத்து அக்கட்டுரையை செம்மைப்படுத்திய பிறகே பயிற்சி முழுமையடைகிறது. திருநெல்வேலியிலுள்ள கல்லூரி ஒன்றில் நடந்த பயிலரங்கு இவ்வாறாக நடந்தது. உள்ளகப்பயிற்சியை வழங்குவதன் நோக்கம் மாணவர் சமூகத்திற்கு உதவுவதோடு நமது பரப்புரைப் பணிகளில் ஒன்றாகவும் இருப்பதால், முழுமையான பயிற்சியைத் தருவது இன்றியமையாதது ஆகும். கூடுதலாக, 2025 ஆம் ஆண்டிற்கான உள்ளகப்பயிற்சியை கூகுள்25 திட்டத்தோடு இணைத்து கொண்டுசெல்ல இருப்பதால், பயிற்சிப் பட்டறை போன்ற நேரடிப் பயிற்சியை முழுமையாகத் தரவேண்டும் எனக் கருதுகிறேன்.
  • ஒரு கல்லூரி அல்லது ஒரு அமைப்பின் இடத்தில் நிகழ்வு நடத்துகிறோம் எனில், காலை 9.30 முதல் மாலை 4 அல்லது 4.30 வரையே நடத்த இயலும். தொடக்க விழா, காபி இடைவேளை, உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை, நிறைவு விழா இவற்றையும் உள்ளடக்கியதாகவே நிகழ்ச்சி நிரலை அமைக்க இயல்கிறது. ஒரு நாளின் செயலாற்றலுடைய நேரம் எவ்வளவு என கணக்கிட்டால் அது 5 மணி நேரம் மட்டுமே.
  • நாம் எவ்வளவு தான் திட்டமிட்டுச் சென்றாலும், ஒரு கல்லூரி அல்லது ஒரு அமைப்பின் உள்கட்டமைப்பிலுள்ள (infrastructure) குறைபாடுகளாலும் குறிப்பிடத்தக்க அளவில் நேர விரயம் ஏற்படுகின்றது.
  • உள்ளகப்பயிற்சி வழங்கும் வணிக நிறுவனங்கள் அவற்றால் தமக்கு பலன் இல்லை எனக் கருதுகின்றன. எனவே முக்கியத்துவம் தருவதில்லை; இயன்றளவு பொருளீட்டவும் முனைகின்றன. இந்தியாவிலுள்ள தனியார் பெருநிறுவனங்கள் உள்ளகப்பயிற்சி வழங்கும் கொள்கையைக் கூட கொண்டிருப்பதில்லை. நாம் எடுக்கும் உள்ளகப்பயிற்சி எனும் முன்னெடுப்பானது தன்னார்வத்தில் செய்வதாகும். 10 முதல் 15 பேர் வரை மட்டுமே முனைப்பாக பங்களிக்கும் ஒரு கட்டற்றக் கலைக்களஞ்சியத்தில் நிறைய பேர் பங்களித்தால் தொடர் வளர்ச்சியை காண இயலும் எனும் எண்ணத்தாலேயே அயராது தொடர்ந்து முயற்சி செய்கிறோம். பல்வேறு காரணங்களை உள்ளடக்கி இந்த உள்ளகப்பயிற்சியை நாம் வழங்கவுள்ள சூழலில், வளங்களை செலவழிப்பது குறித்து கட்டுப்பாடுகள் வேண்டாம் எனக் கருதுகிறேன். வணிக நோக்கில் செயல்படும் ஒரு நிறுவனம் தனது வளங்களை செலவழிக்க விரும்பாது. ஆனால் நம்மைப் பொறுத்தளவில், விருப்பமுள்ளவர்கள் தன்னார்வப் பணியாக கற்றுத் தர இருக்கிறோம். எதிர்காலத்தில் கல்லூரிகளின் அழைப்புகள் அதிகமாகும்போது, நமது செயல்பாடுகளில் (operations) மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். 2025 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் உள்ளகப்பயிற்சியிலிருந்து பாடங்களைக் கற்று, அதனடிப்படையில் நமது கொள்கை / நெறிமுறைகள் / வழிமுறைகளை இற்றை செய்துகொள்ளலாம் எனக் கருதுகிறேன்.
  • இந்தத் திட்டப் பக்கத்தில் ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்சியாளர்கள் எனும் துணைத் தலைப்புகளை இட்டதன் நோக்கம்: பயனர்கள் தன்னார்வத்தில் தன்னை நியமனம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்பட்டதாகவும் கருதுகிறேன்.
  • உள்ளகப்பயிற்சியில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து, முதன்மைத் திட்டப் பக்கத்தில் உரையாடுகிறேன்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:58, 28 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
நான் இன்றைய கூகுள் மீட் கூட்டத்தில் பகிர்ந்து கொண்டதைப் போலவே, என் கருத்துகள் யாவும் பரிந்துரைகளே. இதைக் கட்டுப்பாடு என்றோ எதிர்ப்பு என்றோ எண்ண வேண்டாம். அனைவரின் கருத்துகளையும் உள்வாங்கி எதிர்வரும் உள்ளகப் பயிற்சியைச் சிறப்பாக நடத்துவோம். அதில் பெறும் படிப்பனைகளைப் பொருத்து, அடுத்தடுத்த முயற்சிகளை மேம்படுத்துவோம். இம்முயற்சியில் நேரடியாகவும் களத்திலும் பங்களிக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். நன்றி. - இரவி (பேச்சு) 08:42, 29 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம். உங்களின் கருத்துகளைப் புரிந்துகொண்டோம். வெளிப்படையான உரையாடல்கள் திட்டத்தை மேம்படுத்துகின்றன. மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:15, 29 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]

சி.ஐ.எஸ் உடனான இணைவாக்கம்

திட்டமிடப்பட்டு வரும் இந்த உள்ளகப் பயிற்சியை கூகுள்25 திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறோம். எனினும் கூகுள்25 திட்டத்தை ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்குக் கொண்டுவருவதாக முடிவு செய்துள்ளோம். திட்டத்திற்கான அலுவல்முறை வேலைகள், தமிழ் விக்கிப்பீடியா - விக்கிமீடியா அறக்கட்டளை - கூகுள் நிறுவனம் இவற்றிற்கிடையே சனவரி மாதத்தில் நடைபெறும். அதற்குப் பிறகு எப்போது நிதியைப் பெறுவோம் என்பது குறித்து இப்போதைக்குத் தெரியவில்லை. இந்நிலையில், உள்ளகப் பயிற்சியை சி.ஐ.எஸ் உடன் இணைவாக்க முறையில் ஒன்றிணைந்து நடத்தினால்... தேவைப்படும் நிதியை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள இயலும். நமது எண்ணத்தை மின்னஞ்சல் வழியாக அவர்களுக்குத் தெரிவித்து, இணைவாக்கம் சாத்தியம் எனில், இது போன்றதொரு கோரிக்கையை மேல்-விக்கியில் பதியுமாறு பரிந்துரைப்பர். வைக்கப்படும் கோரிக்கையை பரிசீலித்து அதனடிப்படையில் தமது ஒப்புதலைத் தெரிவிப்பார்கள். அவர்களிடம் தாக்கல் செய்யவிருக்கும் வரவு-செலவுத் திட்டம் குறித்து கீழே விளக்கியுள்ளேன். பயனர்கள் தமது ஆதரவு அல்லது எதிர்ப்பினை இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். கருத்துகள் / பரிந்துரைகள் ஏதும் இருப்பின் தயங்காது தெரிவியுங்கள். 04-சனவரி-2025 வரை காத்திருக்கிறேன்; நன்றி!

கணக்கீடு:

வரிசை எண் செலவுக் கூறுகள் தேவைப்படும் பணம் குறிப்புகள்
1 நேரடிப் பயிற்சிக்குச் செல்லும் பயிற்சியாளர்களுக்கான போக்குவரத்து ₹ 12,000 ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட 7 பேருக்கான போக்குவரத்துச் செலவு
2 இணையவழி பயிற்சி தரும் பயிற்சியாளர்கள் தமது இல்லங்களில் பயன்படுத்தும் இணைய வசதி ₹ 6,000 12 பயிற்சியாளர்கள் x ₹ 500
3 மாணவர்களுக்கான சான்றிதழ் ₹ 750 50 மாணவர்கள் x ₹ 15
4 எதிர்பார்க்க இயலாத நிதித் தேவை (contigency fund) ₹ 1,250 எதிர்பார்க்க இயலாத செலவு ஏற்படின் அதனை சமாளிப்பதற்காக.
- மொத்தம் ₹ 20,000 -

குறிப்பு: பயிற்சியாளர்களுக்கான உள்ளூர்ப் போக்குவரத்து, தங்குமிடம், உணவு ஆகிய வசதிகளை கல்லூரி நிர்வாகம் செய்துதரும் என @சத்திரத்தான்: தெரிவித்துள்ளார். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:09, 30 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]

ஆதரவு

👍 ஆதரவு ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:12, 30 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
👍 ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 15:56, 30 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
👍 ஆதரவு---மகாலிங்கம் இரெத்தினவேலு 16:01, 30 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
👍 ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 16:23, 30 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
👍 ஆதரவு--இரவி (பேச்சு) 20:25, 30 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
👍 ஆதரவு--சத்திரத்தான் (பேச்சு) 00:35, 31 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
👍 ஆதரவு--தியாகு கணேஷ் (பேச்சு) 15:34, 9 சனவரி 2025 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

கருத்துக்கள்

இது கூகுள் நிதியில் கல்லூரியுடன் இணைந்து நடத்தும் academic பயிற்சியாகக் கருதப்படும் சூழலில், நேரடியாகச் சென்று முழுநேரப் பயிற்சியளிப்பவர்களுக்கு மட்டும், நம் சார்பாக நாளொன்றுக்குக் குறைந்தது 1,500 INR மதிப்பூதியமாகத் தருமாறு பரிந்துரைக்கிறேன். தங்கள் மற்ற பணிகளை விட்டுவிட்டு, வேலைநாளில் (சிலவேளை சம்பள இழப்புடன் கூட) விடுப்புப் போட்டுச் செல்லுதல், வாரயிறுதி விடுமுறை நாட்களில் பயிற்சி நடந்தாலும் ஓய்வை விட்டுக் கொடுத்துப் பயற்சிக்குச் செல்லுதல் ஆகிய காரணிகளைக் கருத்தில் கொண்டு இது போன்ற ஏற்பாடுகளைச் செய்து தருவது நீண்டகால நோக்கில் தொடர்ந்து இவ்வாறான முயற்சிகளை முன்னெடுக்க உதவும். இத்தொகையைப் பயனர்கள் தங்கள் பணிச்சூழல் பற்றிய விவரங்களைத் தரத் தேவையின்றி பயிற்சியளிக்க முன்வருகிறவர் அனைவருக்கும் தரலாம். யாரேனும் இந்த அடையாள மதிப்பூதியத்தைப் பெற்றுக் கொள்ள விரும்பாவிட்டால், அதைப் பெற்றுக் கொள்ளாமல் தவிர்ப்பதும் அவர்கள் உரிமையே. மற்ற பயனர்கள் யாருக்கும் இந்தப் பரிந்துரை தொடர்பாகப் பெரிய கருத்து மாறுபாடு, எதிர்ப்பு இல்லையென்றால், எத்தனைப் பேர் நேரடிப் பயிற்சியில் கலந்து கொள்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கு ஆகும் செலவையும் திட்டச் செலவுக் கணக்கில் சேர்த்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 20:25, 30 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]

@Ravidreams மதிப்பூதியம் தொடர்பான தங்களின் கருத்துகளுக்கும், பரிந்துரைக்கும் மிக்க நன்றி. கருத்து வேறுபாடோ, எதிர்ப்போ பதிவாகவில்லை என்பதால்... பரிந்துரைத்தவாறு செலவுக் கணக்கீட்டில் மாற்றங்களைச் செய்து சி.ஐ.எஸ் அமைப்பிற்கு மடல் அனுப்புகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:42, 5 சனவரி 2025 (UTC)[பதிலளி]
மிக்க மகிழ்ச்சி. நன்றி. - இரவி (பேச்சு) 09:44, 6 சனவரி 2025 (UTC)[பதிலளி]

இற்றை (26-சனவரி-2025)

உள்ளகப் பயிற்சி குறித்த நமது திட்டத்தை சி.ஐ.எஸ் அமைப்பினருக்கு 09-சனவரி-2025 அன்று விளக்கினோம். கூகுள் மீட் வாயிலாக நடந்த கூட்டத்தில், அவ்வமைப்பின் பவனும், நிதிசும் கலந்துகொண்டனர். தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து ஒருங்கிணைப்பாளர்கள் எனும் வகையில் பயனர்:சத்திரத்தான், பயனர்:Sridhar G, நான் என மூவர் கலந்துகொண்டோம். நமது திட்டத்தின் கூறுகளை கேட்டறிந்த பவன், இணைவாக்கத்திற்கான தமது விருப்பத்தைத் தெரிவித்தார். மேல்-விக்கியில் 'இணைவாக்கத்திற்கான முன்மொழிவு' பக்கத்தை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார். உள்ளகப் பயிற்சிக்கான மாதிரியுரு (Internship Program model) ஒன்றினை தமிழ் விக்கிப்பீடியா சமூகம் உருவாக்கித் தந்தால், அதனை மற்ற மொழி சமூகத்திற்கும் தெரிவிப்பதற்கு ஏதுவாக இருக்கும் எனும் கோரிக்கையை நிதிசு நம்மிடம் தெரிவித்தார். திட்டத்தை நடத்தும் காலகட்டத்தில் இந்த மாதிரியுருவினை வளர்த்தெடுக்கிறோம் என அவரிடம் தெரிவித்தோம்.

கல்லூரியிடமிருந்து அலுவல்முறை மடல் கிடைத்ததும் மேல்-விக்கியில் 'இணைவாக்கத்திற்கான முன்மொழிவு' பக்கத்தை தொடங்குகிறேன். அதன் பிறகு அப்பக்கத்திற்குரிய இணைப்பை இங்கு தருகிறேன்.

@Ravidreams சி.ஐ.எஸ் அமைப்பினருடனான கூட்டத்தின்போது, கீழ்க்காணும் செலவுக் கணக்கீட்டை அவர்களிடத்து விளக்கினோம்; அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதே விவரங்களை மேல்-விக்கி தளத்தில் உருவாக்கவிருக்கும் பக்கத்திலும் இடுகிறேன்.

வரிசை எண் செலவுக் கூறுகள் தேவைப்படும் பணம் குறிப்புகள்
1 நேரடிப் பயிற்சிக்குச் செல்லும் பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ₹ 21,000 ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட 7 பேர்
2 நேரடிப் பயிற்சிக்குச் செல்லும் பயிற்சியாளர்களுக்கான போக்குவரத்து ₹ 12,000 ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட 7 பேர்
3 இணையவழி பயிற்சி தரும் பயிற்சியாளர்கள் தமது இல்லங்களில் பயன்படுத்தும் இணைய வசதி ₹ 6,000 12 பயிற்சியாளர்கள் x ₹ 500
4 மாணவர்களுக்கான சான்றிதழ் ₹ 750 50 மாணவர்கள் x ₹ 15
5 சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்குச் செல்லும் பயிற்சியாளர்களுக்கான போக்குவரத்து ₹ 2,900 ஒருங்கிணைப்பாளர்கள் 2 பேர்
6 எதிர்பார்க்க இயலாத நிதித் தேவை (contigency fund) ₹ 1,350 எதிர்பார்க்க இயலாத செலவு ஏற்படின் அதனை சமாளிப்பதற்காக.
- மொத்தம் ₹ 44,000 -

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:57, 26 சனவரி 2025 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள். - இரவி (பேச்சு) 07:20, 27 சனவரி 2025 (UTC)[பதிலளி]

இற்றை (04-பிப்ரவரி-2025)

இந்த நிகழ்வானது பிப்ரவரி 7, பிப்ரவரி 8 (வெள்ளி, சனி) ஆகிய நாட்களில் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை செய்துமுடிக்க 2 வாரங்கள் தேவைப்படுவதாக கல்லூரியுள்ள ஒருங்கிணைப்பாளர்கள் நம்மிடம் தெரிவித்துள்ளனர். நிலவரம் இங்கு தொடர்ந்து இற்றை செய்யப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:03, 4 பெப்பிரவரி 2025 (UTC)

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya