விக்கிப்பீடியா பேச்சு:நீங்களே திருத்துங்கள்ஒட்டு மொத்த விக்கிச்சமூகமும் நியாயம் தவறி, நடுநிலை தவறி செயற்படுகிறது என்று ஒருவர் கருதுவாரானால் (அவரது கருத்து சரியா தவறா என்பது தனி உரையாடல்), அதற்கான எதிர்ப்பை விக்கி முறைகளுக்கு உட்பட்டு எப்படி பதிவு செய்வது? இதைப் பற்றிய அனைவரின் கருத்தை வரவேற்கிறேன். எக்குத் தோன்றும் சில வழிமுறைகள்:
மற்றவர்களின் பரிந்துரைகளையும் அறிந்து இது குறித்த வழிகாட்டலை உருவாக்கத் தர வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 05:45, 12 நவம்பர் 2013 (UTC)
இப்பக்கத்தின் பின்னணி பத்தாண்டுச் சிக்கல் பிரச்சினையின் ஒரு பகுதியாக நாம் பெறக்கூடிய பாடங்கள் என்ன என்பதைத் தொகுத்து பல கட்டுரைகளாக எழுதி வருகிறேன். பார்க்க - பகுப்பு:விக்கிப்பீடியா வழிகாட்டல்கள் இவை ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள en:Category:Wikipedia essays, en:Category:Wikipedia guidelines பகுதி இதற்கு ஒத்தது. எடுத்துக்காட்டுக்கு, en:Wikipedia:Adrenaline junkie பார்க்கலாம். இங்கு, This essay contains the advice or opinions of one or more Wikipedia contributors. Essays may represent widespread norms or minority viewpoints. Consider these views with discretion. Essays are not Wikipedia policies or guidelines என்றுள்ள பொறுப்புத் துறப்பைப் பாருங்கள். இவ்வாறான கட்டுரைகளை எழுத நிச்சயம் விக்கிப்பீடியாவில் இடம் உண்டு. அண்மைய சிக்கல்களின் போது திரும்பத் திரும்ப நாம் கலைக்களஞ்சியம் படைக்கிறோம் என்றும் அதற்கு ஊறு விளைவிக்கக்கூடாது என்றும் எடுத்துரைக்கப்பட்டது. நான் விக்கிப்பீடியாவை ஒரு கலைக்களஞ்சியமாகப் பார்க்கவில்லை. அதனை ஒரு பரவலர் இயக்கமாக பார்க்கிறேன். முதலில், இது ஒரு சமூகம். அச்சமூகம் நெறியுடன் இயங்குவதற்கான கொள்கைகள், விதிகள், வழிகாட்டல்கள் இருந்தால் தான் அது திறனுடன் இயங்கிப் பணிகளைச் செய்ய முடியும். அது செய்யும் பணிகளில் கலைக்களஞ்சிய ஆக்கமும் ஒன்றாகும். அச்சமூகத்தின் இயக்கத்துக்கே பாதகம் வருகிறது என்றால் முதலில் அதனைச் சீர் செய்ய முன்னுரிமை தருவது சரி. கூடல் நிகழ்வுக்கு முன்பே விக்கிப்பீடியா:திறனாய்வு என்று ஒரு பக்கம் இருந்திருந்தால் நிலைமை இவ்வளவு சிக்கல் ஆகி இருக்காது. அண்மையில் புருனோ இரு கொள்கை முன்மொழிவுகளைக் கொண்டு வர முனைந்தார். பலரும் எடுத்த எடுப்பில் வாக்கிடல், கருத்து மோதல் என்று இறங்கினோமே தவிர, அவர் கொள்கை வகுக்க முனைந்த முறையே தவறு என்று யாரும் சுட்டிக் காட்டவில்லை. இதன் பொருட்டே விக்கிப்பீடியா:கொள்கை வகுத்தல் பக்கத்தை உருவாக்கி அவரது பேச்சுப் பக்கத்திலும் சுட்டிக் காட்டி உள்ளேன். இவ்வாறான அணுகுமுறையின் ஒரு பகுதியாகவே இப்பக்கத்தைத் தொடங்கினேன். ஏன் பேச்சுப் பக்கத்தில் என்றால் விக்கிப்பீடியர்களின் கருத்தைத் தொகுத்து எழுத வேண்டும் என்பதால் தான். ஏன் இந்தப் பக்கம் தேவைப்பட்டது? நாம் இப்போது ஒரு நாட்டில் வாழுகிறோம் என்று வையுங்கள். அந்த நாட்டில் பிரச்சினைகள் எழும் போது அதைத் தீர்ப்பதற்கான, எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கான கட்டமைப்பு அந்த நாட்டிலேயே உள்ளது நலமான சூழல். அப்படி ஒரு சூழல் இல்லாவிட்டால் உள்நாட்டுப் போர், தீவிரவாதம், சதிச்செயல்கள் என்று சிக்கிச் சீரழியும். மனித உரிமை மீறல்கள் வரும், காட்டாட்சி வரும். இன்னும் பல... ஆக, உண்ணாநோன்பு, கடையடைப்பு, இரயில் மறியல், ஊடகங்களில் எழுதல், பொது நல வழக்கு தொடுத்தல், தேர்தலில் வாக்கிடல் என்று பல வகைகளில் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளைத் தர வேண்டும். விக்கிப்பீடியாவில் தான் பங்களிக்க வாய்ப்புள்ளதே, ஏன் எதிர்க்க வேண்டும், நீங்களே திருத்தலாமே என்றால்... இப்பக்கமே அத்தகைய திருத்த முயற்சிகளுக்குப் பிறகும் முற்று முழுதாக விக்கிப்பீடியாவில் நம்பிக்கை இழந்து வெளியேறும் இறுதி நிலையில் உள்ளவர்களுக்கான வழிகாட்டல் பக்கம். அவ்வாறு விலகியவர்கள் கடந்த காலத்தில் இருந்திருக்கிறார்கள். வருங்காலத்திலும் இருப்பார்கள். இப்பக்கத்தை நீக்குவதாலும் உரையாட மறுப்பதாலும் மட்டும் அத்தகைய எதிர்ப்புகளைத் தவிர்த்து விட முடியாது. தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் எதிர்ப்பு என்பது எத்தகையதாக இருக்கிறது?
எடுத்துக்காட்டு:
எடுத்துக்காட்டு: இங்கு பார்க்கவும்
எடுத்துக்காட்டு: பயனர்:Vinodh.vinodh அண்மையில் தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து வெளியேறிய சிலரை மீண்டும் அழைத்து வர முயன்றதற்குப் பின்னணியில் அவர்களும் இவ்வாறு எதிர் பரப்புரையில் ஈடுபடுவார்கள் என்ற கவலையும் இருந்தது. (இதற்கான ஆதாரத்தை முறையாக கோரினால் வழங்கப்படும்) இவ்வாறான கடும் எதிர்ப்புகளை எதிர்கொள்வதற்குப் பதில் பயனர்கள் தங்கள் எதிர்ப்பை படிப்படியாக விக்கிப்பீடியா முறைக்கு உட்பட்டு வெளிப்படுத்த வழிகாட்டுவதன் மூலம், விக்கிப்பீடியா சமூகம் இந்த எதிர்ப்பு மனநிலையைக் கவனித்து நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். விக்கிப்பீடியா சமூகத்தின் மீது நம்பிக்கை இழக்கும் ஒருவர் கூட விக்கிப்பீடியா பரிந்துரைக்கும் முறைகளைப் பின்பற்றி எதிர்ப்பைப் பதிய வைக்க முடியும். நான் குறிப்பிட்ட பின்வரும் வழிமுறைகள்
ஆகியன விக்கிப்பீடியாவின் அன்றாடச் செயற்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்காமல் ஒரு பயனர் தனது எதிர்ப்பை அமைதியாக முன்வைக்கும் வழிமுறைகளே. இன்னும் கூட பல முறைகளைச் சுட்ட முடியும். இப்போது வேண்டாம். இது ஒரு உரையாடலுக்கான துவக்கம் மட்டுமே. அண்மைய சிக்கலின் பின்னணியில் பார்க்கும் போது இப்பக்கத்தை எழுதுவதற்கான உள்நோக்கம், பின்னணி குறித்து தவறான புரிதல் வருவதை உணர்கிறேன். அதனால், இவ்வுரையாடலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதிலோ நற்கீரன் பக்கத்தின் பெயரை மாற்றியது போல வளர்முகமாக அணுகுவதிலோ எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. உள்ளபடி இப்படி ஒரு வழிகாட்டலை வேறு யாராவது தந்திருக்க வேண்டும். யாரும் செய்யாததால் நான் எடுத்துச் செய்தேன். ![]() நான் 2005 மார்ச்சு 11 தொடங்கி இன்றோடு 8 ஆண்டுகள் 8 மாதங்களைக் கடந்து பங்களித்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் உணவு உண்டேனோ இல்லையோ அண்மைய மாற்றங்களைப் பார்க்கத் தவறியது இல்லை. நான் பங்களிக்கத் தொடங்கிய போது கல்லூரி மாணவன். இன்று திருமணம் முடித்து ஒரு குழந்தையோடு உள்ளேன். என் மனைவியை நான் கண்டது விக்கிப்பீடியா மூலமே. என்னுடைய மிகச் சிறந்த நண்பர்களைப் பெற்றது விக்கிப்பீடியா மூலமே. என் மகளுக்கும் விக்கிப்பீடியா சட்டை அணிவித்து அழகு பார்க்கும் அளவுக்கு நான் விக்கிப்பீடியாவை நேசிக்கிறேன். (பிறந்தது முதல் பிரியாத என் மகளையும் மனைவியையும் மூன்று வாரங்கள் ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு முற்று முழுதாக தமிழ்விக்கி10 கொண்டாட்டப் பணிகளில் ஈடுபட்டேன். 29 செப்டம்பர் 2013 அன்று பகலில் தான் மீண்டும் அவர்களைக் கண்டேன். என் மகளுக்கு என்னை மறந்தே விட்டிருந்தது :( இருந்தாலும் அரை மணி நேரம் கூட அவளோடு இருக்க முடியவில்லை. அன்று மாலையோடு நீங்கள் அனைவரும் ஊருக்குக் கிளம்பி விட்டீர்கள். நிகழ்வு முடிந்த பிறகு கவனிக்க வேண்டிய பணிகளைப் பார்த்து முடித்து விட்டு மீண்டும் என் மனைவியையும் மகளையும் அடுத்த நாள் திங்கள் இரவு 9 மணிக்குத் தான் கண்டேன். மூன்று நாட்களாகத் தூக்கத்தைத் தொலைத்து விட்டு அன்று தான் நிம்மதியாக உறங்கலாம் என்று சென்றேன். அடுத்த சில மணி நேரங்களில் கூடல் பற்றிய விமர்சனங்கள் வரத் தொடங்குகின்றன. அன்று தொடங்கிய உளைச்சல் இன்று வரை நீடிக்கிறது. செப்டம்பர் 1 தொடங்கி நிகழ்வுக்காக உழைக்கத் தொடங்கியது முதல் இன்றோடு 75 நாட்களைக் கடந்து விட்டிருக்கிறது. என் தொழிலும் குடும்ப வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது). என் மகளுக்குப் படம் பிடிக்கத் தெரியும் வயது வரும் போது அவள் கையில் ஒரு படக்கருவியைத் தந்து பொதுவகத்தில் அவளது முதல் பங்களிப்பை இடுவேன். தமிழ் விக்கிப்பீடியா என் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. ஒரு போதும் அதன் நலனுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடபட மாட்டேன். இதை நிறுவ நான் கற்பூரம் ஏற்றி அணைக்க வேண்டுமா இல்லை துண்டு போட்டுத் தாண்ட வேண்டுமா? உணர்ச்சி வசப்படுகிறேன் என்பீர்கள் :) முடிந்தால் சென் குருவாகப் பார்க்கிறேன் :) நன்றி. --இரவி (பேச்சு) 07:23, 16 நவம்பர் 2013 (UTC) இரவி, நான்கூட உறக்கமறு நிலையில் தவறாகப் படித்துவிட்டேனோ என்று நினைத்தேன். இப்போது மீண்டும் பார்த்தால் நீங்கள் // எக்குத் தோன்றும் சில வழிமுறைகள்: // என்றுதான் குறிப்பிட்டீர்கள் (தட்டுப்பிழை உள்ளபடியே இருந்தது). நீங்கள் இப்போது தந்துள்ள பின்னணியில் பார்த்தாலும் எதிர்ப்பைக் காட்டுவதற்கு கடைசி புள்ளியில் தந்துள்ளது அறமடிப்படையிலும், முறைமை அடிப்படையிலும் கொஞ்சங்கூடச் செல்லாத ஒன்று என வெளிப்படையாகத் தெரியும் நிலையில் நீங்கள் அதை வேறு மறுப்பின்றி பதிந்திருக்கக் கூடாது என்றே கருதுகிறேன். மற்றபடி உங்கள் உழைப்பு, உளைச்சல், தனிவாழ்வில் கால இழப்பு போன்றவற்றை ஒரு நண்பராக அறிவேன். அதற்காக வருந்தவும் செய்கிறேன். நீங்கள் விக்கி நலனுக்கு எதிராகச் செயல்பட மாட்டேன் என்று மீண்டும் உறுதியளித்ததற்கு நன்றி. -- சுந்தர் \பேச்சு 16:31, 17 நவம்பர் 2013 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia