விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள்முதற்பக்க கட்டுரைகளில் படிமம் தொடர்பாகதமிழ் விக்கிப்பீடியாவில் சிறந்த கட்டுரைகளை முதற்பக்கத்தில் இட்டு வருகிறோம். அக்கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களையும் சேர்த்துள்ளது பாராட்டுதற்குரிய செயலே. ஆயினும் இன்றைய முதற்பக்கத்தினை பார்த்ததும், எனக்கு அதில் மாற்றுக்கருத்து எழுந்துள்ளது. விக்கிப்பீடியாவை பள்ளி செல்லும் சிறுவர் முதல், முதியவர் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர், இந்நிலையில் இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் குறித்த தகவல்கள் முதற்பக்கத்தில் இடம்பெற்று இருந்தது; அதனுடைய படிமும் உள்ளது. இது சற்று அருவெறுப்பாகவும், குழந்தைகள் மற்றும் சில பெரியவர்களுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். இதுகுறித்து மற்றவர்களுடைய கருத்து தேவை. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:19, 29 சூலை 2012 (UTC) +1 --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:50, 29 சூலை 2012 (UTC)
ஒரு பொருளால் தோற்றுவிக்கப்படும் தூண்டல் அப் பொருளைப் பார்க்கும் பார்வையாளர்களின் அந்நேர மனநிலையைப் பொறுத்தது. இது பார்வையாளருக்குப் பார்வையாளர் மாறுபடுவதோடு ஒரே பார்வையாளரிடத்தும் காலத்தைப் பொறுத்து மாறுபடக் கூடியது. விவாதத்துக்குள்ளாகி இருக்கும் படம் அப்படி ஒன்றும் அருவெறுப்பாக இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. மருத்துவத் துறை அல்லாத பயனர்களின் கருத்தை வைத்து ஒரு கொள்கை முடிவுக்கு வரலாம். நன்றி--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:05, 29 சூலை 2012 (UTC)
கட்டுரையைப் படித்தால் ஒழிய இந்தப் படிமம் என்னவென்றே முதலில் புரியாது. அப்படி இருக்க, இதில் எந்த வயதினருக்கும் ஒவ்வாதிருக்குமாறு ஒன்றும் இல்லையே? இதே படிமத்தையே காட்சிப்படுத்தலாம்--இரவி (பேச்சு) 12:04, 29 சூலை 2012 (UTC) இற்றைப்படுத்தல்இப்பக்கம் 2014 பெப்ரவரிக்குப் பின்னர் இற்றைப்படுத்தப்படாமல் இருக்கிறது. எடுத்துக்காட்டாக கடந்தவாரம் ஐ. மாயாண்டிபாரதி பற்றிய கட்டுரை முதற்பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. அக்கட்டுரையை இங்கே காணவில்லை.--பொன்னிலவன் (பேச்சு) 03:49, 16 ஏப்ரல் 2014 (UTC) |
Portal di Ensiklopedia Dunia