விக்கிப்பீடியா பேச்சு:வெளி இணைப்புகள்இக்கொள்கை 25 அக்டோபர் 2010 அன்று இங்கு நடந்த உரையாடலின் விளைவாக உருவானது.--சோடாபாட்டில் 11:26, 25 அக்டோபர் 2010 (UTC)
மேற்கோள்கள், உசாத்துணைகளில் வணிக வெளியிணைப்புகளைத் தவிர்த்தல்மேற்கோள்கள், உசாத்துணைகள் போன்ற கட்டுரையின் இதர பகுதிகளிலும் வணிக வெளியிணைப்புகளைத் தவிர்த்தலை ஒரு கொள்கையாக ஆக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். எடுத்துக்காட்டுக்கு, ஒரு புத்தக்கத்தை மேற்கோளாகத் தருவது என்றால் அதன் பெயர், ISBN விவரங்கள் தந்தால் போதும். அதனை விற்கும் தளத்துக்கு இணைப்பு தர வேண்டியதில்லை. தற்போது இவ்வாறு பல கட்டுரைகள் உள்ளதால் துப்புரவு செய்ய வேண்டி உள்ளது.--இரவி (பேச்சு) 11:05, 8 ஏப்ரல் 2014 (UTC)
// வணிக வெளி இணைப்புகள் என்பவை எவை. கூகிளின் பல சேவைகளுக்கும் வெளி இணைப்புகள் தரப்பட்டால் அவை வணிக இணைப்புகளா?// இது பற்றி விக்கிப்பீடியா பேச்சு:வணிக இணைப்புகள் கண்காணிப்பு பக்கத்தில் விரிவாக உரையாடியுள்ளோமே? //ஒரு நூலைப் பற்றி வெளியிட்ட நிறுவனத்தின் தகவல் தளத்துக்கு இணைப்புத் தருவது ஏற்றுக் கொள்ளத்தக்கதே// ஒரு நூலைப் பற்றிய கட்டுரையில், அதன் பதிப்பாளர் பெயர் தகவல் பெட்டியில் குறிப்பிடப்படுகிறது. நூலுக்கு என்று அலுவல் முறை இணையத்தளம் இருந்தால் அதனையும் வெளியிணைப்பாகத் தரலாம். அத்தளத்தில் நூல் விற்றாலும் பரவாயில்லை. ஆனால், கட்டுரையில் உள்ள தகவலைக் காட்டிலும் வேறு எந்தக் கூடுதல் தகவலையும் தராத பதிப்பாளரின் தளத்துக்கு வெளியிணைப்பு தரத் தேவையில்லை. குறிப்பாக, அது நூலை விற்கும் பக்கமாகவும் இருந்தால் வணிக நோக்காக காண இயலும். தமிழ்ச்சூழலில், பல எழுத்தாளர்கள் / பங்களிப்பாளர் தங்கள் நூல்களின் விற்பனைத் தளங்களுக்குத் தாங்களே இணைப்பு தரும் நலமுரணையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. எனினும், இந்த உரையாடல் மேற்கோள் / உசாத்துணை / ஆதாரம் பகுதியில் வணிகத் தளத்துக்கு இணைப்பு தருவதை பற்றி மட்டுமே பேசுகிறது. அங்கு அந்த ஆதாரத்தை அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய தரவை மட்டும் தந்தால் போதுமானது. வெளியிணைப்பு தரத் தேவையில்லை. இது நூல்கள் அவை போன்றவற்றின் முதன்மைக் கட்டுரைகளைப் பற்றிப் பேசவில்லை. ஒரு கருத்துருவாக்கத்தினைப் பற்றிய கட்டுரையிலும் தரப்படும் ஆதாரங்களைப் பற்றி பேசுகிறது. நன்றி.--இரவி (பேச்சு) 20:08, 13 ஏப்ரல் 2014 (UTC)
நற்கீரன், https://en.wikipedia.org/wiki/Wikipedia:External_links#Links_normally_to_be_avoided கூறுவது 1. Any site that does not provide a unique resource beyond what the article would contain if it became a featured article. கூறுவது போல் அப்படி சிறப்பான தகவல் எதையும் நூல் விற்பனைத் தளங்கள் தருவதாகத் தெரியவில்லை. அதுவே, ஒரு iPad Tablet பற்றிய கட்டுரையில் அதன் அலுவல்முறைத்தளத்துக்குத் தரும் இணைப்பு கூடுதல் தகவலைத் தர முடியும். (iPad Tabletகளை விற்கும் பிற மின்வணிகத்தளங்களுக்குத் தரும் இணைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா) நிற்க. நாம் இங்கு மேற்கோள் பகுதியைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். எடுத்துக்காட்டுக்கு, கனமூலம் கட்டுரையில் தற்போது உள்ள மேற்கோள் பகுதியைப் பாருங்கள். அங்கு நூலின் விவரம், ISBN எண் உள்ளது. நூலைப் பற்றின விவரங்களை உறுதி செய்ய அதுவே போதுமானது. அந்த இடத்தில் Flipkart நூல் விற்பனைத் தளத்துக்கான இணைப்பு தேவையற்றது. நூலைப் பெற விரும்புவோர், மேல் விவரங்களைப் பெற விரும்புவோர் கூகுளில் தேடினால் இலகுவாக கிடைக்கும். அங்கு Flipkart உட்பட இன்னும் பல தளங்கள் வரலாம். ஆனால், ஒரே ஒரு அல்லது ஒரு சில தளங்களுக்கு மட்டும் விக்கியில் இருந்து இணைப்பு தரும் போது:
இவற்றைத் தவிர்ப்பதற்கே வணிக வெளியிணைப்புகள் வேண்டாம் என்று கோருகிறோம். ஆங்கில விக்கிப்பீடியாவில் அமேசான் உட்பட இன்னும் பல வணிகத் தளங்களின் இணைப்புகள் பொருத்தமற்ற இடங்களில் உள்ளன. இது அங்கு இன்னும் நிறைய துப்புரவு தேவைப்படுகிறது என்பதையே சுட்டுகிறது. அவர்களின் கொள்கை தெளிவாகவே உள்ளது. ஆனால், எல்லா இடங்களிலும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. --இரவி (பேச்சு) 20:37, 13 ஏப்ரல் 2014 (UTC)
நற்கீரன், வெளியிணைப்புகள் குறித்த கொள்கை ஏற்கனவே தெளிவாகவே உள்ளது. அதையும் மேற்கோள்கள் பகுதியில் வரும் இணைப்புகளையும் குழப்பிக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கனமூலம் கட்டுரையை மட்டும் காணுங்கள். அங்கு Flipkart இணைப்பு அவசியமா என்று பதில் கூறுங்கள். அந்தப் பதிலுக்கான கேள்வியே இந்த உரையாடல்.--இரவி (பேச்சு) 21:28, 13 ஏப்ரல் 2014 (UTC) உங்கள் கூற்று விளங்கவில்லை. அந்த எடுத்துக்காட்டு இப்போது இருக்கும் விதிகளுக்கு ஏற்பவே நீக்கப்படலாம். ஆகவே என்ன மாற்றம் தேவை என்று நீங்கள் கேக்கிறீர்கள் என்று விளங்கவில்லை?--Natkeeran (பேச்சு) 21:33, 13 ஏப்ரல் 2014 (UTC) வெளி இணைப்புகள் குறித்த இக்கொள்கைப் பக்கம் கட்டுரையின் இறுதியில் பட்டியலாகத் தரப்படும் வெளியிணைப்புகளைப் பற்றியே பேசுகிறது. மேற்கோள்கள் / ஆதாரங்கள் / உசாத்துணைகள் பகுதியில் வரும் இணைப்புகளை எப்படி அணுகுவது என்று தெளிவாக இல்லை (குறைந்தபட்சம் எனக்கு). எனவே தான், அதனையும் தெளிவாகச் சேர்க்க கோருகிறேன். குழப்பத்துக்கு வருந்துகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 21:36, 13 ஏப்ரல் 2014 (UTC)
வலைப்பதிவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டுகோள்தரமான தரமில்லாத வலைபூக்கள்னு வகைப்படுத்துவது கடினம். அதே போல் இந்த விதியையும் கவனிக்கவும். இவர் ஒருவர்னு இல்லை. சமீபகாலமாக அரசர்களை தங்கள் சாதி என அடையாளப்ப்டுத்தும் வெளியிணைப்புகள் பல இணைக்கப்படுகின்றன. அவர்களிடமும் இதே நடைமுறை தான் வைக்கப்படுகிறது. மேற்கோள்களுக்கு வெளியிணைப்புகளை கொடுப்பது எந்த விதத்திலும் நன்மை பயக்காது. //ஒரு விக்கிப்பயனரின் பக்கத்தை மற்றொரு விக்கிப்பயனர் இணைப்பதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஆதாய முரண் (Conflict of Interest) ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.//--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:25, 8 சூலை 2015 (UTC) ஆதாய முரண் (Conflict of Interest) என்பதை விக்கிக்கு வெளியிலும் பார்க்க வேண்டும். எனக்குத் தெரிந்த ஆய்வாளரை வைத்து நான் எனக்குத் தோன்றுவதை எழுதச் சொல்லிவிட்டு அதை இங்கு இணைத்து இதோ பாருங்கப்பா ஆதாரம்னு வச்சா என்ன பண்ணுவீங்க?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:30, 8 சூலை 2015 (UTC) விதிவிலக்குசில ஆய்வாளர்கள் பல்கலைக்கழகங்களில் தன் ஆய்வுகளை வெளியிட்டு அதன் நகலை வலைபூக்களில் தருவார்கள். அதன் இணைப்புகள் மட்டும் அனுமதிக்கபடுவதில் சிக்கல் இல்லை. எடுத்துக்காட்டுக்கு பேச்சு:ஹாத்திகும்பா கல்வெட்டு--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:39, 8 சூலை 2015 (UTC) |
Portal di Ensiklopedia Dunia