விண்டோசு 11 (windows 11) என்பது மைக்ரோசாப்ட் உருவாக்கிய விண்டோசு என்டிஇயக்க முறைமையின் முக்கிய பதிப்பாகும், இது ஜூன் 24, 2021 அன்று அறிவிக்கப்பட்டது , மேலும் இது 2015 ஆம் ஆண்டில் வெளியான விண்டோசு 10 இன் அடுத்த பதிப்பாகும். விண்டோசு 10 பயன்படுத்தும் தகுதியான பயனர்களுக்கு விண்டோசு அப்டேட் மூலம் கட்டணம் செலுத்தாமல் விண்டோசு 11 ஐ மேம்படுத்தும் வசதி அக்டோபர் 5, 2021 அன்று வெளியிடப்பட்டது.
மைக்ரோசாப்ட் , விண்டோசு 10 -ஐ விட விண்டோசு 11 செயல்திறன் மேம்பாடு கொண்டிருப்பதாகவும் அனுகலை எளிமையாக்கியிருப்பதாகவும் அறிவித்தது.
விண்டோசு 11 கலவையானது முதல் நேர்மறையான வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்க முறைமையின் முன் வெளியீடு அதன் கடுமையான வன்பொருள் தேவைகளில் கவனம் செலுத்தியது. விண்டோசு 11 அதன் மேம்பட்ட காட்சி வடிவமைப்பு, சாளர மேலாண்மை மற்றும் பாதுகாப்பில் அதிக கவனம் ஆகியவற்றிற்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் அதன் பயனர் இடைமுகங்களில் செய்யப்பட்ட மாற்றங்களினால் எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றது.
வளர்ச்சி
2015 இக்னைட் மாநாட்டில், மைக்ரோசாப்ட் ஊழியர் ஜெர்ரி நிக்சன் "விண்டோசின் கடைசி பதிப்பாக விண்டோசு 10 இருக்கும்" என்று கூறினார், மைக்ரோசாப்ட் அறிக்கையின் மூலமாக அவரது கூற்றினை உறுதி செய்தது.[5][6] இருப்பினும், ஒரு புதிய பதிப்பு அல்லது விண்டோசின் மறுவடிவமைப்பு பற்றிய ஊகம் ஜனவரி 2021 இல் எழுந்தது, "விண்டோசின் புத்துயிர்ப்பு காட்சியை" குறிப்பிடும் வேலை பட்டியலை மைக்ரோசாப்ட் வெளியிட்டது.[7] விண்டோசிற்கான காட்சி புதுப்பிப்பு, "சன் பள்ளத்தாக்கு" என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டது, இது கணினியின் பயனர் இடைமுகத்தை மறு வடிவமைக்க அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.[8]
வெளியீடு
விண்டோசு 11 பெயர் தற்செயலாக ஜூன் 2021 இல் அதிகாரப்பூர்வ மைக்ரோசாப்ட் ஆதரவு ஆவணத்தில் வெளியிடப்பட்டது.[9][10] விண்டோசு 11 இன் மேசைக் கணிபொறியின் ஒரு சோதனை உருவாக்கத்தின் படங்கள் வலைத்தளங்களில் ஜூன் 15, 2021,[11][12] அன்று வெளிவந்தன.
ஜூன் 24 ஊடக நிகழ்வில், மைக்ரோசாப்ட் விண்டோசு 11 "ஹாலிடே 2021" இல் வெளியிடப்படும் என்று அறிவித்தது, ஆனால் வெளியிடப்படும் சரியான தேதி குறிப்பிடப்படவில்லை.[13][14] விண்டோசு புதுப்பிப்பு மூலம் இணக்கமான விண்டோசு 10 சாதனங்களுக்கான இலவச மேம்படுத்தலுடன் அதன் வெளியீடும் இருக்கும் என்று கூறப்பட்டது.[15] ஜூன் 28 அன்று, மைக்ரோசாப்ட் விண்டோசு 11 இன் முதல் முன்னோட்ட உருவாக்கத்தையும் மென்பொருள் உருவாக்கக் கருவித்தொகுதியையும் (SDK) விண்டோசு இன்சைடர்களுக்கு வெளியிடுவதாக அறிவித்தது .[16]
மைக்ரோசாப்ட், விண்டோசு 11 அக்டோபர் 5, 2021 அன்று வெளியிடப்படும் என்று ஆகஸ்ட் 31, 2021 இல் அறிவித்தது.[17] வெளியீடு படிப்படியாக இருக்கும் என்றும், புதிய தகுதி சாதனங்கள் முதலில் மேம்படுத்தப்படும் என்றும் அறிவித்தது. அதற்கு முன்னர் வெளியான விண்டோசு 10 ஜூலை 29, 2015 அன்று வெளியிடப்பட்டதிலிருந்து, ஆறு வருடங்களுக்குப் பின்னர் அதன் அடுத்த பதிப்பு வெளியாகிறது. மைக்ரோசாப்ட் விண்டோசு இயக்க முறைமைகளின் தொடர்ச்சியான வெளியீடுகளுக்கு இடையேயான மிக நீண்ட கால இடைவெளியாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக விண்டோசு எக்சு. பி. அக்டோபர் 25, 2001 அன்று வெளியிடப்பட்டது மற்றும் விண்டோசு விஸ்டா ஜனவரி 30, 2007 அன்று வெளியிடப்பட்டதே அதிக கால இடைவெளி கொண்டதாக இருந்தது.[18]
மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வமாக விண்டோசு 11 ஐ அக்டோபர் 4, 2021 அன்று 2:00 மணிக்கு வெளியிட்டது. விண்டோசு அப்டேட் மூலம் இற்றைகள் படிப்படியாக வெளிவருகின்றன,மைக்ரோசாப்ட் "அனைத்து தகுதியுள்ள விண்டோசு 10 சாதனங்களும் விண்டோசு 11 , 2022 ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறியது.[19][20]
↑Panay, Panos (June 24, 2021). "Introducing Windows 11". Windows Experience Blog (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on June 24, 2021. Retrieved June 24, 2021.