வினோத் குமார் பின்னி
வினோத் குமார் பின்னி (Vinod Kumar Binny)(பிறப்பு 1973) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தில்லி மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தில்லியில் உள்ள இலட்சுமி நகர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் 2013 முதல் 2014 வரை ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக இருந்தார்.[2] பின்னர் 2015ல் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) சேர்ந்தார்.[3] அரசியல்2013ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேருவதற்கு முன்பு, இவர் இரண்டு முறை சுயேச்சை வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட்டு இரண்டு முறையும் வெற்றி பெற்றார். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி தேர்தலின் போது, லட்சுமி நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் அசோக் குமார் வாலியாவை சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5] திசம்பர் 2013-ல், ஆம் ஆத்மி கட்சி தனது உறுப்பினர்களை அமைச்சரவைக்கு தீர்மானித்த கூட்டத்திலிருந்து இவர் வெளிநடப்பு செய்தார், ஆனால் நெருக்கடியை அதிகரிப்பதற்காகப் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. சனவரி 2014-ல், பின்னி, ஆம் ஆத்மி கட்சி தில்லி மக்களுக்குத் துரோகம் செய்வதாகவும், கொள்கைகளிலிருந்து விலகுவதாகவும் குற்றம் சாட்டினார்.[6] 26 சனவரி 2014 அன்று, இவர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து ஒரு ஒழுங்கு நடவடிக்கையின் மூலம் வெளியேற்றப்பட்டார்.[2] இவருடைய கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இவர் தனது சட்டமன்ற உறுப்பினர் உரிமைகளைப் பாதுகாக்கக் கோரியும், சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வதற்காகவும் தில்லி உயர் நீதிமன்றத்தை நாடினார்.[7] 2015 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு, இவர் 18 சனவரி 2015 அன்று பாஜகவில் இணைந்து பட்பர்கஞ்சி தேர்தலில் போட்டியிட்டார்.[3] இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சகாவான மணீஷ் சிசோடியாவிடம் 28,761 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia