விராடபுரம்
விராடபுரம் (Viradapuram)அல்லது தாராபுரம் என்னும் ஊர் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தற்போதைய தாராபுரம் பகுதியின் பழைய பெயர் விராடபுரம் ஆகும். புவியியல்இவ்வூரின் அமைவிடம் 10.73°N 77.52°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 245 மீட்டர் (803 அடி) உயரத்தில் அமைந்து இருக்கின்றது. மக்கள் தொகை2011 ஆன் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,82,752 பேர் இங்கு வாழ்கின்றனர். கோயில்இங்கு வீர ராகவர் கொயில் உள்ளது. இது 18 ஆண்டுகளாக வழிபாட்டுக்குத் திறக்கப்படாமல் உள்ளது. இதைத் திறந்துவைக்க அரசிடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொன்மக் கதைபஞ்சபாண்டவர் இங்கு மறைந்து வாழ்ந்திருந்ததாக ஒரு கல்ல்வெட்டு உள்ளது. காற்றாலைகள்விராடபுரம் பகுதி புவியியல் ரீதியாகப் பலமான காற்றைப் பெறுகிறது என்பதால், தமிழகத்தின் முக்கியமான காற்றாலை நகரமாக மாற்றம் பெற்றுள்ளது. உசாத்துணை1.2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". 2."மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015. 3.https://www.dailythanthi.com/News/State/maitanance-in-uthara-veraragava-perumal-temple-821048 |
Portal di Ensiklopedia Dunia