வில்லங்கச் சான்றிதழ்வில்லங்கச் சான்றிதழ் (Encumbarance Certificate - EC), ஒரு சொத்துக்கு யார் உரிமை உள்ளவர் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சான்றாக உள்ளது. வில்லங்கச் சான்றிதழ் என்பது ஒரு சொத்து யாருடைய கைகளில் இருந்து எப்படி மாறி வந்துள்ளது, சொத்து உரிமை யாருக்கு மாற்றப்பட்டது போன்ற விவரங்களை அறிந்துகொள்ளும் ஆவணமாக உள்ளது. வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிட்ட சொத்தின் மீதான சட்டபூர்வமாக வில்லங்கங்கள் தெரியவரும். எனவே சொத்தினை வாங்குதற்கு முன், அச்சொத்து குறித்த வில்லங்கச் சான்றிதழை பத்திரப் பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெற்று, சொத்து குறித்தும், அதன் உண்மையான உரிமையாளர்/உரிமையாளர்களைக் குறித்து சரிபார்க்க வேண்டும்.[1] ஒரு சொத்தை வாங்க விரும்புவர்கள், அந்தச் சொத்தில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா, சொத்தை விற்பவர் பெயரில்தான் அந்தச் சொத்து உள்ளதா என்பதை அறிவதற்காகச் சொத்து விவரத்தைத் தெரிவித்து வில்லங்கச் சான்றிதழை பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி பெறவேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத் துறை இணையதளத்திலும் வில்லங்கச் சான்றிதழைப் பெறலாம்.[2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia