வெற்றி நாள் (மே 9)
வெற்றி நாள் (Victory Day[a 1] 1945 ஆம் ஆண்டில் நாட்சி செருமனியின் சரணடைதலை நினைவுகூரும் விடுமுறை நாள் ஆகும். 1945 மே 8 மாலையில் (மாஸ்கோ நேரம் மே 9 நள்ளிரவிற்குப் பின்னர்) செருமனி சரணடைந்தமை கையெழுத்திடப்பட்டதை அடுத்து, சோவியத் ஒன்றியத்தின் 15[1] குடியரசுகளால் இந்நாள் முதன் முதலில் நினைவுகூரப்பட்டது. சோவியத் அரசு பெர்லினில் கையெழுத்திடும் விழா முடிவடைந்தவுடன் அதனை மே 9 அதிகால அறிவித்தது.[2] 1945 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், 1965 ஆம் ஆண்டிலேயே இந்நாள் தொழிலாளர் அல்லாத அனைவருக்குமான விடுமுறை நாளாக சில சோவியத் குடியரசுகளில் மட்டுமே அறிவிக்கப்பட்டது. கிழக்கு செருமனியில், மே 8 வெற்றி நாள் 1950 முதல் 1966 வரை கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1985 இல் 40-வது நிறைவு நாள் கொண்டாடப்பட்டது. 1975 இல், சோவியத் முறையிலான "வெற்றி நாள்" மே 9 இல் கொண்டாடப்பட்டது. 2002 முதல், செருமனியின் மெக்லென்பூர்க்-வோர்போமர்ன் மாநிலம் தேசிய சோசலிசத்தில் இருந்து விடுதலை நாளாகவும் இரண்டாம் உலகப் போர் முடிவு நாளாகவும் கொண்டாடி வருகிறது.[3] 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு உருசியக் கூட்டமைப்பு உருவானதில் இருந்து மே 9 ஐ அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. இந்நாள் ஒரு வார இறுதியில் வந்தாலும், இதனை வேலை செய்யாத நாளாகவே கருதுகிறது (அதன் பின் வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை நாளாகும்). இவற்றையும் பார்க்ககுறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia