வேங்கைப்புலி அல்லது ஆசியச் சிறுத்தை (Acinonyx jubatus) என்பது பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டி ஆகும். ஜனவரி 2022இல் ஈரானிய சுற்றுச்சூழல் துறையின் மதிப்பீட்டு நிலவரப்படி, 9 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 12 வேங்கைப்புலிகள் மட்டுமே ஈரானில் எஞ்சியுள்ளன.[3] வேங்கைப்புலி பாதுக்காப்புக்கான பன்னாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2014 FIFA கால்பந்து உலகக் கோப்பையில் ஈரான் தேசிய கால்பந்து அணியின் ஜெர்சியில் ஒரு விளக்கப்படம் பயன்படுத்தப்பட்டது.[4]
இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் சிறுத்தை வேட்டை மிகப் பெயர் பெற்று இருந்தது.[5]இவற்றின் எண்ணிக்கை 20ம் நூற்றாண்டில் பெருமளவு குறைந்துவிட்டது. 1947ல் மத்திய பிரதேச சுர்குச மன்னர் இச்சிறுத்தையை வேட்டையாடியதே இதை இந்தியாவில் கடைசியாக பார்த்த ஆதாரம். உலகில் தற்போது இவை ஈரானில் மட்டுமே காணப்படுகின்றன.