வேளச்சேரி தொடருந்து நிலையம்வேளச்சேரி தொடருந்து நிலையம் (Velachery railway station) சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தைச் சார்ந்த வேளச்சேரியில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும். வரலாறு19 நவம்பர் 2007 அன்று வேளச்சேரி தொடருந்து நிலையம் செயல்பட துவங்கியது. வேளச்சேரி தொடருந்து நிலையமானது சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இடையே ஒரு எல்லை போல் செயல்படுகிறது. அமைவிடம்இங்கு உள்ள நடைமேடையின் நீளம் 280 மீட்டர் ஆகும்.[1] தொடருந்து நிலைய வளாகத்தில் 12,250 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட திறந்தவெளி வாகன நிறுத்த வசதி உள்ளது.[2] தொடருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீ தொலைவில் (வேளச்சேரி) விஜயநகரம் பேருந்து நிலையம் உள்ளது. அங்கிருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு பேருந்தில் செல்லலாம். போக்குவரத்துஇந்த நிலையத்தில் இருந்து பூங்கா நகர் வரை தொடர்வண்டியில் செல்லலாம். பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்தூரிபா நகர், மைலாப்பூர் வழியாக சென்னை சென்ட்ரல்(பூங்கா நகர்) நிலையத்தை அடையலாம். படங்கள்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia