வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட்
![]() வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட் (Wolfgang Amadeus Mozart, ஜனவரி 27, 1756 - டிசம்பர் 5, 1791) ஒரு புகழ்பெற்ற, சிறந்த, ஐரோப்பிய செவ்விசையமைப்பாளர் ஆவார். இசை வரலாற்றின் மிகவும் புகழ்பெற்ற பல ஒத்திசைகள், ஆப்பெராக்கள் போன்ற பல இசையாக்கங்களைச் செய்தவர். மோட்சார்ட் இளம் வயதிலிருந்தே தமது திறமையை காட்டி வந்துள்ளார். கிளபத்திலும் வயலினிலும் தேர்ந்த மோட்சார்ட்டு ஐந்தாம் அகவையிலேயே இசைத் தொகுக்கத் தொடங்கி ஐரோப்பிய அரச குடும்பங்களில் நிகழ்த்தினார். 17ஆவது அகவையில் சால்சுபர்கு அரச இசைக்கலைஞராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அமைதியுறாது பல இசையாக்கங்களை தொகுத்தவாறு மேலும் உயர்நிலைக்காக தேடி அலைந்தார். இவாறு 1781இல் வியன்னா சென்றபோது, சால்சுபெர்கில் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் எவ்வித நிதி ஆதாரமுமின்றி தலைநகரில் வாழ்ந்திருந்த மோட்சார்ட்டின் புகழ் பரவலாயிற்று. வியன்னாவில் அவரிருந்த கடைசி நாட்களில் அவருடைய பல புகழ்பெற்ற ஒத்திசைகள், ஆப்பெராக்கள், கான்செர்டோக்களை எழுதினார். இளம் அகவையிலேயே ஏற்பட்ட அவரது மரணம் குறித்து பல கருத்துக்கள் வெளிவந்துள்ளன. அவர் இறக்கும்போது கான்சுடான்சு என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருந்தனர். 600க்கும் மேற்பட்ட இசைவாக்கங்களை அவர் தொகுத்துள்ளார்; இவற்றில் பல ஒத்திசை, இசைக்கச்சேரி, அரங்கவிசை, ஆப்பெரா, குழுவிசை வகைகளில் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. பன்னெடுங்காலமாக போற்றப்படும் செவ்விசை இசைத்தொகுப்பாளர்களில் ஒருவராக உள்ளார். பிற்காலத்திய மேற்கத்திய இசையில் இவரது தாக்கம் அளவிடற்கரியது. தமது துவக்க கால இசைவாக்கங்களை பேத்தோவன் மோட்சார்ட்டின் பாணியிலேயே இயற்றினார். "இத்தகைய திறமையை இன்னமும் நூறு ஆண்டுகளுக்குக் காணவியலாது" என சமகால இசையமைப்பாளர் ஜோசப் ஹேடன் எழுதினார்.[1] குடும்பச்சூழல்வோல்ப்கேங் அமதியுஸ் மோசார்ட் ஜனவரி 27. 1756 அன்று ஆஸ்திரியாவில் சால்சுபர்கு சமத்தானத்தில் பிறந்தார்[2] . இவரின் தந்தை பெயர் லியோபோல்ட் மொசார்ட். இவரின் தாயார் பெயர் அன்னா. இந்த இணையருக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் இவரே மிக இளையவராவார். இவரின் அக்கா பெயர் மரியா அன்னா வால்பர்கா இக்னேசியா. மொசர்டின் அக்காவை செல்லமாக "நானெல்" என அழைப்பார். மற்ற ஐந்து குழந்தைகளும் இளம் வயதிலேயே அம்மைநோயினால் இறந்தனர்.[3] மொசாட்டுக்கும் பதினைந்தாம் வயதில் அம்மைநோய் ஏற்பட்டு ஒரு வருடத்தில் குணமடைந்தார். மொசர்டின் தந்தை ஜெர்மனியில் தான் பிறந்தார். படிப்புக்காக ஆஸ்திரியா வந்தார். தத்துவவியல் ஆர்வமும் அவருக்கு இயல்பாகவே இருந்தது. லியோபோல்ட் மொசார்ட் 1747 இல் அன்னா மரியா பேர்டில் எனும் ஆஸ்திரியப் பெண்ணைத் திருமணம் முடித்தார். அன்னாவின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக செயின்ட் கில்கேன் பகுதியில் வாழ்ந்து வந்தது. லியோபோல்ட் திருமணம் செய்துகொண்ட நேரம் அவருக்கு பெரிய உத்தியோகம் கிடைத்தது. அவ்வேலை என்னவென்றால் சார்ல்பர்க் தேவாலய சங்கீதக் குழுவுடன் நான்காவது வயலினிஸ்டாக பணியாற்றுதல். சிலகாலத்திலேயே லியோபோல்ட் சார்ல்பர்க் கதீட்ரல் குழுவின் முகமாகவும் முகவரியாகவும் ஆகிப்போனார். 1763 இல் லியோபோல்ட் கேப்பல்மேய்ச்டர் ஆகவும் ஆனார். அதாவது இசையமைத்து குழுவை வழிநடத்தும் பணி. லியோபோல்டு நானெல் ஏழு வயதிருக்கும்போது கிளபம் கற்கத் தொடங்கியபோது மூன்று வயது தம்பி மோட்சார்ட் ஆர்வத்துடன் அந்தப் பயிற்சிகளை கேட்பார்.[4] இதனையடுத்து இவர் சிறுவயதிலேயே இசையில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். மொசார்ட் தனது தந்தையிடமே ஏழு வருடம் வயலின் கற்றார். அப்போதே சிறுசிறு இசைத்தொகுப்புக்களை இயற்றித் தந்தையிடம் சொல்ல அவர் அதனை எழுத்தில் வடிப்பார். இந்த துவக்க கால ஆக்கங்கள் K 1–5 எனப் பதியப்பட்டுள்ளன. இவர் தனது முதல் இசைத்தொகுப்புக்களை இயற்றியபோது இவரது அகவை நான்கா அல்லது ஐந்தா என ஆய்வுரையாடல் நடக்கின்றது.[5] 1b[6] மற்றும் 1c[7][8] இவரது வரலாற்றாளர் மேய்னார்டு சாலமன்[9] மோட்சார்டிற்கு தந்தை பயிற்சி தந்தபோதிலும் அதனையும் கடந்து மோட்சார்ட் செல்லத் தொடங்கியதை உணர்ந்ததாக எழுதியுள்ளார். வயலினில் அவர் காட்டிய திறமையும் மசிகொட்டிய இசைக்குறிப்புகளும் அவரது தந்தைக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது.[10] தனது மகனின் திறமையைக் கண்டபின்னர் தாம் இசைத் தொகுப்பதை நிறுத்திக் கொண்டார்.[11] இவரது இளமைக் காலத்தில் தந்தையே ஆசிரியராகவும் விளங்கினார். இசையுடன் மற்ற மொழிகளையும் பாடங்களையும் கற்பித்தார்.[9] இளமைப்பருவம்மொசார்ட் தனது மூன்றாவது வயதில் மேற்கதேய க்ளாசிக்கல் இசையின் மறுபெயராக உருவெடுக்கத் தொடங்கினார். மொசார்ட் தனது அக்காவுடன் பங்குபெற்ற முதல் அரங்கேற்றம் ஜெர்மனியின் தெற்கு எல்லையில் மூனிச் நகரில் இடம்பெற்றது. மொசார்ட்டை இரண்டாவதாக வியன்னா இம்பிரியல் கோர்ட்டில் அரங்கேற்றினர் அவரது பெற்றோர். மொசார்ட் தனது ஏழாவது வயதில் சிம்பொனி இசையின் தந்தையான ஜொஹான் கிறிஸ்டியன் பார்க் என்பவரைச் சந்தித்தார்.மொசார்ட் இத்தாலியில் இசைமேதையான பாரிஸ்டே மார்டின் என்பவரைச் சந்தித்தார். மார்டினியிடம் இசை நூலகம் இருந்தது. அங்கு பல அரிய இசை நூல்களும் பல இசைத் தட்டுக்களும் அரிய ஆக்கபூர்வமான இசைக்கருவிகளும் உள்ளன. மர்டினியின் உதவியால் இத்தாலியிலுள்ள பில்ஹர்மொனிக் எனும் அக்கடமியில் உறுப்பினராகச் சேர்ந்தார். வாலிபப்பருவம்வத்திக்கான் தேவாலயத்தில் இசைக்கப்படும் பைபிளிலுள்ள சங்கீதத்தை யாரும் பதிவு செய்வதில்லை பதிவு செய்யவும் கூடாது என்பது வத்திக்கான் விதி. எல்லா இசைக்கலைஞர்களும் அதைப் பாட முடியாது. மிகச்சிறந்த இசைக்கலைஞர்கள் மட்டும் தலைமுறை தலைமுறையாக இவ்விசையை இசைப்பார்கள். ஆனால் மொசார்ட் இவ்விசையை ஒருமுறை கேட்டவுடனேயே அச்சங்கீதத்தின் ஸ்வரக்கட்டுக்களை மனதில் பதிவு செய்து இரண்டாம் முறை அதனைக் கேட்டு திருத்தங்கள் செய்தார். இதனை லண்டனுக்குக் கொண்டு சென்று Dr.Charles barne என்பவருக்குக் கொடுத்தார். இதன் மூலம் தனிச்சொத்தான இவ்விசையை புதுப்பித்து மக்களின் பொதுச்சொத்தக்கினார். 1773 இல் மொசார்ட் தன் முழுநீள இசைக்கோவையை எழுதினார். இது மிக எளியது ஆனால் உள்ளத்தைத் தொடும் இதமான இசை. அவ்விசையின் பெயர் Exsultate, jubilate 1773 இல் இவர் ஆஸ்திரியா திரும்பினார். அந்த நாட்டின் அரசசபைக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்.1773 இல் இவர் அமைத்த இசைதான் இன்றைக்கும் பெரும்பாலான மேடைகளில் இசைக்கப்படுகின்றன. titan Quartz கடிகாரத்தின் விளம்பரத்தின் பின்னணி இசையும், கரை பின்னெடுக்கும் போது ஏற்படும் இசையை உற்றுக் கேட்டால் அவை மொசர்டின் இசை என்பது தெரியும். எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் இவர் வருமானப் பற்றாக்குறையால் பாரிஸ் சென்றார். ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட மரியா அலாய்சியா லூயி அந்தோனியா வெபர் அவரை மன்கெய்மின் இல் சந்த்தித்தார். அலாய்சியா இசைக்குடும்பத்தில் பிறந்தவர். அருமையாகப் படுவார். மன்கேய்மின் ஆர்க்கெஸ்டிரா குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்காக வந்தபோதுதான் அலாய்சியாவின் குடும்பத்தைச் சந்தித்தார். மொசார்ட் அலாய்சியாவைக் காதலித்தார்.இருப்பினும் ஒரு சந்திப்பின்போது மொசார்ட் வேலை தேடிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும் அவர்களுடைய காதல் முறிவடைந்தது. இவரது பாரிஸ் பயணம் வேலை கிடைக்காமை, காதலி கைவிட்டமை, தாய் இறந்தமை என்பவற்றால் துன்பகரமாக அமைந்தது. மொசார்ட் அலாய்சியாவின் சகோதரிகளில் ஒருத்தியான Hans danse என்பவளை திருமணம் முடித்தார். இரண்டன் ஜோர்ச் மன்னனின் பதவியேற்பு விழாவின் அவர் தன்னை அதிகாரப்படுத்தியதும் அவமானப்படுத்தியதும் மொசர்டைப் பாதித்தன. இதனால் மொசார்ட் ராஜினாமாக்கடிதம் கொடுக்க அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை பின் அரசினால் ராஜினாமா செய்யப்பட்டார்.மொசர்ட்க்கு ஆறு குழந்தைகள் பிறந்து நான்கு பிள்ளைகள் இறந்து விட்டனர். மொசர்டின் ஒபாரா இசைவடிவங்கள் ஐரோப்பா எங்கும் பரவின.1785 ஆம் ஆண்டு மொசார்டின் இசைக்கச்சேரிகள் ஐரோப்பா எங்கும் சூடுபிடித்தபோது ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் இளம் இசைக்கலைஞர் மொசர்டைப் பார்க்க வந்தார். அவர் பெயர் லுட்விக் வான் பீத்தோவன். இறப்பு1787 இல் ஆஸ்திரிய-துருக்கி யுத்தம் நடைபெற்றதால் மொசர்டும் மற்றும் பல இசைக்கலைஞர்களும் கச்சேரிகள் நடத்துவதை விட்டுவிட்டனர். இக்காலகட்டத்தில் மொசார்ட் மிகச்சிறந்த சிம்பொனிகளை உருவாக்கினார். சிம்பொனி எனும் கிரேக்கச் சொல்லுக்குப் பொருள் இசைசேர்க்கை என்று பொருள். 1791 இல் மொசர்டின் உடல் நிலை மோசமானது. 1791 டிசம்பர் 5 ம் திகதி இரவு அவர் கண் முடினார். மொசர்டை வியன்னா நறுக்கு வெளியே இருந்த செய்ன்ட் மார்கஸ் கல்லறையில் 7 ஆம் திகதி வைத்தனர். ஊடகக் கோப்புகள்
கூட்டிசை (orchestra)வாய்ப்பாட்டுபியானோமேலும் காண்கமேற்சான்றுகள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட்
எண்ணிம ஆவணங்கள்
தாள் இசை
|
Portal di Ensiklopedia Dunia