ஸ்கைஸ்கிராப்பர் (2018 திரைப்படம்)
ஸ்கைஸ்கிராப்பர் (Skyscraper) என்பது வெளிவர இருக்கின்ற அமெரிக்க அதிரடி பேரழிவு திரில்லர் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராசன் எம்.தர்பர் எழுதி இயக்கியிள்ளார். இப்படத்தில் டுவெயின் ஜான்சன், நீவ் காம்ப்பெல், சின் ஹான், ரோலண்ட் மோல்லர், பப்லோ ஸ்கிராபெர், பைரன் மான், ஹன்னா குவின்லிவன், நோவா டெய்லர் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு 2017 செப்டம்பரில் கனடாவின் பிரித்தானிய கொலம்பியாவின் வன்கூவரில் தொடங்கியது. இது 2018 சூலை 13 அன்று யுனிவர்சல் பிக்சர்சால் 2டி மற்றும் 3டி இல் வெளியிடப்பட உள்ளது. கதைச்சுருக்கம்ஹாங்காங்கில் புதியதாக வானளாவும் புதிய கட்டிடம் ஒன்று உருவாகிறது. இந்தக் கட்டிடத்தின் தலைமை பாதுகாப்பு அலுவலராக எஃப்.பி.ஐயில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரியான ட்வைன் ஜான்சன் பொறுப்பேற்று, தன் குடும்பத்துடன் தங்குகிறார். "தி பெர்ல்" என்று அறியப்படும் இந்த வானளாவிய கட்டிடமானது பல மாடிகளைக் கொண்டதாக உள்ளது. கட்டிடத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளை கண்டறிந்து நிர்வாகத்திடம் இவர் முறையிட்டதை முதலாளிகள் ரசிக்கவில்லை ஒரு நாள் அந்தக் கட்டிடத்தில் ஊடுருவும் தீவிரவாதிகளால் 96-வது தளத்தில் தீ மூளுகிறது. இதனால் தீ கட்டிடம் நெடுகப் பரவுகிறது. இந்தப் பழியானது ஜான்சன் மீது சுமத்தப்பட்டு ஜான்சனை காவல்துறை ஒருபக்கம் விரட்ட, மறுபக்கம் தீப்பிடித்து எரியும் கட்டிடத்துக்குள் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் போராடி, அதேசமயம் எரியும் தளத்தில் சிக்கிய தனது குடும்பத்தையும் காப்பாற்றப் போராடுகிறார். நடிகர்கள்
மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia