இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
அலறலொலிவைகள்(screamers) என்பவை அங்கிமிடே குடும்பம் சார்ந்த தென் அமெரிக்க நீர்ப் பறவைகள் ஆகும். இவை வாத்துகளுக்கு(அனட்டாடிடே குடும்பம்) மிக நெருக்கமானவை; தாரா வாத்துகளுக்கு மேலும் நெருக்கமானவை; அலகைப் பார்த்தால்,அன்னப்பறவை வகைகளை சேர்ந்ததாக நினைக்கத் தோன்றுகிறது.[1][2] தென் அமெரிக்காவில் காணப்படும் இப்பறவையின் கத்தல் அலறுவது போல் இருப்பதால் இப்பெயர் வந்தது.பறவைகளில் இவ்வகை பறவைக் கவைப்பிரிவு விலாநீட்சியற்றனவாக விதிவிலக்காக அமைகின்றன.[3] இவற்றில் கொம்பலறி(அங்கிமா கார்னுட்டா), தென்னலறி அல்லது கொண்டையலறி(சாவுனா தார்குவாட்டா), வடக்கலறி அல்லது கருங்கழுத்து அலறி(சாவுனா சவாரியா) என மூவகையுண்டு.
இவற்றின் இறக்கைகளின் முன் புறத்தில் முள் போல் இரண்டு புடைப்புகள் துருத்திக்கொண்டிருக்கும். குட்டையான வளைந்த அலகுகள் உடையவை. இவற்றின் உணவு, நீர் தாவரங்கள். இவைகளின் உடலின் அடிப்பகுதியில் காற்றுப்பை இருப்பதால் நீரில் நன்றாக மிதந்து செல்லும். இவற்றுக்கு விரலிடை மென்படலம் கிடையாது. இவற்றில் கொம்புடைய ஒரு இனமும் உள்ளது. தலையின் முன் பகுதியில் 15 சென்டிமீட்டர் நீளத்திற்கு முன்புறமாக வளைந்த முள் போலிருக்கும் அக்கொம்பு.[4]