அகமது செசாத்
அகமது செசாத்(Ahmed shehzad,Urdu: احمد شہزاد பிறப்பு: 23 நவம்பர் 1991), ஒரு பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரர்.[1] லாகூர் இல் பிறந்த இவர் மட்டையாளர். பாக்கிஸ்தான் தேசிய அணி, லாகூர் துடுப்பாட்ட அணி அணி, கபீப் வங்கி அணி, லாகூர்ஈகல் லாகூர்ரவி லாகூர்சலிமார் அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார். இவர் பாக்கித்தானிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். 2009 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அறிமுகமானார்.[2] தனிப்பட்ட வாழ்க்கைஅகமது செசாத் 23 நவம்பர் 1991 இல் லாகூரில் பிறந்தார்.இவர் பஷ்தூன் மக்கள் மரபைச் சேர்ந்தவர் ஆவார். இவர் பஷ்தூ மொழியை சரளமாகப் பேசும் திறன் பெற்றவர்.[3][4] இவருக்கு இரண்டு வயதாக இருக்கும் போது இவரின் தந்தை காலமானார். இவரின் தாயோடு லாகூரில் உள்ள அனார்க்கலியில் வசித்து வந்தார்.[5] செப்டம்பர் 19, 2015 இல் இவரின் நீண்ட நாள் தோழியான சனா என்பவரைத் திருமணம் செய்தார்.[6][7] 2007 ஆம் ஆண்டில் தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இந்தப் போட்டியில் 167 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து துடுப்பட்ட அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கு உதவினார்.[8] தேர்வுத் துடுப்பாட்டங்கள்2014 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . டிசம்பர் 31 , இல் அபுதாபியில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 83 பந்துகளில் 38 ஓட்டங்களை எடுத்து எரங்காவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 109 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்து ஜெராத்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டி சமனில்முடிந்தது.[9] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்ஏப்ரல் 24, 2009 இல்ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[2] சாதனைகள்ஆதாரங்கள்:[10] தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் நூறு ஓட்டங்கள் அடித்த முதல் பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்.[11][12] பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிக நான்கு மற்றும் ஆறு ஓட்டங்கள் அடித்த பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்.[13] இரு போட்டிகள் கொண்ட பன்னாட்டு இருபது20 போட்டித் தொடரில் 160 ஓட்டங்கள் சேர்த்து அதிக ஓட்டங்கள் சேர்த்த பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்.[14] லாகூர் லயன்ஸ் அணியில் அதிக ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தார். 76 போட்டிகளில் இவர் அனைத்து வடிவப் போட்டிகளிலும் நூறு ஓட்டங்கள் அடித்த இரண்டாவது சர்வதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.இதற்கு முன்பாக கே. எல். ராகுல் இந்தச் சாதனை படைத்தார். பாக்கித்தான் சூப்பர் லீக்கில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரர் எனும் சாதனை படைத்தார். பன்னாட்டு இருபது20 போட்டியில் ஹேட்ரிக் ஆறு ஓட்டங்கள் அடித்த முதல் பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார். சான்றுகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia