பஷ்தூ மொழி
பசுதூ மொழி ஆக்கானித்தானிலும், மேற்குப் பாக்கித்தானிலும் வாழும் பாசுதூன் இனத்தவரால் பேசப்படும் மொழியாகும். வகைப்பாடுஇம்மொழி, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானியப் பிரிவின் தென்கிழக்கு ஈரானிய மொழிக் குழுவைச் சேர்ந்தது. சாரிக்கோலி, வாக்கி, முஞ்சி, ஷுக்னி போன்ற மொழிகளும் இக் குழுவைச் சேர்ந்த மொழிகளாகும். ஈரானிய மொழிகள் பிரிவைச் சேர்ந்த பாரசீக மொழி, குர்தி மொழி, பலுச்சி மொழி, கிலாக்கி மொழி என்பனவும், காக்கேசியப் பகுதியில் பேசப்படும் ஒசெட்டிக் மொழியும் பஷ்தூ மொழிக்கு நெருங்கிய தொடர்புள்ளவை. புவியியற் பரம்பல்பஷ்தூ, பாகிஸ்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணம் மற்றும் பலூச்சிஸ்தான் போன்ற பகுதிகளில் சுமார் 15 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் தெற்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளிலும் குறைந்த அளவில் வடக்குப் பகுதியிலும் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர். வடகிழக்கு ஈரானிலும் சிறிய சமுதாயங்களாக இம் மொழியைப் பேசுவோர் காணப்படுகின்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia