அகிலா கிசோர்
அகிலா கிசோர், தமிழ், கன்னடத் திரைப்படங்களில் நடித்துவரும் இந்தியத் திரைப்பட நடிகையாவார். 2013ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான பாதே பாதேவில் நாயகியாக அறிமுகமானார். 2014ஆம் ஆண்டு, கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தில் நடித்ததற்காகப் பெரிதும் பேசப்பட்டார்.[1] நடிப்புகணிப்பொறிப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, அழகுக்கலை நிறுவனங்களில் மாதிரியாகப் பணிபுரியத் துவங்கினார். [2][3] பெமினா மிஸ் இந்தியா பெங்களூர் 2013 விருதை வென்ற பிறகு, பாதே பாதே என்ற கன்னடத் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.[4] அதன்பிறகு இரா. பார்த்திபன் இயக்கத்தில் வெளியான கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தில் நடித்தார்.[5] இத்திரைப்படத்தில் இவருடைய நடிப்பிற்குப் பெரிதும் வரவேற்பு கிடைத்தது. அதனுடைய அடுத்த பாகத்திலும் நடிக்க ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார்.[6] 2015ஆம் ஆண்டு சூன் மாதத்தில் வெளியான சந்தானத்தின், இனிமே இப்படித்தான் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.[7] இவர் நடித்த காலபைரவா, பாய்ஸ், ஆகிய இரண்டு கன்னடத் திரைப்படங்கள் 2015ஆம் ஆண்டு வெளியாக உள்ளன. திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia