அக்கரன்

அக்கரன்
Akkaran
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்அருண் கே பிரசாத்
தயாரிப்புகேகேடி
கதைஅருண் கே பிரசாத்
இசைஅரி எசு ஆர்
நடிப்பு
ஒளிப்பதிவுஎம்.ஏ. ஆனந்த்
படத்தொகுப்புபி. மணிகண்டன்
கலையகம்குன்றம் புரொடக்சன்சு
வெளியீடு3 மே 2024 (2024-05-03)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அக்கரன் (Akkaran) 2024 இல் அருண் கே பிரசாத் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். புதிர் தொடர்பான இக்குற்றத் திரைப்படத்தில் எம். எசு. பாசுகர், கபாலி விசுவந்து ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை கே. கே. டியின் குன்றம் புரொடக்சன்சு தயாரித்தது.[1]

நடிகர்கள்

  • வீரபாண்டியாக எம். எசு. பாசுகர்
  • சிவாவாக கபாலி விசுவந்து
  • தேவியாக வெண்பா
  • பரந்தாமனாக நமோ நாராயணன்
  • அர்சுனாக ஆகாசு பிரேம்குமார்
  • பிரியாவாக பிரியதர்சினி அருணாசலம்

அறிமுகம்

இப்படத்தில் அருண் கே பிரசாத் அறிமுகமானார்.[2][3]

வரவேற்பு

தி தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அபினவ் சுப்பிரமணியன் படத்திற்கு 5இற்கு 2 நட்சத்திரங்கள் என்று மதிப்பிட்டார். "அறிமுக இயக்குநர் அருண் கே பிரசாத் இப்படத்தில் சில விருவிருப்பான வளைவுப் பந்துகளை வீசுகிறார். நிகழ்வுகள் வெளிவருவதையும், இந்த குடும்பத்திற்கு என்ன நடந்தது என்பதன் முழு அளவையும் நீங்கள் பார்க்கும்போது, விசித்திரமான ஒன்று நடக்கிறது" என்று எழுதினார்.[4]

டைம்சு நவ்-இன் மணிகண்டன் கே. ஆர். படத்திற்கு 5-இற்கு 2.5 நட்சத்திரங்களை வழங்கியதுடன், "பார்வையாளர்களை மகிழ்விப்பது என்ற அதன் நோக்கத்தில் நியாயமான வெற்றியை நிர்வகிக்கும் ஒரு கெளரவமான குற்றப் பழிவாங்கும் அதிரடி" என்று கூறினார்.[5] மேலும், தினகரனின் விமர்சகர் ஒருவர் படத்திற்கு கலவையான விமர்சனங்களை அளித்தார்.[6]

மேற்கோள்கள்

  1. "Akkaran". The Times of India. 2024-04-24. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/previews/akkaran/articleshow/109560577.cms. 
  2. "MS Bhaskar turns protagonist with Arun K Prasad's Akkaran". 2023-02-11. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ms-bhaskar-turns-protagonist-with-arun-k-prasads-akkaran/articleshow/97815521.cms. 
  3. M, Narayani (2024-02-26). "Director Arun K Prasad on MS Bhaskar-starrer 'Akkaran'". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-05-02.
  4. "Akkaran Movie Review : A convoluted revenge story falls short". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/akkaran/movie-review/109755983.cms. பார்த்த நாள்: 2024-05-02. 
  5. "Akkaran Review: A Decent Crime Revenge Thriller That Almost Works". Times Now (in ஆங்கிலம்). 2024-05-02. Retrieved 2024-05-02.
  6. Mahaprbhu (2024-05-02). "அக்கரன் – திரைவிமர்சனம்". Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-05-02.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya