எம். எசு. பாசுகர்
முத்துப்பேட்டை சோமையா தேவர் பாசுகர் (M. S. Bhaskar) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், பின்னணிக் குரல் கொடுப்பவரும் ஆவார். இவரது பெற்றோர் சோமையா தேவர்–சத்யபாமா ஆவர். இவரது தந்தை முத்துப்பேட்டையில் பெரும் நிலக்கிழார். இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். முதலாமவர் ஹேமாமாலினி சென்னையில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் இரண்டாமவர் தாரா வட இந்தியத் திரையில் மும்பையில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் உள்ளனர். இவருக்கு கிரிதரன் என்ற தம்பி ஒருவர் உள்ளார். 1987 ஆம் ஆண்டு கதாசிரியரும், நடிகருமான விசுவின் திருமதி ஒரு வெகுமதி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.[1][2] இவரது தந்தை முத்துப்பேட்டையைச் சேர்ந்தவராக இருந்தாலும், இவர் பிறந்து வளர்ந்தது நாகப்பட்டினம். நாகப்பட்டினத்திலும் சென்னையிலும் பள்ளிப் படிப்பை முடித்த இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தார். இவர் தொலைக்காட்சித் தொடர்களான சின்னப் பாப்பா பெரியப் பாப்பா, செல்வி, திரைப்படங்கள் சிவகாசி, மொழி ஆகியவற்றால் பரவலாக அறியப்பட்டார். இவர் மொழி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது பெற்றார்.[3] இவர் 75 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் பற்பசை நிறுவனத்தில் விற்பனையாளராகவும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் முகவராகவும் பணி செய்துள்ளார். காமராஜ் படத்தில் காமராஜ் பாத்திரத்துக்கும் சேது படத்தில் நாயர் இராமன் பாத்திரத்துக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். நடிகராக
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia