அக்சரா ஹாசன்
அக்சரா ஹாசன் (பி. 12 அக்டோபர் 1991) திரைப்பட நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராவார். இவர் பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசனின் 2வது மகளாவார். நடிகை சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். இவர் ஷமிதாப், விவேகம், கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.[1] சொந்த வாழ்க்கைஅக்சரா ஹாசன் அவரது தாயாருடன் மும்பையில் வசித்து வருகிறார்.[2] இளமையிலேயே கடவுள் நம்பிக்கையை இழந்தார். தற்போது புத்த மத கோட்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார். சென்னையில் உள்ள ஹாட் ஷூ டான்ஸ் கம்பெனியில்தான் அக்சரா பால் ரூம் டான்ஸ் கற்றுக் கொண்டுள்ளார். அக்சரா, இங்கிலாந்தின் பால் ரூம் தொழில்முறை நடனக் கலைஞர்கள் பயிற்சி அமைப்பு நடத்திய முதலாவது பரீட்சை தேறியுள்ளார். ஆரம்பகால வாழ்க்கைஅக்சரா ஹாசன், அக்டோபர் 12, 1991 அன்று சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன், சரிகா தம்பதிக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார்.[3][4] இவரது தந்தை தமிழ் வம்சாவளியையும், அவரது தாயார் மராத்தி மற்றும் ராஜ்புட் வம்சாவளியையும் சேர்ந்தவர்களாவர்.[5] சூர்யாவுடன் ஏழாம் அறிவு திரைப்படத்திலும், தனுஷ் உடன் 3 திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்த நடிகை சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். அக்சரா ஹாசன் தனது பள்ளிப்படிப்பை சென்னையிலும், பின்னர் பெங்களூர் இண்டஸ் சர்வதேச பள்ளியிலும் பயின்றவராவார்.[6] பிறப்பும் ,இளமை பருவமும்அக்சரா ஹாசன் தென்னிந்திய திரைப்பட கதாநாயகன் கமல்ஹாசனுக்கும், வட இந்திய புகழ் பெற்ற நடிகை சரிகாவிற்கும் இரண்டாவது மகளாக 1991 அக்டோபர் 12 இல் பிறந்தார். அக்சரா சென்னையில் அபாகஸ் மாண்டிசோரி பள்ளியில் படித்தார். பின்னர் லேடி ஆண்டாள் ஸ்கூலில் படித்தார். இவ்வமையம் இவருடைய தாயும், தந்தையும் பிரிய நேரிட்டதால் இவர் தன் அன்னையுடன் மும்பையில் வசிக்க நேரிட்டது. மற்றொரு உடன் பிறப்பு சகோதரியான ஸ்ருதி ஹாசன் சென்னையிலேயே தந்தையுடன் தங்கிவிட்டார். திரைப்பட வாழ்க்கை2015 ஆம் ஆண்டில் ஷமிதாப் என்ற இந்தி படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் உடன் நடித்தார். இதற்கு முன்னதாக மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்துவிட்டார்.[7][8][9] பின்னர் தமிழில் அஜித்குமார் உடன் விவேகம் படத்தில் நடித்தார். தன்னுடைய தந்தை இயக்கி வந்த சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குநர் ஆக பணிபுரிந்தார். ஆனால் அப்படம் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 2019 ஆண்டில் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். அதே ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சொந்தமான ஜீ5 என்ற இணைய செயலியில் Fingertip என்ற இணையதள நாடக தொடரிலும் நடித்தார். பங்காற்றிய திரைப்படங்கள்
சான்றுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia