தனுஷ் (நடிகர்)
தனுஷ் (Dhanush, பிறப்பு: 28 சூலை 1983) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் திருடா திருடி (2003), சுள்ளான் (2004), புதுப்பேட்டை (2006), பொல்லாதவன் (2007), ஆடுகளம் (2011), 3 (2012), வேலையில்லா பட்டதாரி (2014), மாரி (2015), அசுரன் (2019) போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.[6] ராஞ்சனா (2013) போன்ற இந்தித் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் 40க்கும் மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 14 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள், 4 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் போன்ற விருதுகளை வென்றுள்ளார்.[7] இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் தனுஷ் ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[8] தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலமாக படங்களைத் தயாரிக்கிறார். இவருக்கு சிறந்த நடிகர் விருது மட்டுமல்லாமல் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த விசாரனை படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. ஆரம்பகால வாழ்க்கைதனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின்[9] இளைய சகோதரரும் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார்.[10] இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். திரைப்பட வாழ்க்கை2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். வணிக ரீதியில் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி[11] (2003) மற்றும் தேவதையைக் கண்டேன் (2005) போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.[12] அதைத் தொடர்ந்து சுள்ளான் (2004), புதுப்பேட்டை (2006), திருவிளையாடல் ஆரம்பம்[13][14] (2006), பொல்லாதவன் (2007) போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். 2011 ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம்[15] என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது பெற்றார்.[16] அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் மயக்கம் என்ன என்ற திரைப்படமும் 2012 ஆம் ஆண்டு 3 என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். 3 என்ற திரைப்படத்தில் இவருடன் நடிகை சுருதி ஹாசன் என்பவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பரவலான கவனம் பெற்றார். 2013 ஆம் ஆண்டு ராஞ்சனா என்ற இந்தி மொழி திரைப்படம் மூலம் பாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை ஆனந்த் எல். ராய் என்பவர் இயக்க ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இவருடன் சோனம் கபூர் நடித்துள்ளார். அம்பிகாபதி என்ற பெயரில் தமிழில் வெளியானது. இவரது 25 வது திரைப்படமாக வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியாகி வணிக ரீதியில் வெற்றி பெற்றது.[17][18] இந்தத் திரைப்படத்தை வேல்ராஜ் என்பவர் இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து ஷமிதாப் என்ற இந்தி திரைப்படத்திலும் கே. வி. ஆனந்த் இயக்கிய அனேகன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு இவர் நடித்த மாரி, தங்க மகன்[19] போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றியைக் கொடுத்தது. 2016 ஆம் ஆண்டு கொடி என்ற பரபரப்பூட்டும் அரசியல் திரைப்படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2 (2017), வட சென்னை (2018), மாரி 2 (2018) போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் என்ற திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்குள் 100 கோடி ரூபாய் வசூலித்ததன் மூலம் 100 கோடி வசூலித்த திரைப்படப் பட்டியலில் இடம்பெற்றது.[20] இசைஇவர் முதல் முதலில் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதை தொடர்ந்து புதுப்பேட்டை என்ற திரைப்படத்திலும் பாடல் பாடியுள்ளார். இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டது.[21] பாடல்கள்
திரைப்படங்கள்
தயாரிப்பாளராக
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia