அக்ரோகார்பஸ் ஃபெராக்சினிபோலியஸ்
அக்ரோகார்பஸ் ஃபெராக்சினிபோலியஸ் (Acrocarpus fraxinifolius) என்ற தாவரவியல் பெயருடைய இத்தாவரத்தை, தமிழில் பல பெயர்களைக் கொண்டு அழைக்கின்றனர். அவற்றுள் கழிஞ்சி, குரங்கடி, மல்லம் கொன்னை, மலைக்கொனி, மலிகொனி, நெல்றை,[2]. மலைக்கொன்றை போன்றவை குறிப்பிடதக்கப் பெயர்கள் ஆகும். தமிழ்நாட்டிலுள்ள மூலிகைத்தாவரங்களில் இதுவும் ஒன்றாகும். வகைப்பாடுஇது பூக்கும் தாவரம் என்பதால், பூக்குந்தாவரத்தின் பரிணாமத்தோற்ற நெறிக்குழுமம் III [கு 1] என்ற வகைப்பாட்டியல் முறைமை, உலகெங்குமுள்ள தாவரவியல் அறிஞர்களால் பின்பற்றப்படுகிறது. அதன்படி, இது 'பபேசியே' தாவரக்குடும்பத்தின் , துணைக்குடும்பங்களில் ஒன்றான 'சீசல்பினியோடியே' [கு 2] என்பதன் கீழ் அமைகிறது.[3] வாழிடம்இக்குறிப்பிட்ட தாவரயினம், உலக பாரம்பரிய களங்களில் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலைகளின் தெற்குப்பகுதிகளிலும், நடு சாயாத்திரி [கு 3] பகுதியிலும், இன்டோமலேசியப் பகுதிகளிலும் குறிப்பாகக் காணப்படுகிறது. காடுகளின் மேல்மட்ட அடுக்கை விட, மிக உயர்ந்த மரமாக [கு 4] , கடல் மட்டத்திலிருந்து 1300 மீ. உயரம் வரையுள்ள, பசுமைமாறாக் காடுகளிலும், அரிதாக உயரம் குறைந்த மழை அதிகம் பெறும் இலையுதிர் காடுகளிலும் காணப்படுகிறது. வளரியல்புகள்தோற்றம்இம்மரமானது 40 மீட்டர் வரை, வளரும் தன்மையை கொண்டதாக இருக்கிறது. அதற்கேற்றவாறு இதன் வேர்கள், தாங்கு வேர்களாக [கு 5] உள்ளன. இலை அமைவுகள்![]() ( bipinnate;evenpinnate = paripinnate ) இம்மரத்தின் இலைகள் பின்வரும் இயல்புகளைப் பெற்றிருக்கின்றன.
இனப்பெருக்க அமைவுகள்இதன் மலர்கள் பச்சை நிறமாக இருக்கின்றன. மலரின் நடுவில் உள்ள மகரந்த பைகள் சிவப்பு நிறமாக இருக்கின்றன. ஒவ்வொரு மலரின் காம்பும் சிறியதாக இருக்கிறது. மலர்கள் தனி மலர்களாக இல்லாமல், மஞ்சரி அமைப்பில் இருக்கின்றன. இம்மஞ்சரியானது, கொத்தான இலைக்கோணங்களில் காணப்படும், நுனிவளர் பூந்துணர் [கு 14] வகையினைச் சேர்ந்ததாகும். இதன் கனி, இருபுற வெடிகனியாக, [கு 15] நாக்கு வடிவத்துடன்[கு 16] இருக்கும். ஒரு வெடிகனியினுள் 5-10 எண்ணிக்கையிலான விதைகள் இருக்கும். ஒவ்வொரு விதையும், தோற்றத்தில் தலைகீழ் முட்டை வடிவமாகவும்,[கு 17] ஒவ்வொரு விதையும் வேறுபட்டும், கெட்டியாகவும், தட்டையாகவும், சமமற்றும், இறகுகளோடும்[கு 18] இருக்கும். ஊடகங்கள்
குறிப்புகள்
மேற்கோள்கள்
துணைநூல்கள்
இப்பக்கத்தையும் காணவும்
புற இணைப்புகள்![]() விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
|
Portal di Ensiklopedia Dunia