குடும்பம் (உயிரியல்)![]() உயிரியல் வகைப்பாட்டில் குடும்பம் (Family) என்பது, ஒரு வகைப்பாட்டுப் படிநிலை ஆகும். வரிசை, பேரினம் ஆகிய பகுப்புகளுக்கு நடுவில் அமைந்துள்ள இப்பகுப்பு ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டது ஆகும். பிரான்சு நாட்டுத் தாவரவியலாளரான பியரே மக்னோல் என்பவர் 1689 ஆம் ஆண்டு தான் எழுதிய நூலில் தான் அட்டவணைப்படுத்திய 76 தாவரக் குழுக்கள் ஒவ்வொன்றையும் familiae (குடும்பம்) என்று குறிப்பிட்டார். வகைப்பாட்டுப் படிநிலைகள் பற்றிய கருத்து தொடக்க நிலையிலேயே இருந்தது. மக்னோல், தான் வகைப்படுத்திய குடும்பங்களில் சிலவற்றை ஒன்று சேர்த்து genera என்னும் படி நிலைகளை உருவாக்கலாம் எனக் கருதினார். இது இக்காலத்துப் பேரினம் (genera) என்னும் படிநிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. தற்காலத்துக் "குடும்பம்" என்னும் படிநிலையை ஒத்த பயன்பாடு முதன் முதலாக ஏர்ன்ட் ஹேக்கல் (Ernst Haeckel) என்பவர் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எழுதிய நூல்களில் காணப்படுகின்றன. பெயரிடல் மரபுகுடும்பங்களின் பெயரிடுதலில் பின்வரும் பின்னொட்டுகளைப் பயன்படுத்த பல்வேறு சர்வதேச அமைப்புகள் குறியிடப்படுகிறது:
பயன்கள்குடும்பங்கள் பரிணாம, பழங்காலவியல் மற்றும் மரபணு ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். ஏனெனில் இவை சிற்றினங்கள் மற்றும் இனங்கள் போன்ற வகைப்பாட்டியல் கீழ் நிலைகளை விட சற்று நிலையானவை.[4][5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia