அசன் நசுரல்லா
அசன் நசுரல்லா (Hassan Nasrallah, 31 ஆகத்து 1960 - 27 செப்டம்பர் 2024), லெபனான் நாட்டு சியா இசுலாமிய மத குருவும், லெபனான் அரசியல் பிரிவான ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைமைச் செயலாளரும் ஆவார். இவர் 27 செப்டம்பர் 2024 அன்று இஸ்ரேல் போர் விமானங்களின் குண்டு வீச்சால், பெய்ரூத் புறநகர் பகுதியான தகியாவில் உள்ள ஹிஸ்புல்லா தலைமைச் செயலகத்தில் வைத்து கொல்லப்பட்டார். 28 செப்டம்பர் 2024 ஹிஸ்புல்லா தலைமைக்கு அசீம் சபி அல்-தீன் தேர்வு செய்யப்பட்டார். இயக்கம்அசன் நசுரல்லா 1960ஆம் ஆண்டில் பெய்ரூத்தின் கிழக்கு புறநகரான போர்ச் அமீதில் அப்துல் கரீமுக்கு மகனாக பிறந்தவர். காய்கறி வியாபாரம் செய்த அப்துல் கரீமுக்கு ஒன்பது குழந்தைகள் அதில் நசுரல்லா மூத்தவர்[1]. டயர் நகரத்தில் கல்வி முடித்தவர். லெபனான் உள் நாட்டு போரில் இருந்த 1975 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சியா குடிப்படையான அமல் இயக்கத்தில் இணைந்தார். சிறிது காலத்திலேயே ஈராக்கிய நகரான நஞ்சாபில் சியா மெய்யியல் கல்லூரியில் படிக்க சென்றார் [1] இசுரேல் லெபானை ஆக்கிரமித்த சிறிது காலத்தில் அமல் இயக்கம் 1982இல் பிளவுபடும் முன் அதில் இணைந்தார். பிளவுபட்ட அமல் இயக்கம் இசுலாமிய அமல் என அறியப்பட்டது. இது பெக்கா பள்ளத்தாக்கில் இருந்த ஈரானிய புரட்சிப்படையிடம் இருந்து கணிசமான ஆயுதங்களையும் ஆள் ஆதரைவையும் பெற்றது. சியா குடிப்படைகளில் இதுவே சக்திமிக்கதாக இருந்தது. இதுவே பின்பு கெசபுல்லா என்று அழைக்கப்பட்டது. கெசபுல்லாவில் போர்வீரனாக இருந்த பின் பால்பெக் நகரத்தின் கட்டளைத் தளபதியாக உயர்ந்தார். பின்பு பெக்கா பகுதி முழுமைக்கும் அதன் பின் பெய்ரூத்துக்கும் கட்டளைத் தளபதி ஆனார். [1] ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் அப்பாஸ்-அல்-முசாவி 1992ல் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட போது[2], அசன் நசுரல்லா அதன் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார். மரணம்2023 இஸ்ரேல்-ஹமாஸ் போரின் தொடர்ச்சியாக, செப்டம்பர் 2024ல் லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா-இஸ்ரேல் இடையே போர் துவங்கியது. இப்போரின் போது, ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் அசன் நசுரல்லா 27 செப்டம்பர் 2024 அன்று இஸ்ரேலிய வான் படைகளின் குண்டு வீச்சால் கொல்லப்பட்டார்.[3] தரைக்கு கீழே 60 அடி ஆழ சுரங்கத்தில் இருந்த இவரை சுரங்க தகர்ப்பு குண்டை வீசி இசுரேல் கொன்றுள்ளது. இத்தாக்குதலில் 85 சுரங்க தகர்ப்பு குண்டுகளுடன் 80 டன் வெடிகள் பயன்படுத்தப்பட்டன. இசுரேல் பயன்படுத்திய சுரங்க தகர்ப்பு குண்டு 95 அடி ஆழத்தில் பைஞ்சுதை (கான்கிரிட்) சுவர் அமைத்து இருந்தாலும் தகர்க்கக்கூடியது[4] அமெரிக்கா இவரை கொல்ல பயன்படுத்தப்பட்ட 900 கிலோ (2000 பவுண்டு) எடையுடைய பிஎல்யு-109 குண்டை கொடுத்ததாக கருதப்படுகிறது.[5][6] இறுதிச் சடங்குலெபனானில் இஸ்ரேலியப் படைகள் போர் நிறுத்தம் மற்றும் பகுதியளவு திரும்பப் பெறப்பட்ட பிறகு, அசன் நசுரல்லா மற்றும் அசீம் சபி அல்-தீன் ஆகியவர்களின் இறுதிச் சடங்குகள் 23 பிப்ரவரி 2025 அன்று லெபனான் தலைநகர் பெய்ரூத்த்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலட்சக்கணக்காவர்கள் வரை கலந்து கொண்டனர்.[7][8][9] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia