நயீம் காசிம்
நயீம் காசிம் (Naim Qassem) (பிறப்பு:1953), லெபனான் நாட்டின் சியா இசுலாம் மத குருவும்; ஹிஸ்புல்லா அமைப்பின் துணை தலைமைப் பொதுச்செயலாளராக 1991 முதல் 28 அக்டோபர் 2024 முடிய பணியாற்றினார்.[1][2][3]ஹிஸ்புல்லாவின் தலைமைப் பொதுச் செயலாளராக பணியாற்றிய அசன் நசுரல்லா இஸ்ரேலின் வான்படைத் தாக்குதலில் 27 செப்டம்பர் 2024 அன்று மறைந்த பிறகு, சூராக் குழு 29 அக்டோபர் 2024 அன்று நயீம் காசீமை ஹிஸ்புல்லாவின் தலைமைப் பொதுச்செயலளராக தேர்வு செய்தது.[4][5][6][7] இளமை & கல்விதெற்கு லெபனான் பகுதியில் உள்ள நபாத்தியா ஆளுநரகத்தில் அமைந்த கபார் பிலா எனும் ஊரில் 1953ல் சியா இசுலாம் குடும்பத்தில் நயீம் காசிம் பிறந்தார்.[8][9]இவர் இசுலாமிய மார்க்கக் கல்வியையும்; வேதியியலில் இளநிலை பட்ட படிப்பை லெபனான் பல்கலைக்கழகத்தில் படித்தார்.[8] தொழில்1970களில் லெபனான் இசுலாமிய மாணவர் அமைப்பை நிறுவியர்களில் நயீம் காசிமும் ஒருவராவர்.[9]மூசா அல்-சதர் நிறுவிய அமல் இயக்கத்தில் சேர்ந்தார்.[8][2] 1974 முதல் 1988 முடிய இசுலாமிய கல்வி சங்கத்தின் தலைமைப் பொறுப்பு வகித்தார்.[9] ஹிஸ்புல்லா அமைப்பை நிறுவுவதில் காசிம் பங்கு வகித்தார். காசிம் 1991ல் ஹிஸ்புல்லா அமைப்பின் துணை தலைமைப் பொதுச்செயலர் ஆனார்.[8][10] படைப்புகள்நயீம் காசிம் எழுதிய நூல்கள்:
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia