அசய் பாட்
அசய் வி. பாட்[3] இந்திய அமெரிக்க கணினி நிபுணர். இவர் யுஎசுபி என்னும் அகிலத் தொடர் பாட்டை, ஏஜிபி, பிசிஐ எக்சுப்ரசு உள்ளிட்ட அதிநவீன கருவிகளை உருவாக்க உதவிய நிபுணராவார், அதுமட்டுமின்றி மேடை-ஆற்றல் மேலாண்மை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டவர். இவருடைய கண்டுபிடிப்பான அகிலத் தொடர் பாட்டை விளம்பரத்தில் இவரைப் போன்று சுனில் நார்க்கர் நடித்திருந்தார்.[4] இன்டெலும் அசய் பாட்டும்1990-ம் ஆண்டு இன்டெல் நிறுவனத்தில் இணைந்த அசய், 30க்கும் மேற்பட்ட அமெரிக்க காப்புரிமைகளை வைத்திருக்கிறார். 1998, 2003 மற்றும் 2004 ஆண்டுகளில் அசய் பல்வேறு அமெரிக்க மற்றும் ஆசிய முதன்மை பல்கலைக்கழகங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். அக்டோபர் 9, 2009, தி டுனைட் சோ வித் கேனன் ஓ'ப்ரைன் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் இவரைப் பற்றிய கருத்துகள் ஒளிபரப்பப்பட்டது.[5] பாராட்டுகளும் விருதுகளும்
குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia