அசிட்டோனைடு![]() கரிம வேதியியலில் அசிட்டோனைடு ( acetonide) என்பது ஒரு வேதி வினைக்குழு ஆகும். இவ்வினைக்குழுவானது டையாலுடன் கூடிய அசிட்டோனின் கீட்டாலால் ஆக்கப்பட்டுள்ளது. சமபுரொப்பைலிடின் கீட்டால் என்பது வேதிமுறைப்படியான சரியான பெயராக இருக்கும் என்று கருதப்படுகிறது. 1,2 மற்றும் 1,3 டையால்களுக்குரிய பொதுவான பாதுகாப்புக் குழுவாக இக்குழு இருக்கிறது[1] . நீர்த்த அமிலக் கரைசலால் நீராற்பகுப்பு செய்து இப்பாதுகாப்புக் குழுவை டையாலில் இருந்து நீக்க முடியும். புரணித்திரலனைய அசிட்டோணைடுகள் தோல் மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அதீதக் கொழுப்பு விருப்பப் பண்பினால் இவை தோலில் நன்கு ஊடுருவும் எனக் கருதப்படுகிறது[2].
ஒரு பாதுகாப்புக் குழுவாக அசிட்டோனைடு பயன்படுகிறது என்பதற்கு உதாரணமாக, சிக்கலான கரிமத் தொகுப்புவினையான நிக்காலவ் டாக்சால் மொத்தத் தொகுப்பு என்ற வினையைக் கூறலாம். சர்க்கரை மற்றும் சர்க்கரை ஆல்ககால்களுக்கு இச்சேர்மம் சோல்கீட்டால் வடிவில் பொதுவானதொரு பாதுகாப்புக்குழுவாக இருக்கிறது. மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia