அசிரிய இனப்படுகொலையின் போது இறந்தவர்களின் எண்ணிக்கை பல்வேறாக மதிப்பிடப்பட்டுள்ளது. லௌசான்னி உடன்படிக்கையின் படி, 2.75 இலட்சம் முதல் 3 இலட்சம் வரை அசிரிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக்கணக்கிடப்படுகிறது.[7]வடமேற்கு ஈரான் பகுதியில் மட்டும் 47,000 சிரியாக் கிறித்தவ அசிரியர்கள் கொல்லப்பட்டனர்.
2007-இல் பன்னாட்டு இனப்படுகொலை சங்கத்தின் அறிஞர்களின் மதிப்பீட்டின் படி, 1914 முதல் 1923 முடிய ஒட்டமான் பேரரசின் படைகள் கிறித்துவச் சமயச் சிறுபான்மை இனத்தவர்களான அனதோலிய கிரேக்க இனப்படுகொலை, ஆர்மீனிய இனப்படுகொலை மற்றும் அசிரிய இனப்படுகொலைகள் செய்தனர் என முடிவு செய்தனர்.[8][9]
2007-2008-இல் பன்னாட்டு இனப்படுகொலை கண்காணிப்புத் தலைவர் கிரிகோரி ஸ்டான்டோனின் கூறுகையில், அனதோலியாவின் கிரேக்க, ஆர்மீனிய இனப்படுகொலை மற்றும் அசிரிய இனப்படுகொலைகளை 90 ஆண்டுகளாக தற்கால துருக்கி அரசு (முன்னாள் உதுமானியப் பேரரசு) தொடர்ந்து மறுத்து வருவதுடன், இதுவரை இனப்படுகொலைகளுக்கு பொறுப்பு ஏற்று மன்னிப்பும் கோரவில்லை.[10]
1840-களில் குவாஜர் பேரரசில் (தற்கால வடக்கு ஈரான்) வாழ்ந்த அசிரிய மற்றும் ஆர்மீனிய மக்களை வலுக்கட்டாயமாக இசுலாமிய சமயத்திற்கு மாற்றப்பட்டனர். மதம் மாற விரும்பாதவர்களை இனப்படுகொலை செய்தனர்.[5][4]
↑ 4.04.14.24.3Travis, Hannibal. Genocide in the Middle East: The Ottoman Empire, Iraq, and Sudan. Durham, NC: Carolina Academic Press, 2010, 2007, pp. 237–77, 293–294.
↑ 5.05.1Khosoreva, Anahit. "The Assyrian Genocide in the Ottoman Empire and Adjacent Territories" in The Armenian Genocide: Cultural and Ethical Legacies. Ed. Richard G. Hovannisian. New Brunswick, NJ: Transaction Publishers, 2007, pp. 267–274. பன்னாட்டுத் தரப்புத்தக எண்1-4128-0619-4.
↑Schaller, Dominik J. and Zimmerer, Jürgen (2008) "Late Ottoman Genocides: The Dissolution of the Ottoman Empire and Young Turkish population and extermination policies." Journal of Genocide Research, 10:1, pp. 7–14.
↑Gaunt, David. Massacres, Resistance, Protectors: Muslim-Christian Relations in Eastern Anatolia during World War I. Piscataway, N.J.: Gorgias Press, 2006, p. 433.
"Death's End, 1915: The General Massacres of Christians in Diarbekir" in Armenian Tigranakert/Diarbekir and Edessa/Urfa. Ed. Richard G. Hovannisian. UCLA Armenian History and Culture Series: Historic Armenian Cities and Provinces, 6. Costa Mesa, CA: Mazda Publishers, 2006
Claire Weibel Yacoub, "Le rêve brisé des Assyro-Chaldéens", Editions du Cerf, Paris, 2011; "Surma l'Assyro-Chaldéenne (1883–1975), Dans la tourmente de Mésopotamie", Editions l'Harmattan, Paris, 2007, translated into Arabic.
Joseph Yacoub (1986) The Assyrian question, Alpha graphic, Chicago, republished with additional elements in 2003, translated into Arabic and Turkish.
Joseph Yacoub (2016), Year of the Sword, The Assyrian christian Genocide, a History, Hurst Publisher, London, August 2016.
வெளி இணைப்புகள்
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: அசிரிய இனப்படுகொலை