அசீஸ் அன்சாரி
அசீஸ் அன்சாரி (Aziz Ansari, பிறப்பு: பெப்ரவரி 23, 1983) ஒரு அமெரிக்கத் தமிழர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். எம் டிவியில் "யூமன் ஜையன்ட்" (Human Giant) என்ற நகைச்சுவை காட்சியில் நடித்திருக்கிறார். என்பிசி (2009–2015) பூங்கா மற்றும் பொழுதுபோக்கு (Parks and Recreation) தொடர்களில் டோம் ஹாவர்போர்டு என்ற பாத்திரத்தில் நடித்தமைக்காக அறியப்படுகிறார். மேலும் 2015 இல் நெட்பிலிகஸ் (Netflix) இல் வந்த Master of None என்ற தொடரை உருவாக்கி மற்றும் அதில் நடித்தற்காக 2017 ஆம் ஆண்டிற்கான தொலைக்காட்சி இசை மற்றும் நகைச்சுவை பகுப்பில் - சிறந்த நடிகருக்கான தங்க பூமி விருதைப் பெற்றார். சிறந்த தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் என்ற விருதைப் பெறும் முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமையும்,[1] குளோடன் குளோப் விருதைப் பெற்ற முதல் தமிழ் மரபு வழி வந்த நடிகர்[1][2] என்ற புகழையும் பெற்றார்.[3][4][5][6] ஆரம்ப வாழ்க்கைஅசீஸ் அன்சாரி கொலம்பியா, தெற்கு கரோலினாவில் பிறந்தார். இவர் தமிழ்நாடு,இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் இருந்து வந்தவர்.[7][8][9] இவரது பெற்றோர் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து பின் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தனர். அசீஸ் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர். தெற்கு கரோலினா கவர்னர் கலை மற்றும் அறிவியல் பள்ளியில் படித்தார். பின் நியூயார்க் பல்கலைகழகத்தின் ஸ்டெர்ன் மேலாண்மை பள்ளியில் சேர்ந்து படித்து பட்டம் பெற்றார். இவரது தாய் பாத்திமா மருத்துவ அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் மற்றும் இவரது தந்தை செளகத் ஒரு குடல் சம்பந்தமான சிறப்பு மருத்துவர். இவரது தாய் மற்றும் தந்தை இருவரும் Master of None முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறார்கள். வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia